விஷ்ணுதேவரின் நரசிம்ம அவதாரம் - REASON BEHIND THE LION FACED AVATAR OF LORD VISHNU- A SHORT STORY





hello! if you enjoy reading our blog or finding the contents useful please go below and comment your views as well as type your email on the left column and subscribe for news letters.


-all articles by admin ssg


முன்னுரை 






தன்  பக்தர்களுக்கு துயரம் வந்தால் உடனேயே வரும் காக்கும் தெய்வம் விஷ்ணு பெருமான் .அதர்மம் நிலைக்காது செய்பவரும் அவரே .அசுரர்களிடம் இருந்து ஓயாது மூவுலகையும் காப்பவரும் அவரே.


குறிப்பு 

ரிக்வேதம் ,யஜுர் வேதம் ,பாகவாத

புராணம் ,லிங்க புராணம் 




Vaishnava yoga meditative posture (Yogananda Guru)(~ 22 feet) date to pre-17th century period of South Indian history, particularly those related to the Hindu Vijayanagara Empire era (14th-16th centuries)


விஷ்ணுதேவரின் நரசிம்ம அவதாரத்தின் குறிக்கோள் 

ஹிரண்யாக்ஷனின் அழிவை தாங்க முடியாத அவனது சகோதரன் ஹிரண்யகசிபு மந்தாரா மலையில் கடும் தவம் இருக்கிறான் .

பக்திக்கு மதிப்பளிப்பவர்களே நமது இறைவன் . பிரம்ம தேவர் அங்கே தோன்றி அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார் .
தான் இரவிலும் அல்ல,
பகலிலும் அல்ல ,
உள்ளேயும் அல்ல ,
வெளியேவும் அல்ல ,
மனிதரால் அல்ல,
 மிருக்கத்தாலும் அல்ல ,
பேயாலும் அல்ல
இவற்றால் எனக்கு அழிவே அல்ல
என்ற வரத்தை கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக்கொள்கிறான் .பின் பூலோகத்தையும் சொர்கலோகத்தையும் கைப்பற்றிவிட்டான் .விஷ்ணு தேவரின் பக்தர்களை துன்புறுத்துவதே அவனது வாடிக்கையாக இருந்தது. .

மூன்று லோகத்தையும் துன்பத்தில் இருந்து மீட்டிட இவனை அளிப்பதற்க்கே விஷ்ணுதேவர் நரசிம்ம அவதாரம் எடுக்க அவசியம் ஆயிற்று .

இவனது மகன் பிரகலதன் விஷ்ணு தேவரின் தீராத பக்தன் என்பதை அறிந்தான் ஹிரண்யகசிபு  .தன மகனை கொள்ள அவன் எடுத்த முயற்சிகள் யாதும் பலிக்கவில்லை .ஏனெனில் விஷ்ணு தேவர் தன பக்தர்களிடத்து என்றும் துணையாய்  இருப்பார் .மூவுலகத்திலும்  தானே சிறந்தவன்  என்று கூறுமாறு பிரகலதனிடம் கட்டளையிட்டான் .
 ஆனால் பிரகலதன் உமக்கும் என்னக்கும் இந்த உயிரை கொடுத்தவரும் விஷ்ணு தேவரே  ,
அவரே இந்த  பிரபஞ்சத்திழும் தூணிலும் துரும்பிலும் இருப்பவர் ,அவரே சிறந்தவர் என்றான் பிரகலதன் .

எங்கே இந்த தூணில் உன் தேவர் உள்ளாரா? என்று கூறி துணை காலில் உதைத்தான் .தூணிலிருந்து விஷ்னு  தேவர் நரசிம்ம
அவதாரத்தில் தோன்றினார் .
மனிதரும் அல்ல ,
முழு தேவரும் அல்ல,
அசுரனும் அல்ல ,
பேயும் அல்ல
வந்திருப்பது நரசிம்மரே ஆவர் .
அப்பொழுது இரவும் அல்ல
 பொழுதும் அல்ல
இரண்டிற்கும் நடுவில் இருக்கும் காலம் .

அரக்கனை உள்ளேயும் அல்ல வெளியேவும்  அல்ல இரு சிங்கத்தின் நகங்களால் வயிற்றை கிழித்துவிட்டார் நரசிம்மர்  .மூவுலகையும் அசுரர்களிடம் இருந்து மீட்டுவிட்டார் விஷ்ணுதேவர் .

         இருப்பினும் நரசிம்மரின் சாந்தமடையாமலே இருந்தது பிரகலதன் வேண்டியும் அவர் கோபம் சாந்தமடையவில்லை .தன்னிலையை இழக்க துவங்கியபொழுது அப்பாவி மக்களும் உலகமும்  அவரை கண்டு அஞ்சியது .
சிவ பெருமான் நரசிம்ம தேவரை கட்டுப்படுத்த  தன் ஜடா முடியிலிருந்து உருவாக்கிய  வீரபத்ரனையும் மற்றும் தன்  விறல் நகத்திலிருந்து உருவாக்கிய  பைரவரையும்  அனுப்பினார் .அப்பொழுதும் விஷ்ணுதேவரால் கட்டுப்படுத்த இயலாததால் .வீரபத்ரனையும் ,இந்த உலகையும்  காப்பாற்றுவதற்காகவும் சிவ பெருமான் சரபேஸ்வரர் 'ஷரபா ' அவதாரம் எடுத்தார் இதில் அவர்க்கு எட்டு மான்களை போன்ற கால்களும் சிங்கத்தை போன்ற தலையும் ,பறவை போன்ற பறக்கும் இறகுகளையும் ,ஆயிரம் அல்லது நான்கு கைகளையும் ஒருவராக தோன்றி நரசிம்மரை தூக்கி சென்று வதம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது .



நன்றி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"

சிவனின் நந்தி தேவர் - LORD SHIVAS NANDI , THE STORY BEHIND NANDI