இடுகைகள்

வாழ்க்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாரம்பரிய வீட்டின் அம்சங்கள்

படம்
அசர வைக்கும் தமிழர்களின் வீடு கட்டும் முறை  என்று பல ஆராய்ச்சிகள் நிரூபித்து வந்தவாரே உள்ளது. தற்காலத்திலும் இது போன்ற அம்சங்களுடன் கட்டப்படும் வீடுகள்  தனித்தன்மையுடனும் அமைதியுடனும் தோற்றமளிக்கிறது. பல வருடங்களில் பல வழிமுறைகள் ,பாரம்பரியங்கள்,கலைநுட்பங்கள்  சில மறைந்தும் சில மாறுதல் பெற்றும் நம்மிடம் வந்து சேரும்பொழுது. இருபத்தையாவது பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் தான் நமக்கு வரவேண்டும். இதுபோன்ற வீடுகட்டும் முறை தற்போது குறைந்துவருவதால்  நம்முடைய நலனில் பாதிப்பும் வருகின்றன.  பழங்காலத்து வீடுகள் கூட பல ரகசியங்களையும்,நன்மைகளையும்  உள்ளடக்கியே கட்டப்படுகின்றன. மனம் சார்ந்தும்,சுற்றுசூழல் சார்ந்தும் வீட்டில் அமைதியையும் , நிம்மதியையும் தருவதாக வீட்டின் அமைப்புகள் இருந்துள்ளது. இது போன்ற சுற்றம் அமைப்பு உள்ள வீடுகளை  இன்று கட்டுவதற்கு கோடி பணம் ஈடாகாது. நான் கண்ட சில அம்சங்களை ஆர்வத்துடன் இங்கே பகிரவுள்ளேன் . உணவு சமைக்கும் இடம்  பொதுவாக உணவுகள் விறகுகளை கொண்டு அப்போது சமைக்கப்பட்டதால் சமையலறை உள்ளே ...

படிப்பது என்பது போர் அடிக்காமல் இருக்க செய்ய வேண்டியவை

படம்
படிப்பது என்பது போர் அடிக்காமல் இருக்க செய்ய வேண்டியவை  1)   விருப்பமான  பாடத்தை தேர்வு செய்ய வேண்டும் . அந்த பாடத்தை தேர்வு செய்ததற்கான காரணம்  அறிந்திருக்க வேண்டும்.காரணம் தெளிவானதாக இருக்கவேண்டும். 2)    இணையதளம் சிறந்த நண்பன்   உங்களது கேள்விகளை கேட்டு   விடைகளை சலிக்காமல் பெற்றிடுங்கள்.கேள்விகளை விடைகளின் துவக்கம் முதல் கேட்டு ஐயத்தை முற்றிலும் அளித்திடுங்கள். 3)   நீங்கள் தேர்வு செய்த  பாடம் சமுதாயத்திற்கும்  சமூகத்தின் எதிர்காலத்திற்கும் எந்தவகையில் ஒத்துப்போகின்றன  என்பதை அறிந்துகொள்ளுங்கள். அதாவது வேதியியல் பாடம் என்றால் சமூகத்தில் வேதியியலின் முக்கியத்தும் மற்றும் பிற்காலத்து முக்கியத்துவம் இதைப்பற்றி தெளிவாக அறிந்துகொண்டு உங்களுக்கென்று ஒரு பார்வை அல்லது பாதையை அமைத்துக்கொள்ளுங்கள். 4)   தினமும்  படிப்பதை உங்களது ஒரு  பிடித்த வேலையாக வைத்துக்கொள்ளுங்கள். அந்த வேலைக்கு தேவையான கேள்வி,சிலபஸ் நீங்கலாகவே தேடி தயார்செய்துகொள்ளுங்கள்.     உங்க...

