கம்சனின் முற்பிறவி - THE KAMSA'S PREVIOUS BIRTH STORY EXPLAINS THE REASON BEHIND HIS URGE TO KILL LORD KRISHNA.
முன்னுரை
கர்மமே நமது பிறப்பையும் தீர்மானிக்கிறது
குறிப்பு
ஸ்கந்த புராணம்
ஸ்கந்த புராணம்
ஹிரண்ய க்ஷன் ஹிரண்யகசிபுவின் சகோதரன் .ஹிரண்யக்ஷன் மற்றும் ஹிரண்யகசிபு இருவரும் அரக்கர்களாக படைக்கப்பட்டனர் காரணம் உலகிற்கு படைப்பவரை எதிர்கொண்டால் ஏற்படும் விளைவை புகட்டவே .நான்கு குமாரர்கள் வாயிலாக இவர்கள் சபிக்கப்பட்டு அரக்கர்களானார்கள் .இதற்கு முன் இந்த இரு அசுரர்களும் வைகுண்டத்தின் காவலர்கள்.
ஹிரண்யக்ஷனின் மகன் காலநேமியின் ஆறு மகன்களும் முற்பிறவியில் ப்ரம்மாவின் மனுஸ்ய புத்திரர்களுள் ஒருவரான மறுச்சியின் மகன்கள் .இந்த ஆறு மகன்களும் பிரம்ம தேவரை ஏளனம் செய்ததால் அசுரர் குலத்தில் பிறந்ததாக கூறப்படுகிறது .
காலநேமியின் மகன்கள் ,தங்களது இந்த பிறப்பில் கடும் தவம் இருந்து ப்ரம்ம தேவரிடம் தங்களுக்கு அழிவே இல்லாத வரத்தை வாங்கிவிடுகின்றனர்.இதை தாங்கமுடியாத ஹிரண்யகஷிபு தன் சகோதரனின் வாரிசுகள் எப்படி தன்னை விட பக்தியில் சிறந்து வரம் வாங்க இயலும் என்று பொறாமை கொண்டு அவர்களுக்கு சாபம் விடுகிறான் .அந்த சாபம் யாது என்றால் ,இந்த ஆறு மகன்களும் மீண்டும் பிறந்து தன் தந்தைகைகளாலேயே அல்லது தங்களுது குடும்பத்தில் ஒருவராலேயே கொல்லப்படுவார்கள் என்பதாகும் .
இதன் விளைவே காலநேமி அடுத்த பிறவியில் கம்சனாக அவதரித்து தன் சகோதரி தேவகிக்கு பிறக்கும் தனது ஆறு மகன்களையும் கொன்று விடுகிறான் .
காலநேமி என்னும் பிறப்பில் கம்சன் விஷ்ணுதேவரால் அளிக்கப்பட்டான்
காலநேமி பிற்காலத்தில் தனது அசுர குல தலைவர்களான விரோசனா மற்றும் பலியின் அழிவால் இந்திரா தேவனிடம் யுத்தம் இடுகிறான் .இவனது தவத்தால் பெற்ற சக்திகளை அளிக்க விஷ்ணுதேவரே கருடன் மீது வந்து காலநேமியை அளித்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது .
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக