பட்டத்து அரசியம்மன்
(2007)கோவிலின் எதிரே ஒரு சாலை அதை தாண்டி குடிசை வீடுகள் ஏறலாம்.
அங்குள்ள சிறிய குழந்தைகள்
மாலை கோவில் பூஜைகளில் , விஷேஷங்களில் கலந்து கொண்டு மகிழ்ச்சியோடு
பிரசாதம் சாப்பிட்டு கோவில் மூடும் வரை கோவிலை சுத்தம் செய்து விட்டு செல்வார்கள்
இது என்னுடைய கற்பனை கதை மட்டுமே. நான் கேட்கும் கதைகளில் என்னுடைய கற்பனைகளையும் சேர்த்தே பகிர்வேன்.இது உண்மையா அல்லது முழுதும் பொய்யா என்பதை நானும் அறியமாட்டேன்.
வாசகர்கள் கவனத்திற்கு இங்கு பகிரப்படும் அனைத்து கட்டுரைகளையும் எந்தவித மாற்றமின்றி பயன்படுத்தலாம். இங்கிருந்து பகிரப்படும் கட்டுரைகளுக்கு மனதின் தோழன் பக்கத்திற்காண லிங்க் மற்றும் மனதின் தோழன் பக்கத்தின் உரிமை நீங்கள் பகிறவிரும்பும் கட்டுரையின் கீழ் இருத்தல் வேண்டும்.
இரவு கோவில் முடிந்ததும் பூசாரி வீட்டுக்கு செல்வார்.
அங்குள்ள குழந்தைகள் கருப்புசாமியின் குதிரை மீது அமர்ந்து இரவு வெகு நேரம் வரை விளையாடுவர்.
சில அம்மன் நகைகள் காணாமல் போனதாகவும் ,
பூசாரி மற்றும் கோவிலுக்கு வரும் சில மக்கள் நகையை குடிசையில் வாழும் மக்கள் எவரேனும் எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கித்து அவர்களை விசாரித்தும் உள்ளனர்.
அன்றிளிருந்து கோயில் நகையை பாதுகாக்க ஒரு சிலர் இரவில் கோயிலில் தங்க முடிவு செய்து தங்கினர்.
ஒரு பூஜையின் இரவு..
கோவிலில் படுத்திருந்த நான்கு பேர் , திடீரென்று கண்விழித்து பார்க்க..
ஒரு நம்ப முடியாத காட்சியை கண்டுள்ளனர்.
பச்சை சேலை அணிந்து அம்மன் கோவில் தளத்தில் அமர்ந்து சோலி போட்டு கொண்டு இருந்ததை தாங்கள் பார்த்ததாகவும் ஊரில் கூறினர்...
அடுத்து வந்த இரவுகளில் அங்கு படுப்பதற்கு எவர்க்கும் தைரியமின்றி
அங்கு எவரும் இரவில் நகையை பாதுகாப்பதற்கு தங்கவில்லையாம்..
அந்த மாலை பொழுதே,ஒரு குடிசையில் தீப்பற்றி எரிந்தது.
பணம், புத்தக நூல்,ஆடைகள் அனைத்தும் எரிந்து கிடந்தது.
உயிர்களுக்கு பாதிப்பில்லை.
குடிசையை வேடிக்கை பார்த்து கோவிலுக்கு வரும் அனைவரும் நின்றிருந்தனர்.
தீயை அணைத்த பின்,
அங்கே கோவிலுக்கு வந்த சில மக்கள்
உடைமைகளை இழந்தவர்களுக்கு உதவிபுரிய முன்வந்திருந்தனர் அந்த குடிசையின் உரிமையாளர் உதவியும் மனம் நிறைய பெற்றுக் கொண்டார்.
அம்மனின் நகை தொலையவில்லை என்று பூசாரி அறிந்து கொண்டார்.
அவர்
சந்தேகம் தவறானது என்றுணர்ந்தார்.
இருப்பினும் அவர் குடிசை மக்களிடம் மன்னிப்பு கேட்க வில்லையாம்.
