பாரம்பரிய வீட்டின் அம்சங்கள்
அசர வைக்கும் தமிழர்களின் வீடு கட்டும் முறை என்று பல ஆராய்ச்சிகள் நிரூபித்து வந்தவாரே உள்ளது. தற்காலத்திலும் இது போன்ற அம்சங்களுடன் கட்டப்படும் வீடுகள் தனித்தன்மையுடனும் அமைதியுடனும் தோற்றமளிக்கிறது. பல வருடங்களில் பல வழிமுறைகள் ,பாரம்பரியங்கள்,கலைநுட்பங்கள் சில மறைந்தும் சில மாறுதல் பெற்றும் நம்மிடம் வந்து சேரும்பொழுது. இருபத்தையாவது பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் தான் நமக்கு வரவேண்டும். இதுபோன்ற வீடுகட்டும் முறை தற்போது குறைந்துவருவதால் நம்முடைய நலனில் பாதிப்பும் வருகின்றன. பழங்காலத்து வீடுகள் கூட பல ரகசியங்களையும்,நன்மைகளையும் உள்ளடக்கியே கட்டப்படுகின்றன. மனம் சார்ந்தும்,சுற்றுசூழல் சார்ந்தும் வீட்டில் அமைதியையும் , நிம்மதியையும் தருவதாக வீட்டின் அமைப்புகள் இருந்துள்ளது. இது போன்ற சுற்றம் அமைப்பு உள்ள வீடுகளை இன்று கட்டுவதற்கு கோடி பணம் ஈடாகாது. நான் கண்ட சில அம்சங்களை ஆர்வத்துடன் இங்கே பகிரவுள்ளேன் . உணவு சமைக்கும் இடம் பொதுவாக உணவுகள் விறகுகளை கொண்டு அப்போது சமைக்கப்பட்டதால் சமையலறை உள்ளே ...