தினமும் செய்யவேண்டிய எளிமையான உடல் பயிற்சிகள்
| தெளிவான உடல்! தெளிவான மனம்! தெளிவான செயல்! |
நமது உடலுக்கு செயல்பாடுகள் தராவிடில் அவற்றின் வலிமை குறைந்துவிடுகிறது என்றும் இதயம் மற்றும் சிறுநீரகம் செயல்களை இழப்பதும் பல நோய்களை வரவேற்பதாக அமைகிறது என்றும் அறிவியல் ஆராய்ச்சிகள் கூறிவருகின்றன.
நமது வாழ்க்கைமுறையில் எதிர்மறை மாற்றங்கள் ஏற்படுவதால் நோய்கள் உருவாகுகின்றன.எனவே உடல் பயிற்சி மிகவும் அவசியமானதாக உள்ளது.உடலுக்கு செயல்ப்பாடுகள் தருவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் தரும் ஆன்டிபாடீஸ் அதிகமாக உற்பத்தியாகிறது.அதாவது இவை நோய்க்கிருமிகளை எதிர்த்துபோராடும் புரதங்களாகும்.இவை யோகா செய்பவர்களின் உடலில் அதிகமாக சுரக்கப்படுகிறது என்று ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.இதனால் எந்த மனம் மற்றும் உடல் சார்ந்த நோய் தாக்கம் ஏற்பட்டாலும் எளிதில் மீண்டுவருவர்.
உடல் பயிற்சிகள் செய்வதால் தன்னம்பிக்கை அதிகரிக்கின்றது.கெட்ட கொழுப்புகள் அகன்றுவிடுகின்றது மேலும் எலும்புகள் மற்றும் தசைகள் வலுப்பெறுகின்றன.மன அழுத்தம்,மன சோர்வு போன்றவை குறைகின்றது.
தினமும் இதுபோன்ற முறையில் உடலுக்கு செயல்பாடுகளை தருவது அவசியமானது
பொழுதுபோக்கு நேரங்களிலும் குழந்தைகள் மற்றும் அனைவரும் அதிக நேரம் ஓட்டப்பந்தயம்,கபடி,கோகோ போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவது அவசியம்.
நாம் அன்றாடம் பயணம் செய்யும் பஸ் மற்றும் பிற வாகனத்தை தவிர்த்து சில நாட்களில் நடந்து செல்வது அல்லது சைக்கிள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தினமும் அதிகாலை நேரங்களிலும் அல்லது நமது அன்றாட வேலைகளை செய்யவும் நடைப்பயிற்சி செய்வது புத்துணர்ச்சியை அளிக்கிறது.
காலை மற்றும் மாலை பிரார்த்தனை முடிந்தவுடன் பத்து தோப்புக்கரணம் செய்வது. நமது உடல் மனம் இரண்டும் ஆரோக்கியமாக இருந்திட வழிசெய்கிறது.
பொழுது போக்கு நேரங்களில் இலவசமாக நடத்தப்படும் யோகா வகுப்புகளில் கலந்துகொள்வதால் உடல் வளைவதுடன் மனம் தெளிவடைகிறது ,நோய்கள் குறைகின்றது.
பரத நாட்டியம் போன்ற பயிற்சிவகுப்புகள் உடலுக்கு மருந்தாக விளங்குகிறது. மனம் மற்றும் உடல் புத்துணர்ச்சி அடைகிறது மனசோர்வுகுறைக்கிறது எனவே இவற்றில் கட்டாயமாக ஈடுபடுத்திக்கொள்வது அவசியம்.
வர்மக்கலை,சிலம்பம் மற்ற தர்காப்பு கலைகளும் உடல் செயற்பாட்டை அதிகரிக்கின்றது மேலும் உடல் ஆரோக்கியமாகவும் வைக்க வழிசெய்கிறது.
ஆரோக்கியமான உடல் மற்றும் மனம் பற்றி நமது பாரத பிரதமரின் ஆலோசனைகள் #fitindiamovement
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக