அஹிம்சையின் தலைவன்


மோகன்தாஸ் கரம்சந் காந்தி அவர்கள் இங்கிலாந்து சென்று சட்டபடிப்பை முடிந்த பின்பு இந்திய  தேசம் திரும்பினார்.இந்தியாவில் உள்ள மக்களை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தி ஆட்சிசெய்ய திட்டமிட்டிருந்தனர் .சட்டபடிப்பை முடித்த மகாத்மாவிற்கு இதை கையாளும் விதம் நன்கெ அறிந்தவர்.இந்தியர்கள் மீது ஆங்கிலேயர்களால் மனிதநேயமற்ற செயல்கள் அதிகரித்திருந்ததை கண்டறிந்தார்.இந்திய மக்கள்  அணைத்து துறைகளிலும் உழைத்தார்கள், அதற்கான ஊதியத்தில் பாதியில் மீதியே கொடுத்தார்கள். சொந்த நாட்டில் விளைந்த  உணவு  பொருட்களுக்கு,விளைக்கவைத்த இந்தியர்களுக்கு அதிக வரியை உண்டாக்கினார்கள் .  ஒருபக்கம் பட்டினியில் மக்கள் செத்துக்கிடந்தனர், மறுபக்கம் இந்திய பொருட்கள் வெளிநாடுகளில் விற்கப்பட்டு இருந்தன.


இங்கு இந்திய  நிலத்தில் விளைந்த பொருட்களை அவர்கள் நாட்டிற்கும் உலக நாட்டிற்கும் கடத்தினர். உணவுகூட கிடைக்காமல் ஆங்கிலேயர்களால் வறுமையாலும்,மரணத்தின் கைகளில் கிடப்பது போலும்  வாடிக்கிடந்தனர் இந்திய மக்கள் .எதிர்துக்குரல் கொடுக்கும் வீரம் நிறைந்த இந்தியர்களை எண்ணில் அடங்காத அளவிற்கு  கொன்று குவி த்துவந்தனர் ஆங்கிலேயர்கள் .

உடல்தோற்றத்தாலும்,நிறத்தாலும்,செழிப்புகளைக்கண்டும் ஆளும் குணம் படைத்த அப்போதைய ஆங்கிலேயர்கள்  ராணுவத்திலும் சிறந்து இருந்தனர் அதைபயன்படுத்தி  சில ராஜ்யங்களையும்  தேச பற்றுக்கொண்ட மன்னர்களையும் கைதுசெய்தும் கொலைசெய்தும் வந்தனர்.
மன்னர்களின் இறப்பு நீங்காத வடுக்களாக மாறிவிட்டது.







இந்தியாவில் பலர் விடுதலைக்காக மிகவும் வீரமாக போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
எதிர்த்து குரல் கொடுக்கும் அனைவரையும் ஒருபக்கம் ஆங்கிலேயர்கள் சிறைபிடித்தும்,கொலைசெய்தும் வந்தனர்.

விடுதலை போராட்ட வீரர்கள் அனைவரும் ஒவ்வொருகொள்கைகளை கொண்டிருந்தனர்.அதாவது ஒருசிலர் ஆயுதத்தை ஆயுதத்தால் அளிக்கவேண்டும்,இந்தியர்களை கொன்றவர்களை பழி வாங்கிட வேண்டும் என்று ஒரு குழுவினரும் மற்ற குழுவினர் காந்திஜியின் கொள்கைகளை பின்பற்றியும் வந்தனர்.மனிதநேயமற்ற சிந்தனைகளை கொண்டிருந்த அப்போதைய பிரிட்டிஷ் கல்லூரியில் தான் மஹாத்மாவும் சட்டம் படித்து இருந்தார்.இருப்பினும் அவர் கொண்டிருந்த ஹிந்து தர்ம கொள்கையான  "அஹிம்சை " உலக மக்களிடையே விழிப்பையும் மனிதநேயத்தையும் வெளிச்சப்படுத்தியது .


