விஷ்ணுதேவரின் கூர்ம அவதாரம்-THE AVATAR LIKE A TORTOISE LIFTING A MOUNTAIN ON ITS BACK PREVENTING FROM BEING SINKING IN THE OCEAN
hello! if you enjoy reading our blog or finding the contents useful please go below and comment your views as well as type your email on the left column and subscribe for news letters.
-all articles by admin ssg
தேவர்களுக்கு ஏற்படும் துன்பம் பிரபஞ்சத்தையும் பாதிக்க நேரிடும்போது முமூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுதேவர் பிரபஞ்சத்தில் நிலைத்தன்மையை கொண்டுவர தேவர்களை(வாயு தேவன் ,சூரிய தேவன் ,சந்திர தேவன் என அனைத்து தேவர்களையும் )காப்பாற்ற அவதாரம் எடுக்கிறார் .
குறிப்பு
யஜுர் வேதம் (சதபத ப்ரஹமானா )
வைஷ்ணவ புராணங்களின் படி இதுவே நடந்திருக்கிறது ;
துர்வாச முனிவரின் சாபத்தை தேவர்கள் பெற நேர்ந்தது .தேவர்கள் இதை சரி செய்ய பாற்கடலை கடைந்தே ஆகவேண்டிய நிலை ஏற்பட்டது .பாற்கடலை கடைவதால் அமிர்தம் கிட்டும் ,அமிர்தத்தை பருகுவதால் அழிவில்லாத நிலை ஏற்படும் .
அதில் இருக்கும் அமிர்தத்தை பெறுவதற்காக "மண்தாரா"
என்னும் மலையை கடையும் கருவி போல் பயன்படுத்தினர் ,வாசுகி என்னும் நாகத்தையும் கயிறுபோல் தேவர்கள் பயன்படுத்தினர் .மந்தாரா மலையை வைத்து கடையும்போது அமிர்தத்துள் மூழ்கி விடாமல் இருக்க விஷ்ணு தேவர் ஆமை போன்ற பாதி உடலை கொண்டு மலையின் அடியில் சென்று மூழ்காமால் இருக்க சுமந்துள்ளார் .
பாற்கடலை கடையும் போது நன்மையையும் தீமையும் கலந்தே வருகின்றது.வாசுகி நாகத்தின் வாயில் இருந்து விஷம் வெளிய வர துடங்கியது .அதன் தலைக்கு அருகில் இருந்த அசுரர்கள் அதை தாங்கிக்கொள்ள இயலாது அங்கிருந்து ஓடிவிட்டனர் . தேவர்கள் சிவபெருமானின் உதவியை நாட.சிவா பெருமான் அங்கே தோன்றி அந்த விஷத்தை பருகிவிடுகிறார் . தன் தொண்டையின் வழியில் உடலில் இறங்குமுன் பார்வதி தேவி அவரது கழுத்தை பிடித்து தடுக்கிறார் .விஷம் அங்கேயே நின்றுவிட்டது .இதன் காரணமே அவரது கழுத்தில் நிலா நிறம் தோன்றியது .இதை தங்கி கொண்ட அவரை நீலகண்டன் என்றே கூறுகின்றனர் .
பாற்கடலை கடைந்த பின் அமிர்தத்தை அசுரர்களிடம் இருந்து பாதுகாக்க விஷ்ணு தேவர் எடுத்த மற்றொரு அவதாரம் தான் மோஹினி
அவதாரம் .
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக