கார்த்திகை தீபம்



                   

                 கார்த்திகை தீபம் கார்த்திகேயன் {குமரன் ,முருகன்,கந்தன் ,வேலன்,சுப்ரமணியன்,ஆறுமுகன் }போன்ற பெயர்களால் அழைக்கப்படும் முருகப்பெருமானின் பிறந்தநாளாகும்.

திருவண்ணாமலையில் சிவ பெருமான் அன்று அக்னி லிங்கமாக அமர்ந்த நாள் கார்த்திகை திருவிழா.அன்று சிவ பெருமானின் பக்தர்கள் ஜோதி வடிவில் அமர்ந்த சிவபெருமானின் அக்னிலிங்கத்தை கண்டு வழிபட கோடியில் திரண்டுவருவர்.

                 கார்த்திகை தீபம் கொண்டாட படுவதற்ககு நிறைய வேறுபட்ட கதைகள் தோன்றினாலும் ,மிக பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றை இங்கே விளக்குகிரேன் .

                   கார்த்திகை மிகவும் தொன்மைவாய்ந்த ஒரு பண்டிகையாகும் கார்த்திகை நன்னாளை பற்றி  ஒவ்வையாரும் தன் பாடலில் 
கூறியுள்ளார் ,அகநானூறு என்னும் மிக தொன்மைவாய்ந்த தமிழ் நூலிலும் இதை பற்றி கூறப்பட்டுள்ளது .

                     கார்த்திகை தீப திருநாள் அதிகம் தமிழகத்திலும் ,கேரளம் மற்றும் இலங்கையிலுமே கொண்டாடப்பட்டுவருகிறது .


                    அவர் பிறப்பிற்கு காரணமாக இருந்த கார்த்திகை பெண்களான ஆறு பெண்களும் நிதார்தனி,அப்ரகேந்தி,மெகந்தி ,வார்தாயேந்தி ,அம்பா ,துலா சிவ பெருமானின் ஆறு முகங்களில் இருந்து தோன்றியதாக கூறப்பட்டுள்ளது.  கார்த்திகை திருநாளில் இவர்களும் வணங்க படுகின்றனர்.

சிவ பெருமானே இந்த  பிரபஞ்சம்,வெற்றிடம்,காலம் இவரே முதலில் தோன்றியவர் .சிவ பெருமான் பிரபஞ்சமாக தோன்றும் பொழுதே சக்தியாக ஷக்தி தேவி தோன்றிவிட்டார் என்பதை புராணத்தின் வாயிலாக நாம் அறியலாம் .  
சிவபெருமான் தோன்றியபின்பு , சிவ பெருமானின் இந்த பிரபஞ்சத்தை காக்க சிவபெருமானிடத்திலிருந்தே தோன்றியவர் விஷ்ணுதேவர்.நீரின் மீது ஆதிசேஷன் மேல் படுத்திருப்பவர் . 

விஷ்ணுதேவர் இடத்திலிருந்து தோன்றியவர் படைக்கும் தெய்வமான   பிரம்ம தேவர்.இவர் நீரின் மீது தோன்றும் தாமரை போல் விஷ்ணுதேவரின் தொப்புள்கொடியிலிருந்து கோடியை மேல் ஓங்கிநிற்கும் தாமரை மீது அமர்ந்திருப்பார்.
ப்ரம்மதேவரும் ,விஷ்ணுதேவரும் பிரபஞ்சத்தில் தோன்றியபின் 
  இருவரும் தன்னை விட சிறந்தவர் யார் என்று ஒருவர்க்குஒருவர் ஆணவத்தோடும் ,கர்வத்தோடும் தற்பெருமைகளால் போட்டியிட்டு கொண்டிருந்த பொழுது சிவ பெருமான் அவர்கள் முன் மிகவும் கோபத்துடன் அக்னிவடிவில் தோன்றினார் அவர் அவர்களிடத்து இருந்த ஆணவத்தை போக்க சிவனையும் விட சிறந்தவர்கள் எவரும் இல்லை என்பதை புரியவைப்பதற்காக ஒரு மிக பெரிய  வடிவெடுத்து நின்றார். ப்ரம்ஹா தனது வாகனத்தை கொண்டு மேலே சென்று  உச்சி முனையை பார்க்க நினைத்தார் அவரால் சிறிதும் முடியவில்லை ,விஷ்ணுவும் கீலே சென்ற பொழுதும் கீழ் பாகத்தை பார்க்க இயலவில்லை ,எண்ணில் அடங்காத கணக்கில் அடங்காத உயரத்தையே அடைந்தும் அவரை முழுதும் பார்க்க இயலவில்லை பின்  சிவ பெருமான் கோபம்கொண்டு தனது ஆறுமுகங்களில் இருக்கும்  மூன்றாவது கண்ணை திறக்க அதில் இருந்து வெளிப்பட்ட சில பொறிகள் கங்கை ஆற்றில் உள்ள ஆறு தாமரைகள் மேல் விழுந்தன அங்கே ஆறு குழந்தைகள் தோன்றின என்றும் அதை கண்ட ஆறு  கார்த்திகேய பெண்களான ரிஷிகளின் மனைவிகள் அந்த குழந்தைகளை தங்களது போல் பாதுகாத்து வந்தனர் பின் அவர்களின் செயலுக்கு சிவ பெருமான் அவர்களுக்கு அழியாத நட்சத்திரங்களாக  நீங்கள் என்றும் இருப்பீர்கள் என்ற வரத்தை அளித்தார் .
அந்த ஆறு குழந்தைகளும் பார்வதி தேவியின் சக்தியால்  ஆறு தலைகுலையுடைய வீரனாக ஒன்றாக்கப்பட்டது .