அஹிம்சையின் தலைவன்

படம்
மோகன்தாஸ் கரம்சந் காந்தி அவர்கள் இங்கிலாந்து சென்று சட்டபடிப்பை முடிந்த பின்பு இந்திய  தேசம் திரும்பினார்.இந்தியாவில் உள்ள மக்களை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தி ஆட்சிசெய்ய திட்டமிட்டிருந்தனர் .சட்டபடிப்பை முடித்த மகாத்மாவிற்கு இதை கையாளும் விதம் நன்கெ அறிந்தவர். இந்தியர்கள் மீது ஆங்கிலேயர்களால் மனிதநேயமற்ற செயல்கள் அதிகரித்திருந்ததை கண்டறிந்தார்.இந்திய மக்கள்  அணைத்து துறைகளிலும் உழைத்தார்கள், அதற்கான ஊதியத்தில் பாதியில் மீதியே கொடுத்தார்கள். சொந்த நாட்டில் விளைந்த  உணவு  பொருட்களுக்கு, விளைக்கவைத்த இந்தியர்களுக்கு  அதிக வரியை உண்டாக்கினார்கள் .  ஒருபக்கம் பட்டினியில் மக்கள் செத்துக்கிடந்தனர், மறுபக்கம் இந்திய பொருட்கள் வெளிநாடுகளில் விற்கப்பட்டு இருந்தன. இங்கு இந்திய  நிலத்தில் விளைந்த பொருட்களை அவர்கள் நாட்டிற்கும் உலக நாட்டிற்கும் கடத்தினர். உணவுகூட கிடைக்காமல் ஆங்கிலேயர்களால் வறுமையாலும்,மரணத்தின் கைகளில் கிடப்பது போலும்  வாடிக்கிடந்தனர் இந்திய மக்கள் .எதிர்துக்குரல் கொடுக்கும் வீரம் நிறைந்த இந...

எண்ணங்களை கட்டுப்படுத்துவது எப்படி

படம்
            நான் மனநல மருத்துவரும் அல்ல ஆனால் ஆன்மிகத்தின் வழி  இயங்கி வந்த இந்த உலகத்தில் தற்போது தான் இதற்கான தேவை அதிகரித்துள்ளது ஆகவே..அதன் வழியில் இந்த தலைப்பை காணாலாம் ... இந்த பாரதத்தின் ஆன்மிக குருகளால் பாரதத்தில் ஒற்றுமை அமைதி நிலவுகின்றன.இன்னும் சொல்லப்போனால் உலகம் எங்கும் இவர்களின் போதனைகள் பின்பற்றப்படுகின்றன இவர்களை தேடியே கண்டம் விட்டு கண்டம் மக்கள் பயணிக்கின்றனர்.இவர்களது பழைமை வாய்ந்த அறிவுரைகலைக்கு நவீனகாலம் மாற்றிக்கொள்வது உலகிற்கு பயன்தரும். அப்படி ஒரு ஞானி  ஈஷா யோகத்தின்  சத்குரு ஜக்கி வாசுதேவ்  அவர்களின் எண்ணங்களை பற்றிய  ஆலோசனையை  முதலில் உங்களிடம் கொண்டுசேர்ப்பது எனது கடமை.நான் முதல் கூறிய அந்த எண்ணங்களை பற்றியது சத்குரு ஜக்கி வாசுதேவின் கருத்து இது , எண்ணங்கள் என்பது நம்மை அறியாமல் அதாவது நமது விழிப்புணர்வு இல்லாமல் தானாகவே உதயமாகும் ஒன்று.இதில் நல்ல எண்ணங்கள் தோன்றுகிறது தீய எண்ணங்கள் தோன்றுகிறது என்று குற்ற உணர்வு வேண்டாம் .ஏன்னெனில் அவை நம் மனதின் விழிப்புணர்வின்றி தோன்றும்ஒன்று .அதற்கான...

