Pavamana mantra
வணக்கம் ,
இந்த மந்திரம் குருவிடம் வாழ்க்கையின் உண்மையை பற்றி சொல்லி தர வேண்டி கேட்கும் மந்திரமாகும்.யாகத்தின் முன்பே கூறப்படும் மந்திரம் .ப்ரஹதாரண்யக உபநிடதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மந்திரம் . இங்கே குரு என்பவர் இறைவனை காட்டுபவர் ,எத்தகு காரியங்களை செய்தால் இறைவனை அடையலாம் என்பதை போதிப்பவர் ,பிரபஞ்சத்தை பற்றியும் அதன் உண்மையை பற்றியும் தெரிந்திருப்பவர் .
இந்த மந்திரத்தை கூறுபவர் தனுக்குள்ளே உள்ள ஐயங்களை கூறுகிறார் அந்த சந்தேகங்களுக்கு இறைவன் பதில் கூற வேண்டும் என்கிறார்.
உலகம் என்பது நிலைத்ததன்மை உடையாதா இல்லையா ?
உலகில் உள்ள அனைத்து நிலையற்ற பொருட்களை பற்றி தெரிந்து கொள்ளவும் அவற்றை நான் அடையவும் வேண்டாம் .
Ganesh idol ₹399.00 |
உண்மையான மாற்றம் என்பதே இல்லாத நிலைத்தன்மை உடைய இறைவனை பற்றி தெரிந்துகொள்ள வேண்டி கேட்கிறேன் என்று கூறகிறது இந்த மந்திரம்.
மனிதனின் உண்மையான இயற்கை தன்மையை விளக்கியும், இருள் போல் இருக்கும் அறியாமையை விலக்கிடும் சக்தி கொண்ட அந்த ஒளிபோல் உண்மையாக இருக்கும் அறிவினை பற்றி தெளிவுபடுத்த வேண்டுகிறேன் என்பதை கூறும் மந்திரம் .
இறுதியாக தன்னை பிறப்பிலிருந்து காப்பாற்றி இறப்பென்பதே இல்லாமல்
செய்யவேண்டும் என்பது போல் முடியும் மந்திரம் .இதன் அர்த்தம் யாது என்றால் பிறப்பென்பதும் இல்லை, இறப்பென்பதும் இல்லை ,மனதென்பதும் இல்லை நாம் அனைவரும் படைப்புகளின் ஷக்தி மட்டுமே அல்லது இறைவனிடத்தில் இருந்து தோன்றியவர்கள் என்பதை தெளிவுபடுத்தும் மந்திரம் .
இறுதியாக ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி ஹி: என்பதின் அர்த்தம் ;
எந்த ஒரு காரியத்தை செய்வதாயினும் அந்த காரியத்தில் நமக்கு கவனமும் நிதானமும் மனதின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. அவ்வாறு நமது மனதை அமைதியடைய செய்ய வேண்டியது அவசியம். எனவே செயலைத்துவங்கவதற்குமுன் இந்த மந்திரத்தை கூறி இறுதியாக முடிவில் " ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி ஹி" என்று சொல்வதானால் மனம் சாந்தியடைய செய்கிறோம் .வேதமந்திரங்களின் அர்த்தம் தெரிந்து சமஸ்க்ரிதத்தில் உச்சரிப்பதனால் அந்த மந்திரத்தின் பலன் அதன் ஓசையிழும் நமக்கு கிடைக்கிறது .
கருத்துகள்
கருத்துரையிடுக