யோகா, தியானம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்





யோகா மற்றும் தியானம் நீங்கள் எவ்வாறு எடுத்து கொள்கிறீர்கள் என்பது ஏன் அவசியம்.

யோகா மற்றும் தியானம் முதலில் மதம் சார்ந்த விஷயம்  அல்ல, யோகா உடல் மற்றும் மனதின் ஆரோக்கியம்  சார்ந்த விஷயமாகும் என்பதை உலகளவில் உள்ள அனைத்து மனவியல் துறை அறிஞர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டு பின்பற்றுபடுபவை ஆகும் .

மதத்தை மாற்ற சொல்லி யோகா  ஊக்குவிப்பதில்லை மனதை வலுப்படுத்த இது பயன்படுகிறது . மனம் தெளிவுடன் இருந்தால்  எந்த செயலிலும் வெற்றி நிச்சயம் கிட்டும் என்பது இதன் கோட்பாடு . உடலை வளையுங்கள் உள்ளம் வளையம் என்னும் உண்மையே இங்கு கற்றுத்தரப்படுகிறது. எனவே மனதை மற்றும் உடலை மேம்படுத்த கண்டம் விட்டு கண்டம் தாண்டி வரும் மக்கள் இந்தியாவில் பயனடைந்து வருகின்றனர்.

 இவர்களுள் பெரிய விஞ்ஞானிகளும் இங்கு வந்து தியானம் மற்றும் யோகாசனம் பயின்று புதியனவற்றை கண்டு பிடித்ததும் உண்டு.உதாரணமாக "ஸ்டீவ் ஜாப்ஸ் "கிரியா யோகா  ,தன்னிலை அறிதல், தியானம் மற்றும் பயிற்சிகளை இந்தியாவில் வந்து தங்கி பயின்ற பின்னரே அவர் apple கண்டுபிடிக்கப்பட்டு வெளியிட்டார் .
 
இந்தியாவில்  மிக பெரிய ஆன்மிக அறிஞர்களாக சத்குரு, பாபா ராம்தேவ், ரமண மகரிஷி, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், போன்ற மேலும் சிலர்  மக்களை இதுபோன்ற கலையில் ஊக்கப்படுத்தி உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் உதவியாக சமூக சேவைகளில் ஈடுபட்டுள்ளனர். யோகாவிற்கு எதிர் மறை விமர்சனங்கள் உலகில் அதிகம் தோன்றினாலும் அதன் உண்மை தன்மை ஆராய்ச்சிகளில் நிரூபிக்க பட்டுள்ளது. இவற்றை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது நம் கடமையாகும்.

வெளிநாடுகளில் மனவியல் துறை அறிஞர்கள் மூச்சுப்பயிற்சி போன்றவற்றை அங்கு இருக்கும் மக்களுக்கு பரிந்துரைத்து வருகின்றனர்.
பல ஆராய்ச்சிகளில் வெற்றிபெற்று வந்த இந்த கலைகள் இந்தியாவில் தோன்றியது என்பது பெருமைகொள்ளவேண்டிய விஷயமாகும்.

பணக்காரர்கள் தான் பணம் செலவழித்து இதுபோன்ற கலைகளை பழக இயலும் என்பது தவறு. இது பொழுதுபோக்கு கலை அல்ல.
இதர்கென தகுந்த யோகாசனங்கள், புத்தகங்களில் தரப்பட்டுள்ளது   தனிமையில் மனதை அடுக்கி அமரும் திறமையையும் வளர்த்துக்கொள்ள உதவும் தியானமும் புத்தகங்களில் தரப்படுகிறது. மனம் வைத்திருந்தால் போதும் நீங்களாகவே இவற்றை கற்றுக்கொள்ளலாம்.


யோகா  பயிற்சிகளங்கள் உலகில் அனைத்து முன்னோடி நாடுகளில் உள்ளது. உதாரணமாக அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள மக்கள் விருப்பத்தோடு கலந்துகொண்டு பயின்று வருகின்றனர்.

யோகா அறிவியல் துறையிலும், மருத்துவம் மாற்றும் மனவியல் துறையிலும்  மிக பெரிய பங்கு வகித்துள்ளது. இந்திய நாட்டில் தோன்றிய இந்த கலையை மற்ற நாட்டு மக்கள் போல் சாதி  மதம் பேதம் இன்றி அனைவரும் பயில வேண்டும்.

அன்றாடம் வாழ்வில் ஏற்படும் மன உளைச்சல் , negative thoughts(எதிர்மறை எண்ணங்கள் ), மன நோய்கள்  உடல் உபாதைகல் அனைத்தும்  சரி செய்யப்பட்டு வருகிறது .

நன்றி ,




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"

சிவனின் நந்தி தேவர் - LORD SHIVAS NANDI , THE STORY BEHIND NANDI