சித்தர்கள்-2
சித்தர்கள் தங்களது சித்திகள் (சக்திகளை ) பிறப்பிலேயே பெற்று விடுகின்றனர் அல்லது சில ஆன்மிக வழியில் சென்று தவம் இருந்து
பெறுகின்றனர் . அந்த ஆன்மிக வழியானது நாம் இப்பொழுது தெரிந்து கொண்டுள்ள பிராணாயாமம் ,ஆசனம் முதலிய பயிற்சிகளை உள்ள அடக்கிய ராஜ யோகம் கூறும் எட்டு கடினமான யோகத்தையும் முறையே பயின்று அதன் உண்மைகளை கடைபிடித்து சித்தர்கள் சித்திகளை பெற்றிருக்கின்றனர்

சித்தர்கள் பெற்றிருக்கும் 8 சித்திகள்
அணிமா - அணுவின் அளவிற்கு தன் உடலை சிறிதாக்கி கொள்வது
மகிமா - மலையையின் அளவிற்கு உடலை பெரிதாக்கி கொள்வது .
இலகிமா - காற்றைப் போல் உடலை லேசாக்கி கொள்வது
கரிமா - எவற்றாலும் உடலை அசைக்க முடியாதளவிற்கு உடலை கனமாக்கி கொள்வது .
பிராப்தி - எல்லாப் பொருட்களையும் தன் வசப்படுத்திக்கொள்வது .
பிராகாமியம் - தன் உடலை விட்டு பிற உடலிற்குள் செல்லுதல் .
ஈசத்துவம் -தேவர்களை போல் எதற்கும் உயிரை அளிக்கவும் ,
காக்கவும் ,அளிக்கவும் முடியும்
வசித்துவம் - அனைத்தையும் (பஞ்ச பூதங்களையும் ) வசப்படுத்திக்கொள்வது .
தமிழ் சித்தர்கள்
- கருவூரார்
- நந்தீஸ்வரர்
- திருமூலர்
- அகத்தியர்
- காலங்கி நாதர்
- பதஞ்சலி
- கோரக்கர்
- புலிப்பாணி
- கொங்கணர்
- சட்டைமுனி
- தேரையர்
- ராமதேவர்
- சிவ வாக்கியர்
- இடைக்காடர்
- மச்சமுனி
- போகர்
- பாம்பாட்டி சித்தர்
- குதம்பை
கருத்துகள்
கருத்துரையிடுக