சோதனைகளை கடப்பது எப்படி

சோதனை வாழ்க்கையின் ஆசிரியர் .              நல்ல வழியில் மட்டும் தான் நான்  செல்கிறேன் என்று கூறுபவர்களை அடுத்த நிமிடம் காலம் அவர்களை சோதனைக்குள் உற்படுத்தி விடுகிறதா ?எப்பெர்ப்பட்ட சூழலிலும் நான் நல்லவனாக தான் இருபேன் என்று அவன் உறுதியாக நிற்கும் வரை, அதாவது அவன் கூறிய வார்த்தை உண்மை என்னும் வரை அவனது சோதனைகளமும் கொஞ்சம் கடினமாகவே இருக்கும், சோதனைகளை வென்ற அவனை பின் உலகம் ஏற்று கொள்ளும். நாம் நமது அறியாமையால்  நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளும் சூழ்நிலை  தான் இந்த சோதனை.                 சரி நாம் இப்பொது பொது வாழ்வில் எடுத்துக்கொள்வோம் ,ஒரு இளைஞன் அடுத்த தெருவில் உள்ள ஒரு கடைக்கு தனது வாகனத்தில் தான் செல்வேன் என்கிறான் அவனுக்கு சிலகாலங்களில் அந்த வாகனம் எதோ ஒருகாரணத்தால் இல்லாமல் போய்விடுகிறது .இதுவும் ஒரு சோதனை தான் இப்போதைக்கு                வாகனம் வரும் வரை நான் கடைக்கு  செல்ல போவதில்லை என்று கூறுவதில்லை கடமையை உணர்ந்து பழக்க ...

தற்கொலை எண்ணம் ஏன்? -WHY THE THOUGHT OF SUICIDE

படம்
         தற்கொலை எண்ணம் ஏன் ? article by  ssg துக்கம், மன கவலை,தாங்கமுடியாத பிரச்சனைகள் அனைத்துமே மனதை சோர்வாக்கி, நம்மை ஊரைவிட்டும் ,உடலைவிட்டும், உலகைவிட்டும் விடுதலை அடையவே தூண்டும்.  இந்த உலகில் காரணம் இல்லாமல் நடைபெறுகின்ற விஷயங்களையும் பெரியதாக எடுக்காமல்.அனைத்தையும் சுமந்து கொள்ளாமல்  அதன் வழி செலவிட்டு பொறுமையாக செல்வதே சுலபமான வழியாகும் என்பது ஞானிகளின் கூற்றாகும் .  பிரச்னை யாருக்கும் பாரபச்சம் பார்ப்பதில்லை. உலகில் உள்ள அனைவரும் ஏதோ ஒருதுன்பத்தில் இருந்து மீண்டே வந்துள்ளனர்.  உங்கள் எதிரியும் கூட.என்னிடம் தான் உலகில் பெரிய பிரச்னை உள்ளது என்று எண்ணாதீர்கள். . பிறர் துன்பப்படுவது உங்கள் கண்களுக்கு தெரியவில்லை என்றே அர்த்தம்.விழித்துக்கொள்ளுங்கள் . நம் மனம் நம் கட்டுப்பாட்டில் இல்லையென்றால் அது வேறு ஒரு இடத்திலோ, அல்லது வேறொரு நினைவிலோ, அல்லது ஒரு நபரின் கட்டுப்பாட்டில் உள்ளது தானே அர்த்தம் .இவற்றிலிருந்து விடுபடவே தான்  நோக்கமும் ,பிடிவாதமும். வாழ்க்கையின் அனைத்தும் கேட்டவு...

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது எப்படி -HOW TO DEVELOP THE SELF CONFIDENCE

