பிளாஸ்டிக் பொருட்களை உண்ணும் பாக்டீரியா எங்கிருந்து வந்தது
பிளாஸ்டிக் பொருட்கள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்து சுமார் எழுபது ஆண்டுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.அப்படி இருக்கும் பொழுது சில நுண்ணுயிர்கள் பிளாஸ்டிக் பொருட்களை உண்ணும் அளவிற்கு திறனை எங்கிருந்து பெற்றுள்ளது என்பது ஒரு கேள்வியாக உள்ளது . 2016ஆம் ஆண்டு kyoto institute of technology ,ஜப்பான் ஒரு குழு நடத்திய ஆராய்ச்சியில் பிளாஸ்டிக் பாட்டில்களை உண்ணும் ஒரு புதுவகை பாக்டீரியா கண்டறியப்பட்டது.
இயற்கைக்கு கேடு விளைவிக்கும் இந்த பிளாஸ்டிக் பொருட்களை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பதில் உலக ஆராய்ச்சியாளர்கள் சமூக ஆர்வலர்கள் அக்கறை காட்டி வரும் வகையில் இந்த ஆராய்ச்சி அப்பொழுது ஒரு நம்பிக்கையை தந்துள்ளது.
kyoto institute of technology சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் ஒரு குப்பைக்கிடங்கிற்கு சென்று அங்கிருந்த பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை சேகரித்தனர் அதில் சில நாட்களுக்கு பிறகு காலணிகளாக நுண்ணுயிர்கள் வளர்ந்து வந்துள்ளது.
அந்த காலனிகளில் ஈஸ்ட் மற்றும் சில அறிந்த வகை பாக்டீரியாக்கள் இருந்துள்ளது.idonella sakiensis என்று ஆராய்ச்சியாளர்களால் பெயரடிப்பட்ட அந்த புதுவகைபாக்டீரியா அவற்றுள் ஒன்று.
அந்த வகை பாக்டீரியா இந்த ஆராய்ச்சியிக்கு பெரும் பெருமிதத்தை ஊட்டியுள்ளது.பிளாஸ்டிக் என்பது polyetheleneterapthulate PET bottles என்று அழைக்கப்படும் வேதியில் பெயர். இந்த pet பாட்டில்களை ஜீரணித்து அதிலிருந்து சக்தியை பெற்று வாழும் யுக்தி இந்த பாக்டீரியா கொண்டுள்ளது.இது ஆராய்ச்சியாளர்களை வியப்பூட்டியுள்ளது.கரணம் இது போன்று புதுவகையான இந்த நுண்ணுயிர் எவ்வாறு இப்படி ஒருத்திரனை பெற்றிருக்கிறது.அதாவது இது தற்போது இந்த பிளாஸ்டிக் பாட்டில்களை உண்பதற்கென்றே மரபியல் மற்றம் பெற்று உருவானதா.அல்லது மனிதன் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்கும் முன்னறிருந்தே இந்த பாக்டீரி இருந்துள்ளதா என்பது தான் அந்த ஐயம்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் பிளாஸ்டிக் உண்ணும் இந்த idonellasakiensis பாக்டீரியாவால் வெறும் 0.2mm அளவு உள்ள மெலிசான பாட்டில்களைமட்டும் உண்ணமுடிகிறது.இது போல் ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிந்த பல பாக்டீரியா வகைகள் காடுகளில் எறியப்படும் மெலிசான பிளாஸ்டிக் பைகளை உண்ணுகின்றன.
அந்த பாக்டீரியா கையாளும் அதே யுக்தியை கொண்டு அதாவது அந்த பாக்டீரியா எந்தவகை enzyme பயன்படுத்தி பிளாஸ்டிபொருட்களில் இருக்கும் கார்பனை பிரித்து மாற்றி அதை உண்ணுகிறது.என்பதை அறிந்து அந்த ENZYME(நொதி) ஆன poly-ethelene-terapthalase செயற்கையாக தொழிற்சாலைகளில் உருவாக்கி அவற்றை கடலில் இருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளின் மேல் பயன்படுத்தி அழிப்பது என்பது இந்த ஆராய்ச்சியாளர்களின் நோக்கம்.
தற்போது இந்த ஆராய்ச்சி எந்தளவு வெற்றிகரம் அடைந்து பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது என்பதை பற்றி தெரியவில்லை.
உங்களது எண்ணங்களை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யுங்கள்.
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக