ராஜயோகா - THE YOGA OF KNOWING THE POWERS WITHIN THE SELF

வரலாறு : ராஜயோகா சுமார் முந்தைய 12ஆம் நூற்றாண்டிற்கு முன் பழமையானது என்பதை அமனஸ்கா என்னும் சைவிசத்தை சார்ந்த 12ஆம் நூற்றாண்டு யோகா நூல் வழியாக அறியலாம் . பதஞ்சலி முனிவர் எழுதியுள்ள யோக சூத்ரங்களில் ஒன்று ,இது பின்னர் விவேகானந்தர் நவீன கால மகளுக்கு எடுத்து விளக்கியுள்ளார். இது விவேகானந்தரால் அஷ்டாங்க யோகா என்றும் அழைக்கப்பட்டது. யோகக்கலையை முதன் முதலில் அறிந்தவர் சிவ பெருமான் . சிவா பெருமான் இந்த கலையை பிரம தேவருக்கும் சில நூல்களின் படி பார்வதி தேவிக்கு மட்டும் தெரியப்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது .பார்வதி தேவி இந்த கலையானது பூலோகத்தில் உள்ள மக்களுக்கும் சென்ற அடைய வேண்டும் என்று எண்ணி 18 ரிஷிகளுக்கும் இதை கற்பித்தார் . அவர்கள் வழியாக மக்களை சென்றடைய வேண்டும் என்று விரும்பினார் . ஒரு மனிதனின் குறிக்கோள் தன்னை அரிவது என்பதை கீதையிலும் ,ராஜயோகத்திலும் மற்ற இந்து புராணங்களின் வாயிலாகவும் நாம் அறியலாம் .யோக கலையின் இந்த அமைப்பு நமது உடல் போல் சிவனையும் ,ஷக்தி போல் பிரபஞ்ச சக்தியை ஒருங்கிணைத்துக்கொள்வதன் மூலம் பிரம...