படம்
        தன்னம்பிக்கை என்பது தீராத ஒரு சக்தியாகும்.அறியாமையால் இதை சிலர் இதை  அறிந்துகொள்ள போவதில்லை.  என் வாழ்க்கையில் எத்தனை பிரச்னை என்றாலும் அதற்கு காரணம்  என் அறியாமை தான் இதுவே உண்மைக்கெல்லாம் உண்மை.  தவறுகளை உணரும் மனிதன்  பாடத்தை கற்கிறான் அவன் கற்ற பாடமே அவனுக்கு தன்னம்பிக்கையை தருகிறது.அஞ்சுவது ,தன்னை தானே வருத்திக்கொள்வது இவை அணைத்து அறியாமை தான்.     தன்னம்பிக்கையை எந்த ஒரு கொடிய கஷ்டமான சூழல்களிலும் மறக்காமல்  இருக்கும் மனிதன் உலகம் போற்றத்தக்க வாழ்வது நிச்சயம் தானே.       சிறுவர்கள் ஒரு முறை ஓட்டப்பந்தயத்தில் தோற்றாலும் மீண்டும் ஆர்வமுடன் போட்டியில் கலந்து கொள்வர். ஓடி ஜெயிக்க வேண்டும் என்ற ஆசையுடன் ஓட  வேண்டும் என்ற ஆர்வம் . அந்த விளையாட்டின் மேல் உள்ள ஆர்வம்  நம்பிக்கயை அதிகரிக்கிறது  அவனை முயற்சிக்க மீண்டும் மீண்டும் தூண்டி வெற்றி வாகையை சூட வைக்கிறது. தன்னம்பிக்கையை எவ்வாறு வளர்த்துக்கொள்வது : 1) தினமும் காலை மாலை உடற்பயிற்சி செய்ய வேண்டும். ...

தனிமையில் இருந்து வெளிவருவது எவ்வாறு -HOW TO FACE AND COME OUT OF LONELINESS

படம்
              " வாழ்க்கையில் அனைவரும் சந்திக்காமல் செல்லாத காலம் தனிமை காலம்."  இந்த காலங்களில் நம்முடைய வளர்ச்சி என்பது நம்மை அறியாது உயர்ந்தே இருக்கிறது.நாம் தனிமையில் இருக்க ஆயிரம் காரணங்கள் நம் மனதில் தோன்றும்.ஆனால்,நிஜத்தில் தனிமை காலம் என்பது முயற்சித்து  தன்னை ஏதேனும் செயலில் அடையாளப்படுத்திக்கொள்ளவும்,தான் யார் என்று தெரிந்துகொள்ளவும் தேவைப்படுகிறது. நிஜத்தை வெளியிருந்து பார்க்கும் ஏக்கமும் மனிதனை தன்னை அறியாமல் இந்த காலத்தில் உட்படுத்திவிடுகின்றன என்பது எனது கருத்தாகும்.         " சிலருக்கு தனிமை வாழ்வில் சுதந்தரத்தை தந்து சென்றிடும் . சிலருக்கு தனிமை ஞானத்தை தந்து செல்லும். சிலரை தனிமை துன்பத்தை தந்து சென்றுவிடும் . சிலருக்கு இது பாடத்தை புகட்டி செல்லும் ." தனிமையை இனிமையாக மாற்றிகொள்ளவது அவசியமாகும்.  நம்மை மேன்படுத்துவத்தற்கும், சமூகத்திற்க்கு நன்மை செய்வதற்கும் பயன்படுத்திக்கொள்வது சிறந்த ஆலோசனையாகும். உங்களது திறமைகளை வளர்த்திக்கொள்ளுங்கள்,சக உறவினர்கள் நல்ல நண்பர்க...

திருக்குறள் காட்டும் வழி வாழ்கை

படம்
            திருக்குறள் தமிழில் மிக பழமைவாய்ந்த நூல்களில் ஒன்று. அனைவரும் அதை படித்து பயன்பெறவே அது மொழிபெயர்க்கப்பட்டது.           அதில் காட்டும் வழிகளை நாம் பின்பற்றுவதால் மேன்மையடைவது நிச்சயம். ஆனால் ஏன் மக்கள் அதை படிப்பதில்லை என்றால். அதில் உள்ள குரல்களை மனப்பாடம் செய்ய வேண்டுமோ என்று எண்ணுகிறார்கள் . திருக்குறள் ஒரு வாழ்வியல் நெறியை காட்டும் நூலாகும் .  அதை நாம் மனப்பாடம் செய்ய அவசியம் இல்லவே இல்லை.  அதை புரிந்து கொள்ளவே தமிழ் அறிஞர்கள் அதை எளிமையாக சிலர் மொழிபெயர்த்துள்ளனர்.               நாம் அனைத்தையும் மனப்பாடம் செய்வதாலேயே அதில் வரும் கருத்துக்களை எடுத்துக்கொள்ளாமல் இருக்கிறோம். திருவள்ளுவர் அனைத்து மக்களுக்கும் எவ்வாறு வாழவேண்டும் என்பதை ஒவ்வொரு அதிகாரங்களில் விளக்கியுள்ளார். பொறாமை, கள்ளாமை, ஒழுக்கம் என மனிதனின் உணர்ச்சிகளால் மற்றும்  அறியாமையால் விளையும் துன்பத்தையும் விளக்கியுள்ளார். உங்கள் வாழ்க்கையில் துன்பம் ஏதேனும் வந்தால். உங்களுக்கு துணை ...

