பாம்பு புற்றும் சபிக்கப்படும் வீடுகளும்
அறியப்பட்ட மாய கதைகள்...
இந்த காலனியில் இருபது வருடங்களுக்கு மேல் வசிக்கும் சாரதா குடும்பத்தினர்.அருகில் கட்டப்படும் புதிய வீடுகளை கண்டும் அந்த வீட்டில் நடக்கும் சம்பவங்களை அறிந்தும் அறியாமலும் கடந்தே வந்துள்ளனர்.
பாகம் -1
எங்கள் வீட்டிற்கு பின் உள்ள இடத்தில ஒரு பிரம்மாண்டமான மிக பெரிய பழமையான பாம்பு புற்றும் இருந்தது. இந்த புற்றில் வீணை வாசிப்பது போன்ற சத்தம் எனக்கும் அருகில் உள்ளவர்களுக்கும் அடிக்கடி இரவில் கேட்கும்.
இதனால் எங்கள் வீதியில் உள்ள அனைவரும் அங்கே அம்மன் வீற்றிருக்கிறார் என்று உணர்ந்தோம்.
ஒருநாள் அந்த புற்றை கும்பிடும் இடமாக மாற்றினோம். அனைவரும் பால் மற்றும் பூ வைத்து புற்றை வழிபட்டும் வந்திருந்தோம்.
சில வருடங்களுக்கு பின் திடிரென்று அந்த இடம் ஒருவரால் வாங்கப்பட்டு புற்றும் இடிக்கபட்டது.அங்கே ஒரு வீடும் கட்டப்பட்டது.
"இது என்னுடைய கற்பனை கதை மட்டுமே. நான் கேட்கும் கதைகளில் என்னுடைய கற்பனைகளையும் சேர்த்தே பகிர்வேன்.இது உண்மையா அல்லது முழுதும் பொய்யா என்பதை நானும் அறியமாட்டேன்."
பாகம் -2
காலனியில் மிக பெரிய வெள்ளை வண்ண வீடு அந்த புதிதாக கட்டப்பட்ட வீடு. கட்டப்பட்ட உடனே அங்கே முதல் குடும்பம் வாடகைக்கு குடி வந்தது.
புதிய வீட்டிற்கு வந்த இரண்டு நாட்களுக்கு பின் அந்த நாயக்கர் வீட்டில் தேவையான சாமியானா உணவு அருந்தும் மேஜை போன்ற பொருட்கள் டெம்போவில் வந்திரங்க அந்த வீட்டில் காத்திருந்தனர்.
அந்த வீட்டில் உள்ள பதினைந்து வயது பெண்ணுக்கு மாராப்பு சீர் அடுத்த நாள் துவங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுகொண்டிருந்தன.
வீட்டில் உள்ள அனைவரும் உறவினர்களை அழைக்க சென்றிருக்க.
வீட்டில் மாமா மற்றும் தாத்தா தண்ணீர் பிடித்து கொண்டிருந்தனர்.
அருகில் உள்ள நண்பரும் அவர் வீட்டில் இருந்து தண்ணீர் பிடிக்க இவர்களது வீட்டிற்குவர.அவரது வளர்ப்பு நாயான ஸ்பைக் அவருடன் வந்திருந்தது.
சிறுமியின் மாமா அந்த சிறுமியிடம் காலையில் உணக்கு தான் விழா வீட்டிற்குள் சென்று பத்திரமாக இருக்குமாறு கூறினார். சிறுமியும் சிணுங்கிக் கொண்டே வீட்டிற்குள் செல்ல. ஸ்பைக் திடீரென அந்த சிறுமி அமர்ந்து விளையாடி கொண்டிருந்த இடத்தை பார்த்து குறைக்க துவங்கியது.
ஸ்பைக்கின் வளர்புக்காரரும் மாமவும் நாய் குறைக்குமிடத்தை பார்த்தனர்.
அங்கே ஒரு சாரை பாம்பு வயிற்றில்முட்டைகளுடன் நகர முடியாமல் படுத்திருந்தது.அந்த பெண் பாம்பு சிறுமியின் அருகில் இருந்தும் ஒன்றும் செய்யவில்லை. தாத்தா அதை கொள்வதற்கு முற்பட்டார்.என்னை எதுவும் செய்யாதீர்கள் என்பது போல் அந்த பாம்பு பின் வாங்கியது.
இருப்பினும் அச்சம் காரணமாக அந்த பாம்பை அடித்து கொன்றனர் மாமாவும் தாத்தாவும். அந்த பெண் பாம்பை கொள்வதற்கு சுற்றத்தினருக்கும் வீடு திரும்பிய வீட்டில் இருப்பவர்களுக்கும் விருப்பம் இல்லை.
ஆனால் தாத்தாவோ அதை கொன்று விட்டார்.காலையில் மாராப்பு விழா துவங்கி விருந்தாளிகள் இருக்கும் நேரத்தில் மற்றொரு பாம்பு வர.அதுவும் பெரிய மாமாவால் கொள்ளப்பட்டது.
விருந்தினர்கள் வீடு திரும்பினர்.இந்த புதிய வீட்டில் ஏதோ ஒரு மன அமைதி இல்லாதவாறு அனைவருக்கும் நாட்கள் கழிந்தது.