 காந்தி கொல்லப்பட்ட அந்த காலகட்டத்தில் அமெரிக்காவில்  மார்ட்டின் லூதர் கிங் 19வயது அப்பொழுது உரிமைக்காக போராடிக்கொண்டிருந்தார்.
 காந்தியின் கொள்கைகளுக்கு ஈற்கப்பட்டு இந்தியா  வந்தார் அப்பொழுது 
காந்தியின் அஹிம்சைவாத  கொள்கைகளை தனது கொள்கையாக மாற்றிக்கொள்ள நினைத்தார் .காந்தியும் சார்ந்த நூல்களை படித்தார்,பின் துன்பத்தையும் அன்பாக ஏற்றுக்கொள்ளும் இது போன்ற கொள்கையை தன் நாடு மக்களிடம் கொண்டுசேர்க்க தனது  மதத்தோடு ஒப்பிட்டு அதை அன்பான மதத்தின் குரலாக போராட்டத்தில் முன்னிறுத்தி பின் ஆயிரக்கணக்கான மக்களை ஈர்த்து வெற்றி கண்டார்.

மார்ட்டின் லூதர் கிங் காந்தியை பற்றி பெருமிதமாக பேசியதும் அவரை உதாரணமாக எடுத்து கொள்ளவேண்டும் என்றும் அன்று துவண்டு இருந்த  அமெரிக்கர்களிடம் கூறியிருக்கிறார்.


மார்ட்டின் லூதர் கிங் காந்தியிடம் இருந்து தனது வழியை தேர்ந்தெடுத்துக்கொண்டார்.அதனால்  கிங் உடன் காந்திக்கும் அமெரிக்காவில் சிலை உண்டு.இதே போல் நெல்சன் மண்டேலா காந்தியை தன முன்னோடியாகவும்,அவரது கொள்கையை பின்பற்றியும் வந்துள்ளார்.


காந்தி இதுபோல் வெற்றி பெற்ற பின் நம்மை ஆண்டு வந்த ஆங்கிலேய வர்க்கமும் காந்திக்கு சிலைவைத்தது .இன்னும் காந்தியம் உலகில் ஒரு அமைதியை பரப்பும் குழுவாக செயல்பட்டுதான் கொண்டிருக்கிறது.காந்தியின் இந்த அஹிம்சைவாதம் மட்டும் மாற்றத்த்தை காட்டவில்லை அவரின் மற்ற முயற்சிகளும் கொள்கைகளும் இன்னும் நமது சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு உதவுகிறது மேலும் உதவும்.



அஹிம்சை


அஹிம்சை என்ற சொல்  ராஜயோகத்தின் முதல் நிலை சொல்.இதை கடைபிடித்தால் மட்டுமே அடுத்த நிலைகளில் வெற்றி பெற இயலும்.இது போன்ற கொள்கைகளை பிறப்பிலேயே  வென்றவர்கள் நமது சித்தர்கள். இந்த நிலையை வென்று அடுத்த நிலைக்கு செல்லாமல் இருப்பின் எட்டு சித்திகளும் எவர்க்கும் கிடைப்பதில்லை .



இதை  தன் வாழ்க்கையாக மாற்றிக்கொண்டு அதை மக்களுக்கு கொண்டு சேர்த்தவர்கள்   மஹாத்மா காந்திஜி,மார்ட்டின் லூதர் கிங்,நெல்சன் மண்டேலா போன்றவர்கள் .இவர்களது  இந்த கொள்கை மேலைநாட்டு அறிஞர்களை ஈர்த்தது .மனிதாபிமானத்தை மக்களிடையே பரவிட செய்தது.ஆளும் குணம் படைத்தவர்களுக்கு அடிமைத்தனம் செய்யக்கூடாது என்பதை புரியவைத்தது.  தனிமனிதனாக  பெருமாற்றத்தை உலகில் நிலவிட செய்ய இவர்களால்  முடிந்தது . 



அஹிம்சை என்ற சொல்  ராஜயோகத்தின் முதல் நிலை சொல்.இதை கடைபிடித்தால் மட்டுமே அடுத்த நிலைகளில் வெற்றி பெற இயலும்.இது போன்ற கொள்கைகளை பிறப்பிலேயே  வென்றவர்கள்

 நமது சித்தர்கள் .இந்த நிலையை வென்று அடுத்த நிலைக்கு செல்லாமல் இருப்பின் எட்டு சித்திகளும் எவர்க்கும் கிடைப்பதில்லை .

இதை  தன் வாழ்க்கையாக மாற்றிக்கொண்டு அதை மக்களுக்கு கொண்டு சேர்த்தவர்கல்  மஹாத்மா காந்திஜி,மார்ட்டின் லூதர் கிங்,நெல்சன் மண்டேலா போன்றவர்கள் .இவர்களது  இந்த கொள்கை மேலைநாட்டு அறிஞர்களை ஈர்த்தது . தனிமனிதனாக  பெருமாற்றத்தை உலகில் நிலவிட செய்ய இவர்களால்  முடிந்தது  . 






வேத  நூல்களின் வழி நிற்பவன்   அஹிம்சையை நிச்சயம்கடைபிடிக்க வேண்டும்.



அஹிம்சை என்றால்

அஹிம்சை என்பது அணைத்து  உயிர்களுளிடமும்  அன்பாக இருக்க வேண்டும்,எந்த ஒரு உயிர்களையும் துன்புறுத்த கூடாது என்று அர்த்தம்.



                   எந்த ஒரு உயிரையும் கொள்ள கூடாது, 
பிற உயிர்கள் நம்மை துன்புறுத்தினாலும் நாம் அமைதியை மட்டுமே கடைபிடிக்க வேண்டும், 
அல்லது விலகி சென்றிட வேண்டும், 
நாம் எந்த சூழல்களிலும் எவரையும் திருப்பி தாக்கவோ ,தன்னிலை மறந்துஅவமரியாதை செய்யவோ,  கூடாது என்பது அஹிம்சையை பின்பற்றுபவர்க்கு கொள்கைகளாகும்.

நமக்கு தீங்கு இழைத்தவரை மன்னித்தல் வேண்டும் திரும்பி அவரை துன்புறுத்தினால் அது மனித தன்மையை தாண்டிய செயல் .



அஹிம்சை என்பது உடலால் மட்டுமல்ல உள்ளதாலும் தூய்மை சிந்தனைகளை கொள்ள வேண்டும் எவருக்கும் தீங்கு செய்யும் எண்ணங்களை மனதில் ஒரு போதும் வளர்த்திக்கொள்ள கூடாது .


எந்த சூழலிலும் பிறர் துன்பப்படுவதை நாம் கண்டும் காணாமல் இருத்தல் கூடாது.எப்பேர்ப்பட்ட துன்பங்களையும் அஹிம்சையால் போக்கிட செய்வது இறைவனின் ஆசிபெற்றவர்களின் செயல் .எதிரியாக இருப்பினும் நன்மையை செய்ய முயற்சிக்க வேண்டும்.அஹிம்சையே அனைவருக்கும் நன்மையை சேர்க்கும் .


பிற உயிர்களை கொன்று சாப்பிட கூடாது, பிற உயிர்களை துன்புறுத்தி பணம் சம்பாதிக்க கூடாது. 




அஹிம்சையை நிலைநாட்டுவதே சிறந்த மனிதர்களின் அடையாளம் ..


நாம் செய்யும் செயலுக்கான எதிர்வினை பலன் நிச்சயம் 

உண்டு  .நம் அனைவர்க்கும் அஹிம்சைக்கான மஹான்களின் உதாரணங்கள்தெரியும் .சிந்தித்து பாருங்கள் அஹிம்சை என்னும் பண்பு உலகில் இருப்பதால் தான் மனிதன் இன்று நிம்மதியாகவும்  ,சுதந்திரமாகவும் வாழமுடிகிறது .


ஆறறிவான விலங்குகளுக்கே அமைதி ,அன்பு 

பொறுமை ,விட்டுக்கொடுத்தல் போன்ற பண்புகள் உள்ளன என்பதையும் நாம் அறிவோம்  .




 மனிதன் சில பண்புகளை கடைபிடிக்க துவங்கினால் துன்பம் இல்லாமல் வாழலாம் அப்படிப்பட்ட முக்கியமான பண்பு தான் அஹிம்சை . அஹிம்சை என்பது அன்பிற்கு அடிப்படையாகும் .



அணைத்து சட்டங்களும் அஹிம்சையை  முன்னோடியாகவே கொண்டு அமைய பெற்று இருக்கின்றன .நாம் எந்த வகையிலும் யாரையும் துன்புறுத்த கூடாது எப்படிப்பட்ட கொடுமை நேர்ந்தாலும்   பொறுமையும் அமைதியும் கடைபிடித்து பாருங்கள் காலம், அவரை தோற்கடித்துவிடும்.அஹிம்சை என்பது  விட்டுக்கொடுத்தல் மற்றும் அமைதி ,அன்பு. 
அஹிம்சையை பின்பற்றுபவர்களே சிறந்து விளங்குவர் .அஹிம்சை அனைவரும் பின்பற்ற வேண்டும்.






நன்றி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

கம்சனின் முற்பிறவி - THE KAMSA'S PREVIOUS BIRTH STORY EXPLAINS THE REASON BEHIND HIS URGE TO KILL LORD KRISHNA.

ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"