    இவாறு நமது குமரன் ,வேலன்,கந்தன் என்று நாம் அழைக்கும் ஆறுபடை வீரனான முருகன் தோன்றினார் .என்று ஒரு சில நூல்களில் கூறப்பட்டுள்ளது 



         சிவ பெருமான் அவ்வாரே விஷ்ணு மற்றும் ப்ரஹ்மரின் ஆணவத்தை அழித்து திருவண்ணாமலையில் அக்னி லிங்கமாக உருவெடுத்தார். சிவலிங்கம் அக்னிலிங்கமாக காட்சியளிப்பது இங்கு மட்டும்தான் .ஆகவே கார்த்திகை நட்சத்திர நாள் இங்கு சிவ பெருமான் அக்னி லிங்கமாக பூலோகத்தில் அவதரித்துள்ள நாள் .இங்கே பெருவிழாவாக கொண்டாட படுகிறது .  திருவண்ணாமலை என்றாலே கார்த்திகை தீபமே அக்னிலிங்க வடிவில் பூலோகத்தில்  அண்ணாமலையனே அமர்ந்துகொண்டார் என்பதே நினைவில் வரும்.





திருவண்ணாமலையில் கோலாகலமாக கொண்டாட படும்  கார்த்திகை தீப திருவிழா .
    
          கார்த்திகை பெருவில்லாவாக தமிழர்கள் முன்னூறு வருடங்களாக கொண்டாடி வருகின்றனர் .இன்று இரவு முருகனை எண்ணியே மந்திரங்களும் கூறி ,விரதமும் இருந்து ,வீட்டில் கார்த்திகை விளக்கை ஏற்றி வழிபடுங்கள் .
           கார்த்திகை பெண்களுக்கு நன்றி கடன்செலுத்துங்கள் ,சிவபெருமானின் மூன்றாவது கண்னின்  மகிமையையும்,அனைத்திற்கும் ஆதியாக விளங்கும் சிவ பெருமானையும் போற்றிடுவோம் ,ஷக்தி வடிவமாகிய பராசக்தியையும் போற்றிடுங்கள் முருகனின் அருளை முழுதும் பெற்றிடுங்கள் ,வீட்டில் உள்ள இருளான அகந்தை ,பொறாமை ,ஆணவம் ,கர்வம் போன்றவற்றை அளித்திடுங்கள்.

    
மற்ற புராணம் படி எழுதப்பட்டவை  :

            சவ்ர புராணத்தின் படி சிவனும் சக்தியும் திருமணம் முடிந்து பின் சிவனின் குழந்தை பார்வதி தேவியின் வயிற்றில் பிறப்பது அனைத்து தேவர்களும் வேண்டாமென கருதினர் .அவ்வாறு  நடந்தால் அக்னி தேவர் அழிந்துவிடுவார்   என்றும் கருதினர் .ஆதலால் நாரத முனிவரின் ஆலோசனை படி அக்னி தேவர் சிவனிடம் பக்தியுடன் கூற .அவர் தனது உடலிலிருந்து ரித்திகா சக்தியை அணைத்து தேவர்களுக்கும் கொடுத்தார். அக்னியால் அதை தாங்க இயலாததால் கங்கையில் விட்டதாகவும் அது கார்த்திகேய பெண்கள் அல்லது கிருத்திகை என்னும் நட்சத்திர பெண்கள் இதை கண்டு குழந்தையை வளர்க்க ஆசைபட்டதாகவவும் அல்லது  அவர்கள்  உடம்பில் கலந்து விட்டதாகவும் .ஒவ்வொருத் துண்டுகளும் ஒவ்வொருவர் வயிற்றில் , ஒவ்வொரு உறுப்பாக ,ஒவ்வொரு திதிகள் வளர்ந்து பின் பார்வதி தேவியால் ஒன்றிணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது .கந்தன் ஏழாவது திதியில் முழுதாக கந்தன் தோன்றியதாக கூறப்படுகிறது .

      
   

நன்றி


if you like reading my posts please go below and comment your views!




recommended:

தீபம் ஏற்றுவதற்கு காரணம் என்ன? அதற்கான அறிவியல் பின்னணி என்ன? இந்தக் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை, எதை செய்தாலும் அதை மனித நல்வாழ்விற்கு வழிவகுக்கும் வகையில், விஞ்ஞான ரீதியாகவே செய்தார்கள்.click here to read more...


கார்த்திகை தீபத் திருநாளில் பொரி பொரித்து வழிபடுவது ஏன்? 





கார்த்திகை அன்று கடைபிடிக்கவேண்டிய விரத முறைகள்!!




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"

சிவனின் நந்தி தேவர் - LORD SHIVAS NANDI , THE STORY BEHIND NANDI