பனைமரம்

     




  பனைமாரியம்மன் என்று தமிழிலும் விஷ்ணுசஹஸ்ரநாமத்தின் படி மற்ற இறைவனின் பெயர்களால் அழைக்கப்படும் மரம் இந்த கல்பகவிருக்ஷமான  பனைமரம். தமிழ்நாடு,கேரளா,இந்தோனேஷியா போன்ற இடங்களில் அதிகம் வளர்கிறது. பனைமரம் வழிபாட்டிற்குரிய மரமாகும்.சுமார் இரண்டாயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கு முன் துவங்கி இன்றுவரை பனைமரம் வணங்கப்படுகிறது.

வீட்டின் கூரையாகவும்,திருமணவிழாக்களில் அதிஷ்டம் தரும் அழகு தோரணங்களாகவும் பயன்படுத்தப்படுகிறது.

    இலங்கை தமிழர்களின் "மஹாவம்சம்" என்னும் வரளாற்று தொகுப்பில் பனைமரம் கடவுள்கள் குடியிருக்கும் மரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .தமிழ் சங்கநூல்களிலும் இறைவனின் வசிப்பிடமாகவும் குலதெய்வம் குடியிருக்கும் மரமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

          விஷ்ணு தேவரின் எட்டாவது அவதாரமான பலராமர் தனது கொடியில் பனைமரத்தை சின்னமாக வைத்திருந்தது அந்த மரத்தின் முக்கியத்துவத்தை குறிக்கிறது.இதைப்பற்றி தமிழின் மிக பழமையான காப்பியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

        திருபன்னையூர் சிவன் கோவிலில் தலைவிருச்சமாக அமையப்பெற்றிருக்கும் மரம் இந்த பனைமரம்.

      மிக புனிதமான முக்கியத்துவம் கொண்ட  இரண்டாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த குறிப்புக்கள் பனைமரத்தின் இலைகளில்  எழுதப்பட்டு இருந்தன.

     பனைமரத்திலிருந்து கிடைக்கும் அணைத்து பொருட்களை  கொண்டு இன்று வரை பாரம்பரியமாக இயற்கைக்கு உதவும் பொருட்களை  செய்து வருகின்றனர் அந்த வாழ்விடத்தின் மக்கள் .

           பிளாஸ்டிக் பொருட்களை ,கவர்களை தவிர்க்க உதவும் நவீன காலத்திற்கு உதவும் மரமாக திகழ்கிறது.இவ்வாறு இன்றும் விவசாயிகளுக்கு நம்பிக்கை தரும் மரமாக பனைமரம் திகழ்கிறது.


கேரளா 

       உடலுக்கு நலம் தரும் அணைத்து தாதுக்களையும்,நார்சத்துக்களையும்  கொண்டுள்ள கனிகள்,கிழங்குகள் மற்றும் மருத்துவ குணம் கொண்ட இலைகளை  கொண்டுள்ளது இந்த பனைமரம்.
       
பனை மரம் தனக்கு தேவையான உரங்களையும்,நீரையும் நிலத்தில் சேர்த்திவைத்துக்கொள்கின்றது இவ்வாறு எந்தவொரு உதவியும் இன்றி 
தானாகவே வளர்ந்துகொள்கிறது.


நன்றி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

கம்சனின் முற்பிறவி - THE KAMSA'S PREVIOUS BIRTH STORY EXPLAINS THE REASON BEHIND HIS URGE TO KILL LORD KRISHNA.

விஷ்ணுவின் ஹயக்ரீவ அவதாரம் - THE HORSE FACED AVATAR THAT SAVED THE VEDAS FROM BEING STOLEN BY THE DEMON KING