விஷ்ணுதேவரின் கிருஷ்ண அவதாரம் - LORD VISHNU'S KRISHNA AVATAR


முன்னுரை 

அன்பிற்கும் ,பக்திக்கும் ,அழகிற்கும், காப்பதற்கும் அனைத்திற்கும் சொந்தமான விஷ்ணுதேவரின் அவதாரங்கள் அவரின் ஓயாது உயிர்களை காக்கும் அவதாரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த அவதாரங்களில் இதுவும் ஒன்று .

குறிப்பு 
பாகவத புராணம் ,பகவத் கீதா ,மஹாபாரதம் 

Krishna Govardhana. Gupta, 4th - 6th century
Bharat Kala Bhavan, Varanasi, India.
Bharat Kala Bhavan is a museum on the campus of Benares Hindu University
This important early sculpture shows Krishna as he holds up Mt. Govardhana to shelter his disciples from a storm. 
The weight of the mountain does not stiffen Krishna's relaxed, tribhanga posture. 
விஷ்ணுதேவரின் கம்சனை அளிக்கும் கிருஷ்ண அவதாரம் 

கம்சன் கிருஷ்ணனின் தாயான தேவகியின் சகோதரன் .வானில் தோன்றிய ஒரு அசரீரியின் குரல் கம்சனிடம் தன் சகோதரி தேவகிக்கு பிறகும் எட்டாவது குழந்தையானது தன்  உயிரை எடுக்கவெ பிறக்க  போகிறது என்றது .



இதை கேட்ட கம்சன் அச்சம் அடைந்தான் .தனது விருஷ்ணி ராஜ்யத்தில் உள்ள ஆட்களை அனுப்பி தேவகியையும் ,வாசுதேவரையும் திருமணம் முடிந்த கையேடு சிறைச்சாலையில் அடைத்தான் .
இடையில் நாரதர் கம்சனிடம் தோன்றினார் அவர் கம்சனிடம் ,தேவகிக்கு  பிறகும் எட்டாவது குழந்தையால் தான் மரணம் ஏற்படும் என்று அந்த அசரீரியின் குரல் கூறினாலும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுல் எந்த குழந்தை வேண்டுமானாலும் அந்த எட்டாவது குழந்தையாக இருந்தால் என்ன செய்வது என்று கூறினார் .குழப்பத்தில் கம்சன் அனைத்து குழந்தைகளையும் கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்தான் .
பிறந்த ஆறு  குழந்தைகளும்  கொள்ளப்பட்டன .

ஏழாவது  குழந்தையான பலராமன் கருவாக இருக்கும் பொழுதே தேவகியின் உடலில் இருந்து  ரோகினி தேவி என்னும் வசுதேவரின் மற்றொரு மனைவியாக கருத்தப்பட்டவரின் உடலில் இறைவன் அருளால்  மாற்றி வைத்தார் .

வசுதேவர் தனக்கு பிறந்த எட்டாவது மகனான கிருஷ்ண தேவரை காப்பதற்கு சிறையில் இருந்து  கனமழையுடன் யமுனை ஆற்று வெல்லத்தையும்  கடந்து ஆதிக்ஷேஷனின்  உதவியாழும் ,யமுனை தேவி தன்னை கடப்பதற்கு வழி கொடுத்ததாகவும் கோகுலத்தில் யசோதா மற்றும் நந்தாவின் பெண் குழந்தைக்கு பதிலாக மாற்றி வைக்கப்பட்டார் கிருஷ்ணர்.

krishna grows up  in yashodas care


அந்த  பெண் குழந்தையின் பெயர் எக்நமஷா ,விஷ்ணு புராணத்தின் படி அவள் கிருஷ்ணா தேவரை காப்பதற்காகவே பிறந்தவள் என்றும் கூறப்படுகிறது .
அவள் மாயத்தில் சிறந்தவள் என்றும் ,மற்றொரு பெயர் காந்தாரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது .வசுதேவர் காந்தாரியுடன் சிறைக்கு வந்தடைந்தார் .
கம்சன் எங்கே அந்த எட்டாவது குழந்தை என்று தேடி வந்தான் காந்தாரியை எடுத்து பாறையில் அடித்தான் அந்த குழந்தை எட்டு கைகளை உடைய தெய்வமாக தோன்றி மூடனே உன்னை கொள்ளப்போகும் குழந்தை ஏற்கனவே  பிறந்து விட்டது என்று கூறிவிட்டு ஆகாயத்தில் மறைந்தாள் .


