ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"



  
            சிவ பெருமானும்   சில  அவதாரங்கள் எடுத்தது  போல் ஆதி சக்தியும் சில அவதாரங்கள் எடுத்தார். சிவன் இல்லையேல் ஷக்தி இல்லை ,ஷக்தி இல்லையேல் சிவன் இல்லை என்பதை அறிவோம் .
              ஆதியில் சிவன் தோன்றிய பொழுதே அவருடைய ஷக்தியும் தோன்றிவிட்டார்.துவக்கத்தில் சுமார் 21 கல்பம் வரை சிவன் திருமணம் முடிக்காமல் இருந்திருக்கிறார் என்பதை இதற்கு முன் தோன்றிய கல்பங்கல் கூறும் புராணங்கள் மூலம் அறியலாம் .





சிவ பெருமான் தோன்றிய உடனே பிரபஞ்சத்தை காக்க தனக்கு உதவியாக பெருமாள் ,பிரம்மர், பஞ்சபூதங்கள் ,சீடர்கள் ,ரிஷிகள் ,தேவர்களுக்கு
 தலைவர் ,கிரகங்கலின் தேவர்கள் ,போன்றவர்களை உருவாக்கி பிரபஞ்சத்தை காக்கும் பணியை அவர்களுக்கு வழங்கி இருக்கிறார் .

அதில் ஒருவனான தக்ஷன் தேவர்களுக்கு பிரஜாபதியாக விளங்கினான் .சிவ பெருமானின் ஆதி சக்தியிடம் தவம் இருந்து தனக்கு ஒரு மகள் வேண்டும் என விரும்பினான் .ஆதி சக்தியே அவனுக்கு மகளாக பிறந்தார்.இந்த அவதாரத்தை சதி அவதாரம் என்றழைப்பர் .தக்ஷன் தன் மகளுக்கு தாக்ஷாயணி  என்ற பெயரை சூட்டி வளர்த்தார் .சதி என்ற பெயராழும் அறியப்பட்டார் .

ஆதிசக்தியின் இந்த சதி அவதாரத்தில் சிவனை எண்ணி சிவனை திருமணம் செய்துகொள்ளும் கனவோடு வளர்ந்தார் .தாதீசீனி முனிவரின் கூற்றை கேட்டு  தன்னை மறக்கும் அளவிற்கு தூயமனதுடன் சிவனை எண்ணி தவம் இருந்தார் .சிவ பெருமான் சதியின் வேண்டுகோள்படி தக்ஷன் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார். 

சிவ பெருமானை  ஒரு விருந்திற்கு தக்ஷன் அழைக்க அரண்மனைக்கு சிவனும் சதியும் சென்றனர் .தக்ஷனை கண்டதும்  அங்கிருந்த அனைவர்களும் எழுந்து வணங்கினர் சிவ பெருமானை தவிர்த்து .

இருப்பினும்   தக்ஷன் முன் ஆதிசிவன்  தலைகுனிந்தால்  அணைத்து துன்பங்களும் தக்ஷனை சேர்ந்து விடும் என்பதை அறிந்தே சிவ பெருமான்  அதை செய்யாமல் இருந்தார்.

இதை தவறாக எண்ணிய தக்ஷன் ஆணவம் கொண்டு தான் நடத்தவிருக்கும் யாகத்திற்கு அணைத்து தேவர்களையும் வர வேற்று சிவ பெருமானையும் சதியையும் வரவேற்கவில்லை .

சிவ பெருமான் தான் அழைக்கப்படாத இடத்திற்கு செல்ல
 விரும்பவில்லை .  இருப்பினும் சதி சிவனின் அனுமதியுடன்  யாகத்திற்கு சென்றார் .யாகத்தில் அணைத்து தேவர்களும் இருந்தனர் ரிஷிகளான நாரதமுனி ,பிரம்மர்,விஷ்ணு போன்ற தேவர்களும் இருந்தனர்.தாதீசீனி முனிவர் சிவ பெருமானின் தீவிர பக்தர் .அண்டத்தை உருவாக்கிய சிவன் இல்லாத இடத்தில தனக்கு வேலை இல்லை என்பதைப்போல் அங்கிருந்து கோபமாக சென்றுவிட்டார் .

சதி அங்கே சென்று எம்பெருமானும்  தானும் அழைக்கப்படாத காரணத்தை கேட்டார் .தக்ஷன் ஆணவத்தில் சிவ பெருமானை அவமான 
படுத்த துவங்கினார் 'கழுத்தில் எலும்புகளை மாலையாக அணிந்து இடுகாடு சாம்பலை பூசி ,புலி தோல் ஆடையை அணிந்து இருக்கும் ஒருவரை' இங்கே அழைக்க விரும்பவில்லை என்று வெறுப்புடன் சிவனையும் சதியையும்  சபையில் அவமானம் படுத்தினார் .சதி யோக சக்தியால் தன்  உடலை சுற்றி நெருப்பை உண்டாக்கி இறந்து போனார் .

                           
Graphics from pngtree.com

























பிரம்மரும்  ,விஷ்ணுவும் ,மற்ற தேவர்களும் செய்வது  என்ன  என்று தெரியாது நின்றனர் .சிவ பெருமான் தன்  தவத்தால் நடந்ததை அறிந்து கொண்டார் .




தனது ஜடா  முடியை ஒன்றை கிலே வீச அதில்  இருந்து வீர்பத்ரனையும் இன்னொரு முடியில் இருந்து  மஹாகாளியையும் (ஆதி சக்தியின் மற்றொரு வடிவம் ) உருவாக்கி, யாகத்திற்கு வந்திருக்கும் அனைவரையும் கொன்றுவருமாறு கட்டளையிட்டு அனுப்பினார். யாகத்தில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர். வீரபத்ரன் தக்ஷனின் தலையை துண்டித்தான்.


மற்ற தேவர்கள் தக்ஷனை  மன்னித்து விடு மாறு சிவனிடம் வேண்டினர் தக்ஷனின் அறுக்க பட்ட தலைக்கு பதிலாக சிவ பெருமான்  ஆட்டின் தலையை
 வைத்தார் .தக்ஷன் தான் செய்த தவறை எண்ணி மன்னிப்பு கேட்டார் .

இருப்பினும் இறந்து போன சதியின் உடலை தூக்கிக்கொண்டு சிவ பெருமான் தாண்டவம் ஆடியதாழும்  பிரபஞ்சத்தில் பேரழிவு ஏற்பட துவங்கியது .சூரியனும் மலைகளும் அழிந்து விடும் நிலைக்கு உள்ளானது .பிரபஞ்சம் முழுதும் இடி ,ப்ரளயங்கள் உருவாகின.
சதியின்  உடலைக்கொண்டு   உலகத்தை சுற்றி அழைந்ததாகவும் பின் விஷ்ணு தேவர் சுத்தர்ஷண சக்ரத்தையிட்டு அந்த உடலை 52  துண்டுகளாக்கி விட்டதாகவும் .அந்த துண்டுகள் விளைந்த இடமெல்லாம் ஆதிசக்தியின் பீடங்களாக  மாறின .

ஆதிசக்தி மற்றொரு அவதாரமான பார்வதி அவதாரம்  எடுத்து சிவனை மீண்டும் திருமணம் முடிக்கிறார் .




நன்றி



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

சிவனின் நந்தி தேவர் - LORD SHIVAS NANDI , THE STORY BEHIND NANDI