இறைவன் இருக்கிறான்

படம்
நான் இங்கு திருக்குறள் வழி கூறப்பட்ட இறைவாழ்த்தை ஆதாரமாக கூற விரும்புகிரேன் கடவுள் என்னும் கோட்டபாடு  அனைத்து மதங்களிலும் மிக தொன்மையான காலத்தில் இருந்தே நம்பப்படுகின்றது  இது நாடுகளில் இருந்து மனிதர்கள் வேற்று நாட்டிற்கு சென்று பழகுவதற்கு முன்பு இருந்தே இந்த கடவுள் பற்றிய  நம்பிக்கை மனிதன் மனதில் கொண்டிருந்தான் .  ஆதிகால நாகரிகத்தில் இருந்தே தன்னை தானே அறியாமலேயே கடவுள் என்று ஒன்றை சிந்திக்க துவங்கி அதற்கு உருவம் கொடுக்க ஆரம்பித்தவன் மனிதன்.  எவ்வாறு இப்படி ஒரு எண்ணம் தோன்றி இருக்கும் என்று நாம் சிந்தித்து பார்ப்போம் .இதற்கு நாம் பிற்காலத்தில் செல்வதற்கு முன்.தற்போதைய காலத்திலேயே நமது கண் எதிரிலேயே விடைகள் உள்ளன.இதில் இருந்து துவங்குவோம் . நமது அறிவியல் மற்றும் ஆராய்ச்சிகளை பற்றி தெரிந்துகொள்ளும் அதே உணர்வு தான் மனிதனை இவ்வாறு சிந்தித்து பார்க்க செய்திருக்க வேண்டும்.  அதாவது விஞ்ஞானம் மெய்ஞ்ஞானத்தை அடிப்படையாய் கொண்டுதான் செயல்படுகிறது . அதாவது என் கண் எதிரிலே தண்ணீர் உள்ளது அது இருப்பது உண்மை இது மெய்ஞானம் அந்த தண்ணீரை ஆராய்...

ஆசைகள் துறப்பது சிறந்தது

படம்
                     ஆசைகளை துறந்தவர்களை நாம் ஞானி என்று கூறுகிறோம்.                     அவர்கள் ஏன் ஆசைகளை துறந்துவிட்டார்கள் என்றால் மனிதனின்  ஆசைகள் என்றுமே போதும் என்று இருப்பதில்லை.                    ஒன்றின் பின் ஒன்று இருந்துகொன்டே இருக்கிறது .                   ஆசைகளை துறந்து வாழ கற்றுக்கொள்பவர்களுக்கு வாழ்க்கையில் கஷ்டம் என்பது பெரிதளவில் ஏற்படுவதில்லை.                   நாம் எப்படிப்பட்ட ஆசைகளானாலும் சரி அவற்றை அனுபவித்தபின் நம் மனம் போதும் என்று சொல்வதில்லை என்பதை உணர்ந்து கொண்டால் போதும்.                   நாம் நம்முள் இருக்கும் சக்தியை நேசிக்க ஆரம்பிப்போம்.                   நம்முடைய ஆசைகள் நம்மை உயர்த்திக்காட்டுவதாலேயே அதை ந...