நாட்டுச்சர்க்கரையை சாப்பிட துவங்குங்கள் இன்றிலிருந்து




நாட்டுசர்கரையின் பயன்கள் :

நாட்டு சர்க்கரை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியுடன் எலும்புகளுக்கும்,பற்களுக்கும்  வலுவை சேர்க்கிறது.உடலில் ரத்த அணுக்களை அதிகரிக்கிறது மேலும் ரத்த சோகை வராமல் தடுக்கிறது.

சுவாசக்கோளாறுகளை நீக்கக்கூடியது மேலும் உடலுக்கு உஷ்ணம் ஊட்டும் தன்மையுடையது.





அன்றாடம் நாட்டுச்சர்க்கரையை  மெதுவாக இணைத்துக்கொள்ள தினமும் இதுபோன்று செய்யலாம்.


பொழுது போக்கு நேரங்களில் நமது பாரம்பரிய வழியில்  செய்யப்படும் சிற்றுண்டிகளுடன் சேர்த்து கொள்ளுங்கள் நாட்டு சர்க்கரையை.

*சுக்கு காபியுடன் நாட்டுச்சர்க்கரையை சேர்த்து உணவிற்கு பின் பருகிக்கொள்ளலாம்.

*அவில்ளுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து  சாப்பிடலாம்.

*பண்டிகை நாட்களில் பொங்கல் ,அபிஷேகம்,அதிரசம்,கச்சாயம் போன்று இனிப்பு பலகாரங்களுடன் நாட்டுசர்கரையை சேர்த்து சமைப்பது சிறந்தது.

*மேலும் பிள்ளைகளுக்கு,பெண்களுக்கு  தேங்காய்,பொட்டுக்கடலையுடன் நாட்டுச்சர்க்கரையை சேர்த்து சாப்பிட தரலாம்.இதில் மாவு சத்துடன் நாட்டு சர்க்கரையில் இருக்கும் பாஸ்பரஸ்,கால்சியம் போன்றவை பிள்ளைகளின்  உடலிற்கு  தேவைப்படும் சத்துக்களை தருகிறது.

*கடலை மிட்டாய் மற்றும் எள்ளுருண்டை போன்றவற்றுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து சிற்றுண்டி தயார் செய்துவைத்து  தினமும் ஒன்று என்று சாப்பிடலாம்.

இவ்வாறு இரண்டு நாள் இடைவெளியில் இவற்றை தயார் செய்து சாப்பிடுவதால் உடல் ஊக்கம் அடைகிறது.பிற சர்க்கரைகளை உண்பதால் ஏற்படும் பல் சொத்தை அல்லது சர்க்கரை நோய் போன்றவை வராமல் தடுக்கிறது


நன்றி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"

சிவனின் நந்தி தேவர் - LORD SHIVAS NANDI , THE STORY BEHIND NANDI