விநாயகரின் அருகம்புல்-STORY BEHIND LORD GANESHA'S SACRED GRASS
குறிப்பு : கணேஷ புராணம் ,நந்தி புராணம்
யாக்ஷினி தேவி என்னும் அப்சரஸ் பெண் விநாயகரை திருமணம் செய்துகொள்ள விரும்பி தவம் இருந்தால் .விநாயகரும் திருமணம் செய்து கொள்ள முன்வந்தார் .ஆனால் பார்வதி தேவி திருமணத்திற்கு விருப்பம் கொள்ள வில்லை இருப்பினும் யாக்ஷினி தேவி உலகில் அருகம் புல்லாக உருவெடுத்து விநாயகருக்கு என்றும் விருப்பமான பொருளாக இருக்குமாறு வரமளித்தார் என்று சில புராணங்களின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் .
அன்று பார்வதி தேவியும் சிவனும் அவர்களுக்குள் ஒரு போட்டியை நடத்தினர். அதில் பார்வதி தேவி வெற்றிபெற்றார் சாட்சியாக இருவருக்கும் எதிரில் அமர்ந்து இருந்த சிவ பெருமானின் மகனாக சிவனே அறிவித்த நந்தி தேவரிடம் பார்வதி தாயார் கேட்டார் யார் உண்மையான வெற்றியாளன் என்று.நந்தி தேவர் தன் விருப்பத்திற்கும் பெருமைக்கும் உடைய சிவ பெருமானை தோல்வி யாளர் என்று சொல்வதற்கு விருப்பமில்லை ஆதலால் பொய்யென தெரிந்தும் சிவ பெருமானை வெற்றியாளன் என்று அறிவித்தார்.
பார்வதி தேவி கோபத்துடன் நந்தியை தீர்க்க முடியாத நோய்கள் வந்து சேரும் உனக்கு என்று சபித்துவிட்டார் .
நந்திதேவர் தான் தள்ளப்பட்ட இந்த சூழலுக்கு சிவ பெருமான் மீது உள்ள பக்தியும் ,அன்பும் காரணம் என்பதை பார்வதியிடம் கூறினார் .
பின் நந்தி தேவரின் விசுவாத்தையும் தனக்கு விருப்பமான சிவபெருமானை விட்டுக்கொடுக்க இயலாததால் நந்தி தேவர் அ வ்வாறு பொய்ச்சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதை உணர்ந்து கொண்டார் தன் சாபத்தில் இருந்து விடுபட ஒரு வழியையும் கூறினார்.
அந்த வழியானது வருகிற கணேஷ சதுர்திகளின் பொழுது தனக்கு மிகவும் விருப்பமான ஒரு பொருளை கணேசனுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதே ஆகும் .நந்தி தேவர் தனக்கு மிகவும் பிடித்த அருகம்புல்லையே விநாயகருக்கு சமர்ப்பித்து தீராத நோய் என்னும் சாபத்தில் இருந்து விடுபட்டார் .
அருகம்புல்லுக்கு ஈடானதது எவையும் இல்லை என்பதை புராணங்களின் மூலம் அறியலாம் .குபேரரும் தன்னுடைய செல்வங்களுக்கு மேலானது இந்த அருகம் புல் என்று கூறியிருக்கிறார் .வேறுபட்ட கதைகளும் உள்ளன இவற்றை நிரூபிக்கும் வகையில் .
அதில் ஒன்று விநாயகர் அனலசுரன் என்னும் நெருப்பை கண்களால் உண்டாக்கும் யமனின் மகனான இந்த அசுரனை யுத்தம் கொண்டு வீழ்த்தினார் .தன்னை விழுங்க எண்ணிய அசுரனை விநாயகர் வானளவு உயர்ந்து அனலாசுரனை முழுங்கிவிட்டார் .
அவனது நெருப்பால் விநாயகர் உடல் தாங்க இயலவில்லை அனைத்து தேவர்களும் முயற்சித்தும் ஒன்றும் செய்ய இயலவில்லை .
அதாவது குளுமையின் அடையாளமான சந்திரனின் தூளையும் விநாயகரின் தலையில் வைத்தனர் ,சந்தனத்தையும் உடலில் பூசினார், விஷ்ணு தேவர் தாமரையை விநாயகரின் கையில் வைத்தார் ,வருண தேவர் மலையையும் பெய்தார் ,சிவ பெருமான் கழுத்திலிருந்த நாகத்தை விநாயகரின் உடம்பில் கட்டினார் இதனை செய்தும் வெப்பத்தை குறைக்க இயலாது போனது.
அங்கே தோன்றிய 18 ரிஷிகள் அல்லது சித்தர்கள் 21 அருகம் புல்லை கோர்ந்து வந்தனர்.
அதை விநாயகர் தலையில் வைத்தவுடன் உடனடியாக அவர் குணம் மடைந்ததாக கூறபட்டுள்ளது .
பாற்கடலில் இருந்து எடுத்த அமிர்தம் அருகம்புல்லில் மீதும் விழுந்ததாகவும் .இந்த புள்ளிற்கு அழிவென்பதே இல்லை என்பதையும் அறியலாம் .இதை பூஜைகளின் பொழுது கலச சேமிப்பில் உள்ள நீரில் போடுவதால் நீர் சுத்தமடைவதாகவும் ,அந்த நீரை ஏதன் மீது தொழித்தாலும் அந்த பொருள்ழும் சுத்தமடைவதாகவும் நம்பப்படுகிறது . இந்த புள்ளிற்கு ஆகர்ஷண சக்தியையும் உறிஞ்சும் தன்மை இருப்பதாலும் தேவையற்ற காந்த மற்றும் தீய சக்திகளை விலக்கி வைக்கும் தன்மை இருப்பதாகவும்
கூறப்படுகிறது .இதை பூஜைகளில் சுமார் 1500 C E லிருந்து பயன் படுத்தி வருவதக்க கூறப்படுகிறது .
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக