ராஜயோகா - THE YOGA OF KNOWING THE POWERS WITHIN THE SELF






வரலாறு :

ராஜயோகா சுமார் முந்தைய 12ஆம் நூற்றாண்டிற்கு முன் பழமையானது என்பதை அமனஸ்கா என்னும் சைவிசத்தை சார்ந்த 12ஆம் நூற்றாண்டு யோகா  நூல் வழியாக அறியலாம் .பதஞ்சலி முனிவர் எழுதியுள்ள யோக சூத்ரங்களில் ஒன்று ,இது பின்னர் விவேகானந்தர் நவீன கால மகளுக்கு எடுத்து விளக்கியுள்ளார். இது விவேகானந்தரால் அஷ்டாங்க யோகா என்றும் அழைக்கப்பட்டது.

யோகக்கலையை முதன் முதலில் அறிந்தவர் சிவ பெருமான் .

சிவா பெருமான் இந்த கலையை பிரம தேவருக்கும் சில நூல்களின் படி பார்வதி தேவிக்கு மட்டும் தெரியப்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது .பார்வதி தேவி   இந்த கலையானது பூலோகத்தில் உள்ள மக்களுக்கும் சென்ற அடைய வேண்டும் என்று எண்ணி 18 ரிஷிகளுக்கும் இதை கற்பித்தார் .
அவர்கள் வழியாக மக்களை சென்றடைய வேண்டும் என்று விரும்பினார் .

ஒரு மனிதனின் குறிக்கோள் தன்னை அரிவது என்பதை கீதையிலும் ,ராஜயோகத்திலும்  மற்ற இந்து புராணங்களின் வாயிலாகவும் நாம் அறியலாம் .யோக கலையின் இந்த அமைப்பு நமது உடல் போல் சிவனையும் ,ஷக்தி போல் பிரபஞ்ச சக்தியை ஒருங்கிணைத்துக்கொள்வதன் மூலம் பிரமத்தை அறியலாம் அனைத்து சித்திகளும் பெறலாம் .குறிப்பாக 8 அஷ்டமா சித்திகளையும் பெறலாம் .இதை முறையாக பயின்று பெற்றவர்களே நாம் அறியும் சித்தர்கள் 18 பேர் . 


பலன்கள் :


ராஜயோகம் செய்வதால் கிடைக்கும் பலனை  தன்னிலை அறிதல் ,அனுபவிக்காத ஆனந்தம் ,மன அமைதி, தன்னுள் இருக்கும் ராஜாவை அடைதல் ,சமாதி, சமாதானம், ஒற்றுமை என்று கூறப்படுகிறது. 

செய்முறை உதவிகள் :


 ராஜயோகத்தை அடைவது என்பது எளிதல்ல  இது உடலாலும் மட்டும்மின்று அதிகம்  உள்ளதாலும்  தூய்மைநிலை தேவைப்படும் யுக்தியாகும். 
இதில் 8நிலைகள் உள்ளன

1.யமம்
(sub div)

அஹிம்சை  (கொல்லாமை )

சத்தியம் (பொய்யாமை )

ப்ரஹ்மச்சரியம்(காமத்தை வெல்லுதல்  )

அபரிக்ரஹம் (அதிக பொருளை சேர்க்க கூடாது ,பிறரிடம் தானம் கேற்க கூடாது ) 

அஸ்தேயம் (பிறரின் பொருளை தனக்கு சொந்தமாக்கி கொள்ள கூடாது )

2.நியமம்
(5 sub div)

சவுசம் (மனதிலும் ,வார்த்தையிலும் ,பேச்சிலும் தூய்மையை கடைபிடிப்பது )

சந்தோசம் (மனதில் சந்தோசம் நிலை திருக்க வேண்டும் ,திருப்தி பெரும் குணம் வேண்டும் ,சஞ்சலம் கூடாது )

சுவாத்தியாயாம் (உண்மையை புகட்டும் ,ஆதி உண்மையான இறைவனை அடைதல் போன்ற புனிதமான விஷயங்களை புகட்டும் நூல்களை தானே நாடி சென்று படிக்க  வேண்டும் ,தன்னையறிதல் வேண்டும் )

தபசு (இந்த பிறப்பினை உண்மையான ப்ரம்மத்திற்கும்  ,புனிதமான சேவைக்கே அர்ப்பணிக்க வேண்டும் )

ஆத்மசமர்பணம்  (தன்னை முழுவதுமாக இறைவனுக்கேய சமர்ப்பிக்க வேண்டும் )

3.ஆசனம்
உடலை வளைக்கவும் ,யோகா ஆசனங்களை செய்ய வேண்டும் உடலையும் மனதையும் ஒன்றிணைக்க பழக்க படுத்திக்கொள்ள வேண்டும் .

4.பிராணாயாமம்
பிராணனை உணருவது 

5.பிரதியாஹாரம்
புலன்கள் வழிவரும்  செயல்கள் ,வெளியுலக தொந்தரவுகள் அனைத்திலிருந்தும் விடுபட்டுவிடுதல் 

6.தாரணை
மன ஒருமைப்பாடு ,மனம் ஒருமுகப்பட்ட இருத்தல் 

7.தியானம்
தவம் 

8.சமாதி  
அமைதி நிலை ,மனம் கடந்த நிலையை அடைய வேண்டும் 


  ஒவ்வொரு நிலையையும் தவறில்லாமல் கடைபிடித்தால் மட்டுமே இறுதிநிலையை அடைய இயலும்.

 இதில் சில ஒழுக்க நெறிகளே முதலாக வகிக்கின்றன.  குறிப்பாக அஹிம்சை, சந்தோஷம்,பற்றற்று இருத்தல் போன்றவை மிகவும் அவசியம். 
 கொள்கைகள் பின்பற்றப்பட்டு ,வாழ்க்கையை இறைவன் மற்றும் சமூகத்தின் சேவைக்காக சமர்பிப்பதும்இதில்அடங்கும்.
பின் ஆசனம் பிராணாயாமம்  தியானம் உதவுகிறது.

 எட்டு வகையான யோகாங்கள்  முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்.
இதை தகுந்த ஆசிரியர் உதவியால் பயின்றால் உதவும், மேலும் சில நூல்களை படித்தால் மட்டுமே உதவும். 
நூலை தேர்வுசெய்வதும், ஆசிரியரை தேர்வு செய்வதும் உங்களுடைய விருப்பமே .முதலில் நூல்களில் இருந்து துவங்குங்கள்.


நன்றி 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"

சிவனின் நந்தி தேவர் - LORD SHIVAS NANDI , THE STORY BEHIND NANDI