பத்மாசனம்-PADMASANA SIGNIFICANCE


                       சிவ பெருமான்  தவம் இருப்பது இந்த ஆசனத்திலே . தன்  பக்தர்கள் தவத்தால் மட்டுமே இவரை காண இயலும் .
                   
                     சிவன் அருளிய யோகக்கலையை பின்பற்றியே சித்தர்கள் எட்டு சித்திகளையும் பெற்றனர்  அதாவது  ராஜ யோகத்தின் எட்டு அம்சங்களையும் முறையாக பின்பற்றியதே யாகும் 




                     அந்த எட்டு அம்சங்களில் ஆசனங்கள் முக்கியத்துவமாக  கருதப்பட்டது .
                 
  ஆசானங்களில் முதல் ஆசனம் பத்மாசனம் என்றாலும் ,சித்தர்கள் அடுத்து முக்கியத்துவம் கொடுத்தது பிராணாயாமத்திற்கு இதற்கும் பத்மாசனத்தில் வடிவத்தில் அமர்வது முக்கியம் .
     


                            ஆசனங்களில் முதல் ஆசனம் பத்மாசனம் .
பத்மா என்றால்"தாமரை ".தாமரையே பேரொளியாகவும் ,தூய்மையின்
 வடிவமாகவும் , கருதப்படுகிறது .ஷக்தி ,லக்ஷ்மி, விஷ்ணு ,பிரம்மா தேவர்களின் கைகளில் இருக்கும்  மலர்  இந்த தாமரை மலர் .
Graphics from pngtree.com

சித்தர்கள் ஞானிகள் யோகிகள் என கருதப்படுபவர்கள்  பிராணாயாமம் மற்றும் தவம் செய்து வரங்களை பெற்றது இந்த பத்மாசனத்தில்  அமர்ந்துதான் .இந்த வடிவத்தில் முதலில் அமர்வதே பின் மற்ற ஆசனங்களை செய்வதே  அனைத்து ஆசனகளையும் முழுமைப்படுத்தும் .

                           
மாணிக்கவாசகர் 

              முத்திரைகளில் அறிவையும் ,தெளிவையும், அமைதியையும், ஞானத்தையும் வெளிப்டுடுத்தும் முத்திரை சின்முத்திரை .சில தேவர்களின் கைகளிலும் இதை காணலாம் .



தட்சினாமூர்த்தி

                 சின்முத்திரையை ஜனன முத்திரை ,கியான் முத்திரை என்றும் கூறுவார். இதன் அர்த்தம் பிரபஞ்சத்தின் மீது நமக்கு ஏற்பட்டுள்ள ஞானம் மற்றும்  தெளிவு. ப்ரபஞ்சத்தோடு இணைதல் என்பதை கட்டைவிரலால் ஆல்காட்டிவிரலை தொடுவதின் அர்த்தம்.
                இதை செய்வதால் மனம் ,உடல்,பிரபஞ்சம் ஒன்றோடு ஒன்றாக இணைத்துக்கொள்வதால் உண்டாகும் தெளிவும் ஞானமும் கிட்டும் .
               வடகிழக்கு அல்லது தென்கிழக்கு திசைகளில் அமர்ந்து ஆசனங்களை செய்ய வேண்டும்  .மேற்கு ,வட மேற்கு ,தென்மேற்கு ,தெற்கு  போன்ற திசைகளை தவிர்க்கவும்  வேண்டும்.இது நம் வாஸ்து சாஸ்திரங்களின் படி கூற்று .
          வடகிழக்கு அல்லது தென்கிழக்கு திசைகளில் அமர்ந்தும் முதலில் சமமான தரையில் விரிப்பை போட்டு கால்களை நேராக நீட்டி.   வலது காலை இடது துடையின் மீதும் ,இடது காலை வலது துடையின் மீதும் வைத்து கொண்டு ,இரு பாதங்களும் அடிவயிற்றை தொடுமாறு அமர்ந்தால் பத்மாசனமாகும் .




                 சிவன் என்பது ஆசனம் அதில்  அமர்ந்து கொண்டு .அதாவது    பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டு சின்முத்திரையை கைகளில் செய்துகொண்டு .உள்ளங்கையும் ,மற்ற மூன்று விரல்கள் ஆகாயத்தை நோக்கியும் வைத்துக்கொண்டு உள்ளிருக்கும்  சக்தியை பயன்படுத்தி பிரபஞ்சத்திலிருந்து சக்தியை பெருகிக்கொள்வது .சிவனையும் சக்தியையும் ஒன்றினைப்பது .உடலையும் பிரபஞ்ச சக்தியையும் ஒன்றினைப்பது என்றும் கூறலாம் .ஒன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் தினமும்  பத்மாசனத்தில் உட்காருவதால் உடலில் மருத்துவ ரீதியாக நிறைய பலன்களும்,பிரார்த்தனை செய்வதற்கான தெளிவும் கிட்டும்  .
         
                 தினமும் பத்மாசனத்தில் அமர்வது சிறந்தது என்றாலும் மனதால்  த்ரிப்தியடைவதாய் இருந்தாலே மட்டும் இதை செய்யவும் .சவ்கர்யமான காற்றோட்டம் ,சூரிய வெளிச்சம் இருக்கும் இடத்திலும் .அமைதியான இடத்திலும்  செய்வது சுலபமாகவும் இருக்கும்.

           இருக்கமாகவோ ,கால்கள் ரத்தம் கட்டும் அளவிற்கோ செய்ய வேண்டாம். உடலின் இடையை நடுமுதுகின் கீழ் உள்ள எலும்பில் இறக்கி நேராக அமர்வது அவசியம் .இவ்வாறு அமர்ந்தால்  அதிக நேரம் அமர முடியும். கால்கள் வலி கொண்டாலும் பழக்கம் வெற்றியைத்தறும்.மனோசக்தியை அதிகரிக்க சிறந்த ஆசனம் பத்மாசனம் .தவறாமல் பயிற்சி செய்யுங்கள் .

நன்றி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"

சிவனின் நந்தி தேவர் - LORD SHIVAS NANDI , THE STORY BEHIND NANDI