பொங்கல் பண்டிகை - THE CELEBRATION OF SOUTH INDIAN'S

🙏🙌👐பொங்கல் பண்டிகை👏



விவசாயியின் உழைப்பால் ஆன அரிசி  பொங்க வீட்டில்  லக்ஷ்மியின் அருள்  பெருகுகிறது.

விவசாயிகளின் தெய்வமான பசுவொன்று இருந்தால் அதற்கு திலகமிட்டு, மணியுடன் மனமனக்கும் பூ மாலை சூடி ஆரத்தி எடுத்து செல்வதை சேர்க்க உதவிய பசுவை தெய்வமாக  பூஜிக்கின்றனர்
நெற்கதிர்களை தங்களுக்கு அளித்த சூரியதேவருக்கும்,
wikkimedia commons
மேலும் மழை  தரும்  மேகமான இந்திரதேவருக்கும்    
 விவசாயிகளின் உழைப்பிற்கும்,    
 நன்றி சொல்லி  கொண்டாடப்படும்   
 திருவிழா பொங்கல் திருவிழா .

பொங்கல் திருவிழா நான்கு நாள்களாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் தோன்றும் முந்தைய நாளில் வீட்டில்  உள்ள அணைத்து இடங்களையும் ஜன்னல் ,கதவு,வாசல்,

பொருட்கள்  சுத்தம் செய்தும்,  வீட்டை  சுற்றி  உள்ள இடங்களையும்
சாணம் இட்டு சுத்தபடுத்தியும்.   

Wikimedia Commons

வாசலில் பொங்கப்பானையை போன்ற வண்ண கோலங்களையும் இட்டு அலங்கரித்திருப்பர்.

 Wikimedia Commons






பொங்கலுக்கு  தேவையான  பானையை சுத்தம் செய்து அரிசி மற்றும் பால் கலவையில்  ஆன ரசத்தை கொண்டு பானையை சுற்றி அழகாக 
   ஓவியம் இட்டு அலங்கரித்து வைத்திருப்பர் .



முதல் நாளான போகி பொங்கல் அன்று இரவு வீட்டின் முற்றத்தில் அக்னியிட்டு  அதில் தேவைப்படாத மரத்தாலான பொருட்கள்,பழைய துணிகள் அனைத்தையும் அக்னியில் இட்டு பழையனவற்றை கழித்திடுவர்.
இவ்வாறு பழைய பொருட்களை அன்று களித்து புதியன புகுத்தலுக்கு வழிசெய்வர் . மேலும் மனதில் உள்ள தேவையற்ற சிந்தனைகளையும்,பழைய பகை,போன்ற எண்ணங்களையும் மறந்து அதை களித்து நண்பர்களுடன்,சுற்றத்துடன் இணைந்து கொண்டாடுவர் . இதுவே புதியன புகுத்தலின் தொடக்கமாக கருதினர் .



==.wikimedia=



அன்று மாலை வீட்டை சுற்றி முக்கிய முடிவுகளில், கூரைகளில்,சுவற்றில்,வாசலில்  மருத்துவ குணம் நிறைந்த பூளை 

பூ,வேப்பபிலை சேர்த்தி காப்பு கட்டுவர் .
இதன் மூலம் அந்த வீட்டில் எதிர்மறை சிந்தனைகள்,தீய சக்திகள் ,திருஷ்டி போன்ற எதிர்மறை அலைகள் நெருங்காமல் அந்த வீட்டை சுற்றியும் பாதுகாப்பு கவசமாக விளங்கும் என்பது பின்பற்றப்பட்டு வரப்படுகிறது .




இரண்டாம் நாள்  உயிர்கள் வாழ காரணமாகிய சூரிய தேவருக்கு நன்றிசெலுத்தும் நாளாக கருதப்படுகிறது.  தை பொங்கலில் திறந்தவெளியில் செங்கல் போன்ற கற்களை வைத்து கோலத்தால் அவற்றை அலங்கரித்து  ,காய்ந்த மர  துண்டுகளை கொண்டு  நெருப்பிட்டு, மண்பானையில் மாஇலைகளை சுற்றி கட்டி, பானையின் எதிரே ஒரு கோலம் இட்டு ,மஞ்சள் குங்குமம் இட்டு ,கரும்புகளை இருபக்கமும் வைத்து ,அரிசி ,தண்ணீர் ,வெல்லம் ,நெய் போன்றவற்றை கொண்டு பானையில் ஊற்றி சூரியதேவரை வணங்குவர்  .


பொங்கல் வைத்து பொங்கும் பொழுது லக்ஷ்மிதேவி அனைத்துவிதமான செல்வங்களையும் தந்தருள்வார் என்று மனதில் எண்ணி வேண்டிக்கொள்வர்.

 பின் வாழை இலைகலில்  பொங்கலை வைத்து அனைவருக்கும் பகிர்வர். வடை ,பாயசம்,பச்சை மாவு  போன்ற பலகாரங்கள் தயாரிக்கப்படும் .
இரவு வீட்டின் ஒருமுற்றத்தில் உறவினர்,சுற்றத்தார் ,நண்பர்கள் முறுக்கு ,இனிப்பு பலகாரங்கள் போன்றவற்றை உறவினருக்கு பகிர வாலி வாலியாக தயார் செய்து வைப்பார்.







மூன்றாம் நாள்  விவசயிகளின் உழைப்பிற்கு முக்கிய பங்கு கொண்டுள்ள மாடுகள் அனைத்தும் வனங்கபெருகின்றன . மாட்டு பொங்களின்   பொழுது மாட்டை அழகாக அலங்கரித்து ,திலகம் இட்டு ,பூ மாலை 
அணிவித்து ,கொம்புகளுக்கு வண்ணம் பூசி, கழுத்திற்கு அழகிய மணிகள் கட்டப்பட்டு, கரும்புகள் பகிரப்பட்டு ,மாடுகளுக்கு ஆரத்தி எடுத்து
 வணங்கி ,புற்கள் ,வாழைப்பழங்கள் போன்றவற்றை சுற்றத்தார் மற்றும் அனைவரும் மாட்டிற்கு வழங்குவர் .பின் ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டிற்கு காளைகளை பூஜை செய்து அனுப்பிவைப்பர் .சுற்றத்தார் மாட்டு வண்டியில் ஏறி நெடுதூரம் பேசிக்கொண்டு அந்த நாளை முடிப்பர்.

 Wikimedia Commons

நான்காவது நாள் காணும் பொங்கலாக கருதப்படுகிறது ,நண்பர்கள்,உறவினர்கள் அனைவரையும் நேரில் சென்று  சந்தித்து தின்பண்டங்களை பகிர்ந்து ஒன்றாக உரையாடுவார் .உளவு தொழிசெய்த உள்ளவர்களுக்கு உதவி புரியும் அனைவருக்கும் நன்றி கடன் செலுத்தப்படும் இந்த நாள் உழவர் திருநாள் என்றும் கருதப்படுகிறது.

பட்டு ஆடை ,பாரம்பரிய ஆடைகள் அணிந்து  நாதஸ்வரம் ,முரசு மேளம் கேட்டு ,பாரம்பர்ய நடனங்கள் பார்த்தும்,கோவிலுக்கும் சென்று மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாடி மகிழ்வர் .




நன்றி 


happy pongal


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"

சிவனின் நந்தி தேவர் - LORD SHIVAS NANDI , THE STORY BEHIND NANDI