அதே இரவு பூஜை முடித்துவிட்டு
பூசாரி அம்மனுக்கு பட்டாடை சாற்றி வீட்டுக்கு திரும்பினார்.
பூட்டி இருந்த கோவிலில் இரவு அம்மனுக்கு சூட்டிய பட்டாடையில் தீப்பற்றி எரிவதை அங்கு குடிசையில் இருந்த மக்கள் கண்டு,அதை அணைத்தனர்.
அடுத்தநாள் மாலை மீண்டும் பட்டத்தரசியம்மன் சிலையில் உள்ள ஆடை எரிந்தது .
இதை அவர்கள் பூசாரிக்கு தெரிவிக்க...
பூசாரி விளக்கை ஏற்றாமல் இருப்பது இதை தவிர்க்கும் என்று எண்ணி விளக்கை அன்று ஏற்றவில்லை.
இருப்பினும் புது சிவப்பு பட்டாடை தீபற்றியது.
இதை அறிந்த அனைத்து மக்களும் தீய குறியீட்டை அறிந்தனர்.
திடிரென்று கோவில் மூட பட்டது.
பூசாரி உடல் நிலை குன்றி கோவிலுக்கு ஒரு மாதம் வர வில்லை.
கோவிலுக்கு வரும் சந்தேக கூட்டங்களும் குறைந்தனர்..
புது பூசாரி வந்தார்..
பூஜை செய்வார்..
அந்த குடிசை குழந்தைகுளுக்கு பிரசாதம் செய்து சலிக்காமல் வந்து தருவார்.
மீண்டும் ஒரு நாள் சிலர் வாகனத்தில் அவ்வழியே கடந்து செல்லும் போது அம்மன் சிவப்பு சேலை அணிந்து நகைகள் அணிந்து கோயில் தரையில் அமர்ந்து சோலி போட்டிருப்பதை பார்த்து தலைதெரித்து ஓடியாதக கூறினர்.
அடுத்த நாட்களில் புது பூசாரியும் வரவில்லை...
இரவில் கோவிலை கடக்கும் தைரியம் எவர்க்கும் இல்லை என்றானது.
குடிசை மக்கள் மற்றும் ஒரு சில மக்கள் மட்டுமே கோவிலை தானாக பராமரித்தனர்..
சிறிது காலம் கழிந்தது கோவில் மாற்றம் பெற்றது...
குடிசைகள் ஓடு வீடாக மாறின..
புதிதாக சிலர் முன்வந்து
பல நிதிகளை திரட்டினர்..
அங்கு சிவனும் பார்வதியும் அந்த இடத்தில் அமர்ந்தனர்...
அதிக காவல் கொண்ட இந்த புது கோவில் கட்டமைப்பிலும்
சிவன் மற்றும் அம்மனுக்கு போற்றப்பட்டிருந்த பட்டாடை காணாமல் மாயமாவதும் வழக்கமானது..
வந்த புது பூசாரி சிறிது காலத்தில் சென்றுவிட்டார்...
கோவிலை சீர்செய்தவர்களிடையே அல்லது பூசாரிகளிடையே சலசலப்புகள் குறைய வில்லை சண்டை, சந்தேகம் என துவங்கும் பின் சென்றுவிடுவார்கள்..
(2015)வறுமையில் இருப்பினும் கோவிலை சுத்தம் செய்து கோவிலுக்கு வருபவர்களுக்கு சேவை செய்வது மகிழ்ச்சி தருகிறது என்பார்கள் அங்கு தொடர்ந்து இருக்கும் குடிசை வாழ் மக்கள்.
இன்றும் அம்மனை இரவில் நேரில் காண்பவர்கள் உண்டாம்.
கோவிலுக்கு வருகைதந்தவர்களில் யார் நல்லவர் கேட்டவர் என்றே அம்மன் இரவில் சோலி போட்டு பார்ப்பார் என்றும் மேலும் குற்றம் செய்தவர்களின் சேவைகளை அவர்கள் உணரும் வரை அம்மன் ஏற்பதில்லை என்றும் கூறினர்.
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக