விஷ்ணுதேவரின் பரசுராம அவதாரம் -WHY VISHNU TOOK PARASURAMA AVATAR AND HE IS STILL EXISTING ON EARTH




hello! if you enjoy reading our blog or finding the contents useful please go below and comment your views as well as type your email on the left column and subscribe for news letters.

-all articles by admin ssg

முன்னுரை 
ஆனவத்தில் பதவியை தவறுதலாக பயன்படுத்தி.தேவர்கள் மீது நம்பிக்கை இழந்து ,  பிறரை அடிமைப்படுத்தி  துன்பப்படுத்தி  ஆளும் போது  அப்பாவி மற்றும்  பக்தியுடையவர்களை காப்பதற்கு விஷ்ணு தேவர் எடுத்த
அவதாரம் .பரசுராமர் அவதாரம் .தீமைமிக்கவர்க்கே கோபம்  மற்றும் பழிவாங்குவதில் வெறியாய் கொண்ட வராக இருந்து  அவர்களை அளிக்கிறார்  .
இவரது மற்ற அவதாரங்களான ராமர் அவதாரம் போல் இந்த அவதாரத்திற்கு அழிவில்லை என்று பாகவத புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பு 
மஹாபாரதம் ,விஷ்ணுபுராணம்
https://commons.wikimedia.org/wiki/File:Parasurama1790s.jpg

விஷ்ணுதேவரின் பரசுராம அவதாரத்தின் குறிக்கோள் 
ஜமதக்னி  முனிவர்க்கு  ஏழாவது  மகனாக பரசுராமர் பிறக்கிறார் .பரசு என்றால் கோடாலி ,ராம் என்கிறபோது கோடாலியை  கொண்டவன் .இந்த பெயரின் அர்த்தமே அவர் அவதாரத்தை சரியாக விளக்குகிறது .
இவருடைய புத்திசாலித்தனத்தை குறிக்கும் ஒரு நிகழ்வை இங்கே கூறுகிறேன்.
ஒரு நாள் இவரது தாயார் ரேணுகாதேவி பூஜைக்கு நீர் தேவை என்பதால் மண்  பானையை செய்ய ஆற்றிற்கு செல்கிறார் அப்போது அங்கே இந்திர தேவனின் தூதர்களின் அழகை கண்டு வியக்கிறார் .மனதின் கவனம்   நிலை தன்மையை இழந்து விட்டது .பானையும் செய்ய வரவில்லை .பொழுதும் சாய்ந்துவிட்டது.

 இவரது வருகையை எதிர்பார்த்து இருந்த ஜமதக்கினி நடந்ததை  தவத்தால் அறிந்து கொண்டார் .கணவர்  இருக்கையில் இன்னொரு ஆண்மகனை அழகு என்று ரசித்ததை அறிந்து கோபம் கொண்டஜமதக்னி முனிவர்  தனது ஆறு மகன்களிடம் ஒவ்வொருவராக அழைத்து தனது  தாயின் தலையை துண்டிக்குமாறு கேட்டார் .அனைவரும் மறுத்துவிட்டதால் அவர்களை கற்சிலையாக மாற்றிவிட்டார் .

பரசுராமர் அனைவரையும் இலக்க விரும்பவில்லை .பரசுராமர்  தன்  தந்தையின் ஆனைப்படி தன்  தாயை சந்தித்து நடந்ததை அனைத்தையும் கூற.அவரது தாய் தான் குற்றம் புரிந்தது எண்ணி தன்னை துண்டிக்குமாறு
 கண்ணீர் விடுத்தார். பின்  தன் தாயின் தலையை துண்டித்து விடுகிறார் பரசுராமர்.

