அறியப்பட்ட மாய கதைகள் ( கல்லுக்குழி )

(30பது வருடங்களுக்கு முன்)

40அடி ஆழம் , 1km நீண்ட அகலம்,பல உயிர்களையும் பிடித்துள்ளது.. 
இந்த கல்லுக் குழியில் தற்கொலை,கொலை என அதில் விழுந்த பிணங்களை மீட்பதென்பதே இயலாது ஒன்று அப்போது.


இது என்னுடைய கற்பனை கதை மட்டுமே. நான் கேட்கும் கதைகளில் என்னுடைய கற்பனைகளையும் சேர்த்தே பகிர்வேன்.இது உண்மையா அல்லது முழுதும் பொய்யா என்பதை நானும் அறியமாட்டேன்.
வாசகர்கள் கவனத்திற்கு இங்கு பகிரப்படும் அனைத்து கட்டுரைகளையும் எந்தவித மாற்றமின்றி பயன்படுத்தலாம். இங்கிருந்து பகிரப்படும் கட்டுரைகளுக்கு மனதின் தோழன் பக்கத்திற்காண லிங்க் மற்றும் மனதின் தோழன் பக்கத்தின் உரிமை நீங்கள் பகிறவிரும்பும் கட்டுரையின் கீழ் இருத்தல் வேண்டும்.


இன்று நகரமாக உள்ளது இந்த ஊர் மற்றும் இந்த இடம்.இங்குள்ள இந்த கல்லுக்குழி தற்போது மண் போட்டு மூடப்பட்டு 10 வருடங்கள் கடந்து விட்டன. 
இந்த கல்லுக்குழிக்கென்று பல கதைகளும் உண்டு..

இங்கே இந்த இடத்தில் முப்பது வருடங்களுக்கு முன்  வாழ்ந்த இந்த இடத்தின்  மக்கள் 
கல்லுக்குழியை கண்டால் அச்சம் கொண்டிருந்தனர்.

அதன் வழிபயணிப்பதை மதியஉச்சியில் மற்றும் இரவு நேரங்களில் தவிர்த்தும் வந்துள்ளனர்.

அன்றைய காலத்தில் பணிமுடித்து இரவு தனியே அவ்வழியே பயணிக்கும் கட்டாயத்தில் இருக்கும் சிலர் ஊதுபத்தியும் தெய்வ படங்களும் போன்ற இறை பொருட்களை தங்களது சைக்கிளில் வைத்தும். பாதுகாப்பிற்கு டார்ச் லையிட் கொண்டும், ரேடியோ வை இயகியவாறும் இரவில் அதன் வழியே பயணித்தாக கூறினர்.

அந்த கல்லுக்குழியில் 30 வருடங்களுக்கு முன் மழை நீர்தேங்கி போதும் எண்ணும் அளவிற்கு சுற்றியுள்ள மக்களுக்கு உதவியுள்ளது.
குறிப்பாக துணிகளை சலவை செய்வதற்கு உதவியுள்ளது.

தினமும் காலை பொழுது சலவை தொழில் செய்பவர்கள் அனைவரும் கூட்டமாக கல்லுக்குழி வந்து
 கரையில் அமர்ந்து துணிகளை துவைத்து வீடு தீரும்புவர்.

கல்லுக்குழி மக்களை அச்சமூட்ட கொண்டிருந்த கதைகளில் ஒன்று  இங்கே பகிரப்படுகிறது.

வெள்ளை மேலாடை, 
தூக்கிகட்டிய வேட்டியும் 
தலையில் வெள்ளை துண்டால் கட்டிய  தலைப்பா முதுகில் சுமந்து நிற்பது சலவை செய்ய பட வேண்டிய ஆடைகள்ள கொண்ட மூட்டை .