புதிதாக வாங்கிய வளர்க்கும் நாய் சீனு இரவுகளில் குறைத்த்துக் கொண்டே இருப்பது,இரவுகளில் வீணைசத்தம் கேட்பது,கதவின் அருகில் உள்ள கண்ணாடி ஜன்னலில் உருவங்கள் கடந்து செல்வது போல் சின்ன மாமாவின் கண்களுக்கு தெரிவது, மொட்டை மாடியில் யாரேனும் ஓடுவதும் மற்றும் அலறுவது போன்ற சத்தம் பெரிய மாமாவிற்கும் அவரது அக்காவிற்கும் கேட்பதும், பாட்டி மற்றும் மாமாவின் கனவுகளில் சில உருவங்கள் தோன்றி "நாங்கள் இங்கே பல வருடங்களாக வசிக்கிறோம் நீீங்கள் இங்கிருந்து செல்லுங்கள்" என்று மிரட்டுவதுமாக இருந்து.
இது போன்ற சம்பவங்களை தொடர்ந்து வீட்டில் இருக்கும் ஒவ்வோருவரும் உணர்ந்தனர்.
சில சமயங்களில் வீட்டில் ஒருவர் அல்லது அனைவரும் இரவில் விழித்துக்கொண்டு அமர்ந்து இருந்தவாறு கதவின் அருகில் உள்ள கண்ணாடி ஜன்னலை பார்ப்பதும் யாரேனும் நிஜமாக கடந்து சென்றனரா அல்லது கற்பனையா என்றே குழப்பத்திலும் இருப்பார்கள்.
இதுவே பழக்கமாக மாறியது நாட்கள் நிம்மதியற்ற தூக்கத்தில்சென்றது.கதவிலும் ஜன்னல்களிலும் கடவுள் படங்கள் அதிகம் ஒட்டியும் பயம் நீங்கவில்லை.
தாத்தாவிற்காகதான் இங்கு அவசரப்பட்டு குடிவந்துவிட்டோம் என்று கவலையில் அனைவரும் இருந்தனர்.அருகில் உள்ள வீடுகள் சில தொலைவில் இருப்பதால் அச்சம் அதிகமாகவே இருந்தது அந்த வீட்டு பெண்களுக்கு.
ஒரு நாள் மதியம் வீட்டில் அனைவரும் கோவிலுக்கு செல்லலாம் என்று பேசியவாரு அமர்ந்திருக்க,பீங்கானால் செய்யப்பட்ட துளசி மாடம் ஒன்று அது இருக்கும் இடத்திலிருந்து யாரேனும் கைகளில் தூக்கி கீழே போட்டது போல் தானாக கீழே வந்து விழுந்தது.
அதை கண்ட வீட்டு பெண்கள்அச்சமடைந்தனர்.
சாமிக்கு வைக்கபடும் பொருட்கள் விழுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்க. கோவிலுக்கு சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.
மூரண்டம்மன் கோவிலுக்கு செல்ல பாட்டியின் நெருங்கிய நண்பர் ஒருவர் அடிக்கடி கூப்பிடுவார்.
அனைவரும் அன்று ஒரு நாள் சென்றனர்.கோவிலுக்கு சென்றோம் அம்மன் பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகள் முடிந்தது.பூசாரியிடம் முதலில் சின்ன மாமா மற்றும் பாட்டி மாமாவின் திருமணத்தை பற்றி பேச சென்றனர்.
சிவப்பு வேட்டி அணிந்து பூசாரி எதோ பூசை செய்யும் அவசரத்தில் வேகமாக நடந்து கொண்டிருந்தார்.
இருப்பினும் பின் தொடர்ந்தார் சின்ன மாமா. அவரிடம் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று கூற. பூசாரி அவர் கண்ணங்களில் ஒரு கைவைத்து கொண்டு ஏதோ ஒருநொடியில் யூகித்து விட்டது போலும் சற்றும் எதிர்பார்க்காத
ஆலோசனையை கூறினார்.
நீங்கள் முதலில் இருக்கும் வீட்டைவிட்டு வெளியேறுங்கள் அனைத்தும் கைகூடும் என்றார்.
மாமா தொடர்ந்து தனது கடன் சுமையை பற்றி பேச . நீங்கள் வீட்டை விட்டு வெளியேறினால் தான் அது உங்களைவிடும் இல்லையேல் அது எதுவும் நடக்கவிடாது என்றார்..
வீட்டை காலி செய்தோம்.சில நாட்கள் கழித்து வீட்டின் அருகில் இருந்த சாரதா அம்மாவை
எதிர்ச்சியாக சந்தித்தோம்.எங்களுக்கு பின் அங்கு குடி வந்த நபர் தவறான செயல்களில் கைது செய்யப்பட்டு குடி இருந்த வீடு அரசாங்கத்தால் சீல் வைக்கப்பட்டது என்றும் கூறினார்.
சாராதா அம்மா அங்கே புற்றுஇருந்த விஷயத்தை எங்களிடம் அப்போதுதான் சொன்னார்.
எங்களது குலதெய்வம் நாகம் வடிவில் தான் காட்சியளிப்பார்.. அவர் புற்றின் மேல்தான் அமர்ந்திருப்பார்...சாரதா அம்மாவின் மாரியம்மன் போல் எங்கள் ரேணுகாதேவிஅம்மனும்...
அதனால் என்னவோ எங்களை விட்டுவிட்டார் போன்றும்,உரியஇடம் உரிய இடத்திற்கே சென்றது போல் இருந்தது...
கருத்துகள்
கருத்துரையிடுக