அன்பின் ,பேரொளியின் வடிவமான கிருஷ்ண அவதாரத்தில் விஷ்ணு தேவர்  செய்த லீலைகள்  ஏராளம் .குறிப்பாக நலக்குவேரா  மற்றும் மணிக்ரீவா இருவரும் சூதாட்டத்திலும் ,நிலையற்ற சுகங்களிலும் வாழ்வைக்களித்து வந்தனர் .இவர்கள் வாழ்க்கையை அறிந்துகொள்ள வேண்டும் கிருஷ்ணா தேவரின் கண்கள் பட்டு திருந்த வேண்டும் என்பதற்காக நாரதமுனி இந்த இரு இரட்டை சகோதரர்களை மரமாக்கி விட்டார் . கிருஷ்ணா தேவர் தன்  குழந்தை பருவத்தில் தாயார் யசோதா  ஒரு பெரிய  உரலில் கிருஷ்ணரை மற்ற குழந்தைகள் போல் எண்ணி கட்டிவைத்தார் .  அதை தன்  தெய்வ சக்தியால் இழுத்து கொண்டு தவழ்ந்த கிருஷ்ணர் காட்டில் இருந்த இரட்டை மரங்களின் நடுவில் உரல் சிக்கிக்கொண்டது .மிக பெரிய பலத்தால் கிருஷ்ணர்
இருமரங்களையும் பிரித்து விட்டார். அவர்களுக்கு சாப விமோக்ஷணமும் கிடைத்துவிட்டது .மனதாலும் அந்த இரு சகோதரர்கள் கிருஷ்ணரின் பார்வையால் திருந்திவிட்டார்கள் .

கிருஷ்ணரை தேடிஅலைந்தான் கம்சன் கடைசியாக  கண்டு கொண்டான்.கிருஷ்ணரை அளிப்பதற்கு அவன் அனுப்பிய அணைத்து அரக்கர்களையும் கொன்றார்கிருஷ்ணர் .



  பூதனா என்னும்  அரக்கி விஷ பாலை குழந்தை கிருஷ்ணருக்கு ஊட்டி அளிக்க அழிகிய பெண் போல் உருவம் எடுத்து வந்தால் அவளை கிருஷ்ணர் கொன்றுவிட்டார்.

அதை தொடர்ந்து கம்சன் அனுப்பிய அடுத்த அரக்கனான த்ரிணவர்த்தா என்னும் புயல் அரக்கன் கிருஷ்ணரை தொழில் சுமந்த படி பிரிந்தவனத்தை மண்ணால் இருளாகி மேலே சென்றான் .சிறிது தூரம் சென்றபின் கிருஷ்ணரது உடல் பாரம் கொண்டுஅதை தாங்க ,முடியாமல் கீலே விழுந்து இறந்தான்.



பூதனாவின் சகோதரனான அகாசுரன் என்னும் அசுரன் ஒரு பாம்பு போல் இருப்பவன் தனது வாயை ஆகாயம் தொட நீட்டி வைத்து கிருஷ்ணரையும் அவரது நபர்களையும் குகை என ஏமாற்றி முழுங்கிட நினைத்தான் .கிருஷ்ணர் இதை அறிந்து கொண்டு அவனது வாயில் நின்று ஆகாயம் தொடும் அளவிற்கு வளர்ந்தார் அவன் வாயும் கிழிந்து விட்டது அவனும் இறந்து போனான்.

பகாசுரன் என்னும் அரக்கனை இறுதியாக எதிர்கொண்டார் கிருஷ்ணர் அவன் ஒரு பறவை போல் தோற்றம் உடையவன் தனது நீண்ட அலகு (வாயினால்)மூழ்கிவிட கிருஷ்ணர் தொண்டைக்குள் நின்றவாறு  அவருடைய பேர் ஒளியின் வெப்பம் தாங்காமல் அவரை வெளியே துப்பி விடுகிறான் .வெளியே வந்த கிருஷ்ணரை அவனது அலகை கொண்டுகொத்த முயன்றான் அவனுடைய அலகை சுலபமாக முறித்து கொன்றுவிட்டார் கிருஷ்ணர் .





இறுதியாக கம்சனையும் எதிர்கொண்டார் கிருஷ்ணர்.கிருஷ்ணரின் பலமானது பேர் அண்டத்தின் பலமாகும் கம்சனின் மேல் குதித்து கம்சனை வதம் செய்தார் ,தேவகி வாசுதேவரையும் விடுவித்தார்.




  யோகமாதா ,காந்தாரி,மஹாமாயை என்று அழைக்கப்படும் மாற்று குழந்தையின் உதவியால் வசுதேவரிடம் இருந்து விடு பட வேண்டிய அவசியமாயிற்று தனது லீலைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக பிரிந்து சென்றுவிடுகிறார் க்ரிஷ்ணபரமாத்மா .தனது மேற்படிப்புக்காக மஹரிஷிசந்திப்பணி ஆஸ்ரமத்திற்கு சென்றார் பின் உக்கிரசேன மன்னரின் ராஜ்யத்தில் உதவி புரிய அரசவைக்கு சென்றார் .


நன்றி ,





photo credit: Abee5 LordKrishnasMarvelousLeelas (108) via photopin (license)
photo credit: Abee5 LordKrishnasMarvelousLeelas (117) via photopin (license)
photo credit: Abee5 LordKrishnasMarvelousLeelas (86) via photopin (license)
photo credit: Abee5 LordKrishnasMarvelousLeelas (118) via photopin (license)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"

சிவனின் நந்தி தேவர் - LORD SHIVAS NANDI , THE STORY BEHIND NANDI