மூட்டையை சுமந்தவாரு மதியம் 2 மணி அளவில் சலவை செய்பவர் ஒருவர் ஊரில் உள்ள ஒரு மில் அருகே உள்ள பெட்டி கடைக்கு வந்தார். கடையில் இரு வாழைப்பழம், சிகரெட் வாங்கிய சலவை தொழிலாளி கல்லுக்குழிக்கு நடை மேற்கொண்டார் .

தனியே கல்லுக்குழிக்கு வந்தடைந்தார்.உச்சி வெயில் தன் தலையில் இருந்த தலைப்பாவை கலற்றி அவர் முக வியர்வையை துடைக்க செய்தது.
முதுகில் சுமந்து வந்த தனது சலவை மூட்டையை கீலே வைத்தார்..
சுற்றியும் பேச்சு துணைக்கு எவரும் இன் நேரத்தில் இங்கு இருக்க போவதில்லை என்பதை நன்கறிவார்.

நீரின் அழகு கண்ணாடி போல் கலங்கமற்றதாக என்றும் தெளிவாக இருக்கும்.

அதை ரசித்தவாறும்
 தான் வாங்கிய பீடியை பிடித்தவாறும் சிறிது நேரம் நின்று ஓய்வெடுத்திருக்கிறார். 

பின்  வேளையை துவங்கும் தான் வாங்கிய இரு வாழைபழத்தையும் எடுத்து கையில் ஒன்றை வைத்துக்கொண்டு கல்லுக்குழி அருகே நின்று நீரை பார்த்தவாரு சாப்பிட துவங்கியுள்ளார். 

உச்சி வெயில் அவர் கண்களை சளிப்படைய செய்தது.

பழம் வாயருகே செல்லும் போது யாரோ  கையை அடித்து தட்டிவிட்டது போல் பழம் கிழே விழுந்ததாம்...

அதை குனிந்து எடுக்கும் சமயத்தில் பின் கழுத்தில் சட்டென்று அடி விழுந்தது போல் உணர்ந்தாராம்.

அங்கு குழியில் இருந்து ஒரு பெண்னின் குரல் கேட்டதும்..

அருகில் சென்று எட்டிபார்துள்ளார் அந்த சலவை தொழிலாளி..


குழியில் இருந்து மேலே நடந்தவாறு  அவர் அருகில் ஒரு பெண் உருவம் வந்ததாம்.

வெள்ளை புடவை அணிந்து, தலை முடி விரித்தவாறும்.
இரு குழந்தைகளை கைகளில் பிடித்துக்கொண்டும் அருகே வந்ததாம்.

அந்த பெண் தன் குழந்தைகள் பல வருடங்களாக பசியில் தவிக்கின்றன.   

அவர்கள் உண்ண பழம் வேண்டும் ... உன்னிடம் உள்ள ஒன்றை கொடுத்து செல் என்று மிரட்டியதாம் ...

சலவை தொழிலாளி அதிர்ச்சி கொண்டு அனைத்தையும் கீலே வீசி ஓட்டம் பிடித்தாராம்...


வீட்டிற்கு சென்று இந்த சம்பவத்தை அனைவரிடமும் கூறி இருக்கிறார்...

அந்த கதையை அந்த ஊரே அறிந்து கொண்டது.

உடல் நிலை குன்றி சில நாட்கள் அந்த சலவை தொழிளாளி தவித்ததாகவும் பின் ஒரு வாரத்தில்  அவர் உயிர் இழந்துவிட்டதாகவும்.. 

அவரை அந்த பெண் தான் அழைத்து சென்றுவிட்டார் என்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அன்று எச்சரிக்கை கதை கூறுவர்.


நன்றி


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

கம்சனின் முற்பிறவி - THE KAMSA'S PREVIOUS BIRTH STORY EXPLAINS THE REASON BEHIND HIS URGE TO KILL LORD KRISHNA.

விஷ்ணுவின் ஹயக்ரீவ அவதாரம் - THE HORSE FACED AVATAR THAT SAVED THE VEDAS FROM BEING STOLEN BY THE DEMON KING