உடலில் நீரிழப்பு தவிர்க்க இது போன்று செய்யலாம்


நீரிழப்பு என்பது மிகவும் அபாயகரமான ஒன்றாகும்.உடலில் நீரின் அளவு வெப்பம் மிகுந்த நாட்களில் குறைவதால் மாரடைப்பு,தலைவலி,மயக்கம் மற்றும் இறக்கும் நிலை கூட முதியவர்களுக்கு  ஏற்படுகிறது.


உடலில் நீரின் அளவு சரியாக இருக்க தினமும் நீர் பருகுவதுடன் இது போன்று செய்யலாம்



உடனடியாக உடலில் நீரிழப்பை போக்க குடிக்கும் நீரில் உப்பும்,சர்க்கரையும் சிறிதளவு கலந்து பருகலாம்.

உடலில் நீர் இழப்பை சோர்வு, மயக்கம் போன்ற அறிகுறிகளை கொண்டு அறியலாம்.

மோர்,கம்பங்கூழ்,லெஸ்ஸி போன்றவை உடலில் நீரின் அளவை வைப்பதுடன் மற்ற  உடலில் தேவையான சத்துக்களையும் சேர்க்கிறது.

இளநீர்,எலும்பிச்சை நீர் மற்ற பழங்கள் மற்றும் காய்களின்  ரசங்களும்  பருகுவது உடலில் நீரை சேர்க்க உதவுகிறது.

ஆரோக்கியமான தேனிர் வகைகளையும் பால் போன்றவற்றையும்  எடுத்துக்கொள்ளவும் மறக்க வேண்டாம்.

நீரிழப்பை தவிர்க்க இது போன்ற முறைகளில் நீரை உடலில் அதிகரித்து கொள்ளவேண்டும் மேலும் நமது சமூகத்தினரையும் இது போன்ற ஆபத்துகளில் இருந்து காப்பாற்ற வேண்டும்.மிகுந்த வெய்யில் காலங்களில் கூட  நமது வீட்டிற்கே  வந்து கூச்சலிட்டு காய்கறிகளையும்,பழங்களையும் விற்று செல்லும் அந்த முதியவர்களுக்கும் குடிக்க நீரை தவறாமல்  வெயில்காலங்களில் தந்திடுங்கள்.

நன்றி 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

கம்சனின் முற்பிறவி - THE KAMSA'S PREVIOUS BIRTH STORY EXPLAINS THE REASON BEHIND HIS URGE TO KILL LORD KRISHNA.

விஷ்ணுவின் ஹயக்ரீவ அவதாரம் - THE HORSE FACED AVATAR THAT SAVED THE VEDAS FROM BEING STOLEN BY THE DEMON KING