சிவனின் நந்தி தேவர் - LORD SHIVAS NANDI , THE STORY BEHIND NANDI


குறிப்பு : நந்திபுராணம் ,சிவ புராணம் 

                       


 நந்தி தோன்றியதற்கு இரு புராணங்களில் இரு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டிலும் நந்தி சிவனின் பிரியமான பக்தர் என்பது முடிவு.இங்கே ஒரு புராணத்தின் படி,ஷிலதா என்னும் விவசாயி தனக்கு திருமணம் இல்லாமல் ஒரு மகன் வேண்டும் என்று உயர்ந்த யாகம் ஒன்றை  நடத்தினார்.அந்த யாகத்தின்  பலனாக இந்திர தேவர் அவர் முன் தோன்றினார் தனக்கு புத்திர வரம் தர இந்திரா தேவன் தயாராக இருந்தார் ஆனால் ஷிலதாவின் ஆசையோ என்றும் மரணம் இல்லாத ஒரு

புத்திரன்வேண்டும் என்பதேயாகும்.

இந்திர தேவர் தன்னால் புத்திர வரத்தை அளிக்க இயலும் ஆனால் அழிவில்லாத ஒரு உயிரை தரும் ஷக்தி சிவ பெருமானுக்கே உள்ளது என்று கூறிவிட்டார் .


600 - 700 CE, from Bihar state
 It is now in the Asian Art Museum of San Francisco, California.

Hispalois [CC BY-SA 3.0 (https://creativecommons.org/licenses/by-sa/3.0)], from Wikimedia Commons
         
                        ஆகையால் ஷிலதா சிவனை நினைத்து வருடங்கள்   தவம்  இருந்ததாக கூறப்பட்டுள்ளது. சிவ பெருமான் அவருக்கு காட்சியளித்தார். ஷிலதா தன்னிடம் என்றும் துணையுள்ள தனக்கு உபயோகமாக உழைக்கக்கூடிய இரண்டு காளைகள் போல் தனக்கு ஒரு மகன் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவனுக்கு என்றும் அழிவில்லாத நிலை வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் .
                           சிவ பெருமான் அவன் தன்  மீது கொண்டுள்ள பக்தியை கண்டு வியந்து வரத்தை அளித்தார்.தோன்றிய குழந்தைக்கு  நந்தி என்ற பெயரையும் சூட்டினார் . தலை முதல் வயிறு வரை பாதி மனிதன் பின்  பாதி காளை  போன்றும் , நெற்றியில் சிவனின் அடையாளமான  மூன்று சாம்பல் கோடுகளையும் கொண்டு , ஒரு குழந்தை அங்கே தோன்றியது.ஒரு புராணத்தின் படி நந்தியை கண்டதும் சாந்தம் அடைந்தவர் சிவபெருமான் என்று கூறப்பட்டுள்ளது.மனித உருவத்தில் அந்த குழந்தையானது  நான்கு கைகளைக்கொண்டதாகவும் முன் இரண்டு கைகள் கோர்த்து பின் இரண்டு கைகளில் ஒன்றில் கோடாலியும் மற்றொன்றில் சிறிய மானையும் வைத்திருக்குமாறு காட்சியளிப்பார் .
நந்தி தேவர் வேதங்கள், மூலிகைமருத்துவம், நடனம் ,பாட்டு போன்ற கலைகளை பூலோகத்தில் வசிக்கும் பொழுது தந்தையிடம் கற்று  அறிந்தவர் .
                             நந்தி தேவர் கைலாயம் சென்று சிவனை பார்த்து வர சென்றார் அங்கேயே இருந்து கொள்ளவும் விரும்பினார் ஆனால் ஷிலதா வயதடைந்த காரணத்தினால் தன்  மகன்  தன்னுடன் இருந்து அவர் பணியாற்ற விரும்பினார். நந்தி தேவர் சிவனை பிரிந்து வாட நேர்ந்தது அதனால் சிவ பெருமான் எந்த ஒரு பக்தனும் நந்தி காதில் தங்களது துன்பங்களை கூறினால் அது சிவனிடம் வந்து சேரும் என்று கூறினார் என்று சில நூல்களில் கூறப்பட்டுள்ளது.

               ஒரு நாள் மித்ர தேவரும் ,வருண தேவரும் ஷிலதாவை சந்திக்க வந்தனர் ஷிலதா  அவர்கள் காலில் விழுந்த போது நீண்ட ஆயுளோடு வாழ வாழ்த்தினர் ஆனால் அவரது மகன் நந்தி தேவர் காலில் விழுந்து வணங்கிய பொழுது அவர்கள் தயக்கத்தோடு ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து புறப்பட்டனர்.
               ஷிலதா காரணத்தை பின் தொடர்ந்து சென்று கேட்டார் அவர்கள் நந்தி தேவர் நீண்ட நாள் வாழ இயலாது என்று கூறிவிட்டனர் .இதை நந்தி அறிந்து கொண்டார் யமுனை நதியில் சிவனை நினைத்து தவம் கொண்டார் .
சிவ பெருமான் அங்கே தோன்றி அழிய இருக்கும் மனித உடலில் இருந்து 
விடுபட்டு ருத்ர உருவத்தை எடுத்து என்றும் அழிவில்லாது இருப்பாய் என்று வரமளித்தார்.
நந்தி தேவர் தவம் இருந்து சிவ பெருமானிடம் ஆசி பெற்று ருத்ரமாக மாறிய  இடம்  கோயிலாக கர்நாடகாவில் உள்ளது.
நந்தியை தன்  வாகனமாகவும் ,தன்னுடைய கைலாயத்தின் பாதுகாவளனாகவும்  மற்றும் சிவ பெருமானின் தோழனாகவும், மகனாகவும்ஏற்றுக்கொண்டார் .

            சள-ர புராணத்தின் படி சிவனின் குழந்தையான கார்த்திகேயன் பார்வதி தேவியின் உடலில் பிறப்பது விருப்பமற்றதாக அனைத்து தேவர்களும் கருதினர் நந்தி தேவர் இதில் ஒருவராகவும் ஆதலால் பார்வதி தேவி நந்தி சாகா நிலையை பெற்று கடமைகளை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று வரத்தை சாபமாக அளித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது .



பார்வதி தேவியிடம்  இருந்து  ஆகம மற்றும் தந்திர கலையையும் கற்று  18 சித்தர்களின் குறு ஆகவும்  விளங்குகிறார் .ராவணன் கையிலாயத்தை தூக்க வரும்பொழுது தடுக்க முன் வந்தவர்  நந்திதேவர் ,பாற்கடலை கடையும் பொழுது வெளிப்பட்ட விஷத்தை  சிவ பெருமான் பருகும் பொழுது சில துளிகள் கீலே விழுந்ததாகவும் அந்த துளிகள் மற்ற உ யிர்களை பாதிக்க கூடாது என்று அதை நந்தி தேவர் உண்டதாகவும் கூறப்படுகிறது .



                      சிவ பெருமானுக்கு நடத்தப்படும் பூஜையாகட்டும் ,வேண்டுதலாகட்டும் நந்தி மண்டபத்தில்  நந்தியை பூமாலை சூடி  சேர்த்து வழிபட்டால் மட்டுமே அந்த பிரார்த்தனை பூஜை  முழுமையடையும் என்றும் .நந்தி காதில் சொன்னால் சிவனின் காதில் விழும் என்பதற்கும் நிறைய கதைகள் உண்டு .

' ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி
தந்நோ நந்திஹ் ப்ரசோதயாத்'
-நந்தி தேவரின் காயத்ரி மந்திரம் 

நன்றி







  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"