வீட்டிற்கு சென்று தனது  தந்தையிடம் கூற ,
நீயே எனது மகன் என்று நிரூபித்து வீட்டாய் உனக்கு என்ன வரம வேண்டும் என்று கேள் என்றார்ஜமதக்னி .பரசுராமர்  தனக்கு இரண்டு வரம் வேண்டும் என்று கூறினார் .ஒன்று தன்  சகோதரர்கள் மீண்டும் உயிர்நிலைக்கு வர வேண்டும் என்றும் மற்றொன்று தன்  தாய் மீண்டும் உயிர் பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் .அவரது வரம் நிறை வேற்றபட்டது .அனைவரும் ஒன்று சேர்ந்தனர் .

ஷத்ரிய ராஜாக்களின்  ஆனவத்தை அளித்த பரசுராமர்  :

க்ஷத்ரிய ராஜா கர்த்தவிர்யா அர்ஜுனா   ஒரு நாள் மதங்க முனி ஆஸ்ரமத்திற்கு வந்தார் அங்கே விருந்துண்டார் அது அரண்மனையிலும் கிடைக்காத  சுவையான ஒரு உணவு.இதை தந்தது காமதேனு என்னும்
 கேட்டதை அளிக்கும் பசு என்பதை அறிந்து அதை ஜமதக்கினியிடம்
தனக்கு தந்துவிடுமாறு கேட்டார் .ஜமதக்னியை உணவளித்தவர் என்றும் பாராமல் தான் ராஜா தனக்கே அது தேவை உங்களை போன்றவற்றுக்கு ஏன் இது இருக்க வேண்டும் என்று உரையாடினார்.ஜமதக்கினியிடம் தான் இப்பொழுது செல்வதாகவும் பின் ஆட்களை அனுப்பிவைப்பதாகவும் கூறிவிட்டு அரண்மனைக்குச்சென்றுவிட்டார் .

.ராஜா முதலில் பசுவை களவாட  அனுப்பிய காவலர்களைஜமதக்னி  கொன்றுவிட்டார் .

ராஜா கோபம் கொண்டு ஜமதக்னிதியானத்தில் இருக்கும் பொது அவரை கொன்று விட்டான் .

பரசுராமர்  மிகவும் புத்திசாலியாகவும்,தீயவர்களை அளிப்பவராகவும் ,  சிவனின் மேல் இவர்க்கு இருக்கும் பக்தியானது மிகவும் பெரியதாகும் . அனைத்து கலைகளிலும் வல்லவராகவும் பிற்காலத்தில் விளங்குகிறார் .
பரசுராமர் நெடுநாள் சிவனின் மீது தவத்தை கொண்டு சிவபெருமான் அவர்க்கு காட்சி யளிக்க அவரிடம் க்ஷத்ரியராஜாவை அளிக்கும் சக்தி வேண்டும் என்று கேட்கிறார் .

சிவ பெருமான் ஒரு கோடாலியை கொடுக்கிறார் இந்த கோடாலியால்  எவற்றை  வேண்டுமானாலும் அளிக்க இயலும் என்று கூறி  அதை கொடுத்து சென்றுவிட்டார் சிவ பெருமான் .அந்த  கோடாலியை கொண்டு பரசுராமர் க்ஷத்ரிய ராஜாவை கொன்றார் .

மற்ற ஷத்ரிய ராஜாக்களும் இதை பொறுக்க இயலாமல் ஒரு பிராமணன் எவ்வாறு க்ஷத்ரியர்களை கொள்ள இயலும் என்று ஆனவத்தோடு பரசுராமரை ஒன்றின் பின் ஒன்றாக மொத அனைவரையும் பரசுராமர்  அளித்து விட்டார்.

தசரதன் க்ஷத்ரிய  மன்னர்களுள்   ஒருவர் அவரிடம் யுத்தம் புரிய செல்லும் போது அவர் வயதடைந்ததால் பின் வாங்கினார் இதை அறிந்த பரசுராமர் அவரை விட்டுவிட்டார்.

