இயற்கைக்கு பெரும் அளவில் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக்கு

பிளாஸ்டிக் நச்சு தன்மை கொண்ட கார்பன் பாலிமர் என்ற வேதியியல் முறையில் செயற்கையாக செய்யப்படும் பொருளாாகும். இது அமெரிக்காவை சேர்ந்த ஒரு விஞ்ஞானியால் கண்டுபிக்கப்பட்டது. இன்று உலகில் பெரும் பொருட்களை எளிதாக பேக்கிங் செய்யவும் அவற்றை சந்தையில் பரிமாறவும் உதவியாக உள்ளது.
பிளாஸ்டிக் மிகவும் மலிவான விலையில் விற்கப்படும் இயற்கையை அளிக்கும் விஷ பொருள் என்றே கூறலாம்.நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களில் சில தரங்கள் வகுக்கப்பட்டு உள்ளன அவை அவற்றின் மக்கும் தன்மையை பொருத்தும்,அதில் சேர்க்கப்படும் நசித்து தன்மை கொண்ட வேதியல் பொருட்களை கொண்டும் பிரிக்கப்படுகின்றன.
இன்று சில வகை பிளாஸ்டிக் பாகுகளை,பொருட்களை தடை செய்து உள்ள சிலநாடுகள் கரணம் அவை மண்ணில் சேர்ந்தபின் எளிதில் மக்குவதும் இல்லை மேலும் அதில் பயன் படுத்தும் பொருட்கள் நஞ்சாக மாறுவதும் தான்.
மாற்றுவழி ஏன் அவசியம்:
பிளாஸ்டிக் பொருட்கள் மனிதர்களால் அனைத்திற்கும் பயன்படுத்த படுகிறது.
உணவு உன்னும் பாத்திரம் துவங்கி நீர் குடுகைகள் வரை பயண்படுத்த படும் பிளாஸ்டிக் பாத்திரங்கள் , வெப்பத்தாலும் , நுண்னுயிர்களாளும் , வேதியியல் பொருள்களாலும் மாறுதல் கொள்ள கூடியவை. இந்த மாறுதல்கல் சேமித்திருக்கும் உணவோடு கலந்து பின் உடலில் சென்றால் புற்றுநோய் மற்றும் கொடிய பக்க விலைவுகளை ஏற்படுத்த கூடிய என்டோகிரைன் டிஸ்ரப்டர்சாக கருத படுகிறது.
![]() |
Image by congerdesign from Pixabay |
முதலில் மண்ணில் அல்லது கடலில் அப்புறப்படுத்தபடுகிறது.
பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் மக்குவதற்கு பலவருடகாலங்கள் எடுத்துக்கொள்கின்றது என்று பல நாடுகளின் குரலாக உள்ளது. மாற்று வழியை நோக்கி ஆராய்ச்சிகள் போட்டியாக நடந்துகொண்டேவருகின்றன.
முக்கியகாரணமாக தற்சமயம் உருவாகியுள்ள பிளாஸ்டிக் பொருள்களை அப்புறப்படுத்த சரியான வழி என்பது இல்லை என்பதே ஆகும். சரியாக அப்புறப்படுத்தாவிடில் பலவழிகளில் நீர் நீளம் காற்று என்று மூன்றுவழங்களையும் மாசுபடுத்தி பின் மனிதர்களுக்கு மட்டுமல்ல இந்த வளங்களை நம்பியிருக்கும் உயிர்களையும் அழிவிற்கு கொண்டுசெல்கிறது. மனிதர்களுக்கு உடலில் கழப்பத்துடன் அணைத்து வழிகளிலும் அதிகளவு உடல் உபாதைகளை தந்துவிடுகின்றன.
மாற்று வழி சரியான வழிதான்:
இயற்கைக்கு பெரும் அளவில் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பதற்கு மாற்று வழியில் பல பொருட்களை போட்டிபோட்டுக்கொண்டு உருவாகியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டும் வருகின்றன.
களிமண், தேவையற்ற மரம்,தேங்காாய் தொொட்டிிகள்,புல்,பருத்தி,சணல் போன்ற பொருட்களை கொண்டு பல பொருட்களை மாற்றியமைக்கலாம்.தேவையற்ற மரம்,புல் போன்ற பொருட்கள் எளிதில் மக்கி மண்ணில் அதிகம் இயற்கை ஊரமாக சேர்கின்றது.அதாவது "செல்லுலோஸ்" என்று கூறப்படும் ஒன்றே மரங்களில் 95 சதவீதம் கட்டமைப்பாக உள்ளது.அவை எளிதில் மக்கக்கூடியவை அதிலிருந்து உருவாகும் "கார்பன்" தாவரங்கள் வளர்வதற்கு தேவையானவையாக உள்ளது.எனவே மீண்டும் நமது மூதாதையர்கள் விட்டு சென்ற கலைகளையும்,பொருட்களை செய்யவும், பயன்படுத்தும் முறையையும் மீண்டும் மீட்டெடுக்க வேண்டியதாக தற்போது உள்ளது.
நீங்களே மாற்றம்
எனவே மாற்றுவழிகளை பற்றி நீங்களும் நிச்சயமாக சிந்திப்பது அவசியம் சிந்திப்பதுடன் அவற்றை சமூகத்தின் நலனுக்கு நீங்கள் பல வழிகளில் கொண்டுசேர்க்கவேண்டும்.உங்களுது யோசனைகளை பகிர்ந்துகொள்ளுங்கள் நடைமுறைக்கு கொண்டுவாருங்கள்.
சில மாற்றுவழிகள்
சிறியளவு பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்
கடைக்கு செல்லும்பொது பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தாமல் இயற்கை கூடைகளை பயன்படுத்துவது.
பிளாஸ்டிக் கலந்த ஆடைகளை, கைப்பைகள் தவிர்ப்பது
பிளாஸ்டிக் மொபைல் போன் கேஸ்களுக்கு பதிலாக மர கேஸ்கள், பிளாஸ்திக் சீப்புகளுக்கு மாற்றாக மர சீப்பு,
பிளாஸ்டிக் நாற்காலிகளுக்கு மாற்றாக மூங்கில் நாற்காலி , கோரை பாய் அல்லது சார்பாய் ,
பிளாஸ்டிக் அழகு சாதான பெட்டிகளுக்கு பதிலாக தேங்காய் தொட்டி,அலுமினியம்,பித்தளை அல்லது களிமண் சார்ந்த சேமிப்பு பாத்திரங்கள் ,
பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக காட்டன் அல்லது சணல் பைகள் ,
பிளாஸ்டிக் தண்ணீர் குடுகைகளுக்கு பதிலாக அலுமினியம் தண்ணீர் பாட்டில்கள்,
பிளாஸ்டிக் அடையாள அட்டை தாங்கிகளுக்கு கார்டு பதிலாக இயற்கை பொருட்களால் செய்யக்கூடிய மாற்று ஹோல்டர்கள்.
பிளாஸ்டிக் நீர் சேமிக்கும் குடங்களுக்கு பதிலாக பித்தளை குடங்கள் ,
உணவு சேமிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் மண் பாத்திரங்கள் பயன்படுத்த வேண்டும் ,
பிளாஸ்டிக் சோப்பு ஸ்டாண்டுகள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் , பழரசம் அல்லது மற்ற உணவுகளை அருந்த பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஸ்டராகள் , தட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் ஸ்பூன்கள் பயன்பாட்டை குறைக்கவேண்டும்,
பிளாஸ்டிக் குப்பை கூடைக்கு பதிலாக மர கூடைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக