நலம் தரும் எள்ளு உருண்டை

    
   
ஊட்டசக்தியின்மை என்பதை இல்லாமல் செய்யக்கூடியவையாக உள்ளது  நமது பாரம்பரிய உணவுகள் மற்றும் தின்பண்டங்கள். அவற்றுள் ஒன்றான    எள்ளு உருண்டையின்  எள்ளு விதைகள்  செல்களுக்கு தேவையான 
வைட்டமின்கள்(vitamins),
தாதுக்கள்(minerals),
புரதங்கள்(proteins),
நார்ச்சத்து,
அன்சாட்டூரெட் பாட் (unsaturated fat) என்னும் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை கொண்டுள்ளது மற்றும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய அணைத்தையும் பெற்றுள்ளது என்று ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.

        


இனிப்பு விருந்துகளில் உடலுக்கு  கேடு விளைவிக்கும் மற்ற சிற்றுண்டிக்கு பதிலாக நமது பாரம்பரிய சிற்றுண்டிகளில் ஒருவகையான  விதைகளில் செய்யப்படும் எள்ளு உருண்டையை  
அதே பாரம்பரிய முறையில்  நாட்டுசர்கரையில் செய்யப்படுவதால்   உண்பவரின் உடலுக்கு மிகவும் சிறந்த சத்துக்களை தரக்கூடியது.வறுத்து இடித்து செய்யப்படும் இந்த எள்ளு உருண்டைகள் நாட்டுசர்கரையுடன் செய்வதால்  உடலில் சிவப்பு ரத்தனுகள் உருவாக உதவிபுரிகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.ரத்த அழுத்தம் வராமல் தடுக்கிறது.

        மாதத்திற்கு மற்ற பாரம்பரிய நலம் தரும் சிற்றுண்டிகளுடன்  ஒரு வாரத்திற்கு  அளவான எள்ளுருண்டையை செய்து வைத்து உண்பது சிறந்தது.
கெட்ட  கொழுப்புகளால்  உண்டாகும் உடல் பருமன் , இருதய அடைப்பு, புற்று நோய் போன்றவை  வராமல் நோய் எதிர்ப்பு சக்தியுடன்  இருக்கலாம்.

மேலும் இதுபோன்ற பாரம்பரிய உணவுகளை  அதிக அளவில் நம் அன்றாட வாழ்க்கையில் இணைத்துக்கொண்டும்,கல்வி வழியாக பாரம்பரிய உணவின் மகிமைகளை  கொண்டு சேர்ப்பதாலும் மற்றும்  மலிவான விலையிலும் கிடைக்க செய்வதனாலும் பிள்ளைகளுக்கு ஊட்டசக்தியின்மை என்பது இல்லாமல்  செய்துவிடலாம்.




நன்றி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

கம்சனின் முற்பிறவி - THE KAMSA'S PREVIOUS BIRTH STORY EXPLAINS THE REASON BEHIND HIS URGE TO KILL LORD KRISHNA.

விஷ்ணுவின் ஹயக்ரீவ அவதாரம் - THE HORSE FACED AVATAR THAT SAVED THE VEDAS FROM BEING STOLEN BY THE DEMON KING