பின் ராமரை சந்தித்தார்,ஷத்ரியர்கள் என்றாலே போர்க்குலத்தை  சேர்ந்தவர்கள் என்றதால்  ஆணவத்தில் ஆடிய அனைத்து ஷாக்த்ரியர்களையும் கொன்று விட்ட பின் ராமரும் ஷத்ரீய குளத்தை சேர்ந்தவர் என்று அவரிடம் யுத்தம் புரிய சென்றார் .அங்கே ராமர் சீதையை திருமணம் முடிக்க சிவனின் வில்லை முறித்ததை பார்த்த அவர் கோபம் கொண்டு வாதம் செய்ய முற்பட்டதாக சில குறிப்பிடுகிறது .பின்   ராமரை பார்த்தவுடன் தன்  பிறவியின் பயனறிந்து பரசுராமனின்  கோபம் தன்னையறியாமல் சாந்தமடைந்தது .தன் யார் என்பதை அறிந்து கொண்டார் பரசுராமர் .அவர் கைப்பற்றிய அனைத்தையும் ராஜாக்களுக்கே திருப்பி கொடுத்து விட்டார் ,எளியோர்க்கும் கொடுத்து விட்டார் .பரசுராமரை கண்டாலே அச்சமடையும் அணைத்து ஷத்ரியர்கலின் ஆனவத்தையும் அளித்தார் .


பிரளயத்தில் இருந்து காப்பாற்றிய பரசுராமர் 
கடலின் அலைகள் மேலே எழும்பி இந்தியாவின் மேற்கு பகுதிகள் நீரால் மூட விருந்தன அப்போது பரசுராமர் தன்  கோடாலியை கடலினுள் வீசினார் வருண தேவர் நீரில் இருந்து தோன்றி தான் நிலத்தை  மூழ்கடிக்க போவதில்லை  என்று பின் வாங்கிவிட்டார் .இவராலே இன்று  மேற்கு பகுதிகள்  பாதி நீரில் மூழ்குவதிலிருந்து காக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது .

விநாயகரின் தந்தத்தை முறித்தது பரசுராமர் கோடாலி 
பரசுராமர் தான் பெற்ற கோடாலியை சிவ பெருமானிடம் திருப்பி கொடுக்க்க செல்லும்போது விநாயகர் வழி  மரித்தார் .தன தந்தையின் கட்டளைப்படி உள்ளெ யாரையும் அனுமதிக்க அவர் விரும்பவில்லை .சிவ பெருமான் தனது குரு என்றும் குருவை சந்திக்க யவர்க்கும் அனுமதி தேவை இல்லை என்றார் பரசுராமர் .இருப்பினும் அவரை கணபதி  அனுமதிக்கவில்லை .  பரசுராமர் மேலும் உரையாடினார் தான் மிக தொலைவில் இருந்து வந்திருப்பதாகவும் ,சிவ பெருமானின் தவத்தை அவர் கலைக்கப்போவதில்லை என்றும் ,அவரது காலில்  விழுந்து வணங்கி சென்றிடவே வந்ததாகவும் கூறினார்.இருப்பினும் வந்திருப்பது பரசுராமர் என்று தெரிந்தும்  அனுமதி மறுக்கப்பட்டதை எண்ணி பரசுராமர் கோபத்தில் தன்னுடன் கணபதியை  போர் புரியுமாறு  கேட்டார் .கணபதி தோற்றுவிட்டால் தான் உள்ளெ செல்வதாகவும் கூறினார் .முதலில் கனெக்ஷன் பரசுராமரை தன துதிக்கையால் வீச ,பரசுராமர் கோபத்தில்  கோடாலியை கணபதியை நோக்கி வீசினார் .அது சிவ பெருமானின் கோடாலி என்பதால் அதை தடுக்காமல் நின்றார் கணபதி . அது கணபதியின் ஒரு தந்தத்தை முறித்து விட்டது .சிவன் சக்தி இருவரும் தோன்றினார் பரசுராமர் தான் செய்ததை எண்ணி வருந்தி சிவனிடம் மன்னிப்பு கேட்க .மூவரும் அவரை மன்னித்து ஆசி வழங்கினர் .

நன்றி





நன்றி


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"

சிவனின் நந்தி தேவர் - LORD SHIVAS NANDI , THE STORY BEHIND NANDI