வீட்டில் செடிகளை வைப்பது சொர்க்கத்தில் இருக்கும் உணர்வை தரும்
வீட்டில் செடிகளை வைப்பது
சொர்க்கத்தில் இருக்கும்
உணர்வை தரும்
அன்றாடம் நம் வாழ்வில் நிகழும் சம்பவங்களில் இருந்து விலகி சில மணி நேரம் நாம் தனிமையில் இயற்கையுடன் இணைந்து அமைதியை உணர விரும்பிடுவோம். நமது வாழ்க்கையின் ஒரே நோக்கமும் நிம்மதி .ஆனால் நமது புதிய பழக்கவழக்கங்கள் கண்டுபிடிப்புகளால் நாம் சில பழைய பழக்கவழக்கங்களை மறந்து தொலைபேசியில் தொலைதூரம் சென்றுவிட்டோம் .இவற்றால் பாதிப்பு என்ன வென்றால் நமது மனம் ஒருவித அழுத்தத்துடன் என்றும் இருக்கிறது.அது நமது மற்ற பணிகளையும் சீர்குலைகிறது.
![]() |
வீட்டில் செடிகள் மரங்கள் வளர்ப்பது பறவைகளுக்கும் ,ஒரு சில சிறிய விலங்குகளுக்கும் உறைவிடமாகவும் அமைகிறது |
வீட்டில் மனம் வீசும் மலர்கள் ,சுவையால் ஈர்க்கும் கனிகள் ,மனத்தால் நமது மன சுமைகளை குறைக்கும் மூலிகை செடிகள் ,மண்ணையும் ,காற்றையும்,நீரையும் சுத்தம் செய்யும் செடிகள் , 60 பேர் சுவாசிக்கும் அளவிற்கு தேவையான காற்றைத் தரக்கூடிய மரவகைகள் .இவற்றை வீட்டில் வைப்பதால் வீட்டை சுற்றி தென்றல் மற்றும் சுத்தமான காற்று இருக்கும் .வீட்டில் மண் இல்லை ,பானை இல்லை என்று கவலைப்படாமல் ,மாற்று வழிகளில் ஏற்ற செடியை நற்றிடுங்கள்.
பூக்கும் செடிகளை வைத்து அலங்கரித்து பாருங்கள் விரிந்தவனத்திற்கு சென்று வந்த உணர்வுகள் கிடைக்கும் . கூந்தலை மனக்க வைக்கும் மனம் வீசும் மல்லி, மன சோர்வை நீக்கும் மனம் கொண்ட முல்லை,சூரிய ஒளியில் சிவந்த செல்வி செம்பருத்தி ,மனத்தில் சுவையை உணர்த்தும் வண்ண ரோஜா,

சுற்றத்தை ஈர்க்கும் செம்பகம் ,கண்ணிற்கு குளிர்ச்சி ஊடும் நந்தியாவட்டை , அழகில் பவளமல்லி , வாழ்க்கையில் பங்கு கொள்ளும் தூய்மைக்கு எடுத்துக்காட்டு மஞ்சள் , நமது நாட்டின் அரளி போன்றவை ,முற்றத்தில் தக்கசமயத்திற்கு உதவும் துளசி ,பானையில் தாமிரை இவையனைத்தும் வீடிற்கு அழகையும் மனத்தையும் சேர்க்கும்.
கனி தரும் மரங்கள் வாழையடி வாழையாக பராமரிக்க வேண்டும் அள்ளிக்கொடுக்கும் வாழை மரம் , செல்வம் கொண்ட வீட்டில் நிறைந்த மாதுளம் , மருத்துவம் நிறைந்த பப்பாளி, மகத்துவம் கொண்ட கொய்யா, நெல்லிக்காய் போன்ற மரங்கள் இல்லாமல் வீட்டை சுற்றி உள்ள இடம் வெறும் இடம் தான் .
காற்றை சுத்தப்படுத்தும் செடி கோடிகளான கற்றாழை ,மனி பிளான்ட், டெய்சி, வெற்றிலை போன்றவை சிறந்தது .
மற்றும் கீரை வகைகள் வீட்டில் இருப்பது வீட்டில் வளரும் சிறு பிள்ளைகளுக்கு சிறந்தது .
மூலிகை செடிகளான சிறியாநங்கை, தூதுவளை வீட்டில் இருப்பது சிறப்பு வாய்ந்தது.
வீட்டில் வளர்த்தி பாருங்கள் .உங்களது வீடுதான் சொர்க்கம்..
இங்கு கிடைக்கும் தூய காற்றுபோல் எங்கும் இருப்பதுமில்லை . மனதிற்கு அமைதியும் கிட்டும் .
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக