ஹனுமான் ஜெயந்தி (ஹனுமான் ஜனன உத்சவ்)-THE STORY BEHIND LORD HANUMAN'S BIRTH



 ஹனுமான் ஜெயந்தி

hanuman b'day treat :amazing hanuman animated song



த்ரேதா யுகத்தில் ஆஞ்சநேயா ,மாருதி,  ஹனுமான், சிரஞ்சீவி ,பவன்புத்ரன்,வாயு புத்ரன், பஜ்ரங் பாலி,அஞ்சனை புத்ரன்,கேசரிநாதன் என்ற பெயர்களை கொண்ட  ஆஞ்சநேயர் சிவனின் பதினோராம் ருத்ர அவதாரம் .அணைத்து சித்திகளையும் ,மிகவும்  வலிமையான சக்திகளையும் கொண்ட சிவ பெருமானின் அவதாரம்  ஆஞ்சநேய அவதாரம் .தைரியத்தையும் ,ஞானத்தையும் வேண்டியவுடனே தருபவர். powerful hanuman sloka for concentration and intelligent learning :with meaning,  chantingalone


 கிஷ்கிந்தையில் அஞ்சனை மற்றும் கேசரிக்கு சிவனின் அருளால் யாகத்தின் அக்னியின் வாயிலாகவும் , வாயு தேவரின் கைகளாலும் அஞ்சனையிடம் ஷக்தி பிரசாதமாக சென்றடைந்தார் பின் புத்திரனாக மார்கழி மாதம் ஸுக்லபக்ஷத்தின் பதினைந்தாம் நாள் சிவனின் அவதாரமான ஆஞ்சநேயர்  பிறந்தார்.

புஞ்ஜிகஸ்தலா என்னும்  அப்சரஸ்பெண்  சொர்க்கத்தில் இருந்தபோது  ஒரு  குரங்கு   தியானம் செய்து கொண்டிருப்பதை கண்டார்  . ஆனால் தவம் செய்துகொண்டிருப்பது  குரங்கின் வடிவத்தில் ஓர் மஹா முனிவர் ஆவார். இதை   அறியாமல் வானர தோற்றத்தை கண்டு நகைத்து கற்களை மேலே எறிந்தார்  .முனிவர் உண்மை வடிவில் கோபத்துடன் தோன்றினார். புஞ்ஜிகஸ்தலா தேவியை  குரங்கின் தோற்றத்தில் மாற  சபித்தார்.புஞ்ஜிகஸ்தலா தேவி குரங்கின் தோற்றத்தில் மாறுவதற்கு வெவ்வேறு கூற்றுகள் புராணங்களில் இருப்பினும் அணைத்து புராணங்களில் படி அவர் சாப விமோச்சனம் பெறுவது ஆஞ்சநேயரின் பிறப்பால் என்பதேயாகும் .
 செய்த தவறை உணர்ந்த புஞ்ஜிகஸ்தலா தேவி  தன்னை மணிக்கும்மாறு முனிவரிடம்   கேட்டுக்கொண்டார் . அதனால்  சாபத்தில் இருந்து விடுபட வழியை கூறினார் .  சிவ பெருமான் எப்பொழுது  அவதாரம் எடுத்து  புஞ்ஜிகஸ்தலாவிற்கு மகனாக பிறக்கிறாரோ  அப்போது சாபத்தில் இருந்து விடுபட்டுவிடுவார் என்றார்.

வானர தோற்றத்தில் கொண்ட புஞ்ஜிகஸ்தலா தேவி இரவுகலில்    காட்டில் தங்கி இருந்தார். அப்பொழுது  அங்கிருந்த ரிஷிகள் மற்றும் வானர  குலத்தவர்கள் அவரை கண்டு  நகைக்காமல்  அவருக்கு இருக்க இடம்  மற்றும்  உணவையும் அளித்தனர்.அவர்களுடன் தன்னை அஞ்சனை என்ற பெயறால் அறிமுகம் ஏற்படுத்திக்கொண்டார் புஞ்ஜிகஸ்தலா தேவி .

சாம்பசதா  என்னும் அசுரன் புஞ்ஜிகஸ்தலாதேவிக்கு அடைக்கலம் கொடுத்த  ரிஷிகளை துன்புறுத்தி வந்தான் அவனை அளிக்க  கேசரி என்னும் வானர குல மஹாராஜர் முன்வந்தார்.பின்  வீரத்துடன் சாம்பசதா அசுரனை அவர் அளித்தார்.

அவரின் வீரத்தை கண்ட ரிஷிகள் கேசரி என்னும் வானர குல மஹாராஜருக்கும் அஞ்சனை என்று தன்னை அறிமுக படுத்தி கொண்ட வானர தோற்றத்தில் இருக்கும் புஞ்ஜிகஸ்தலா தேவிக்கும் மணமுடித்தனர் .


பின் அஞ்சனை மற்றும் கேசரி இருவரும் சிவனை எண்ணி புத்திர வரம் வேண்டி தவத்தில் இருந்தனர். அப்பொழுது தசரத மன்னரும் தனக்கு புத்திர வரம் வேண்டும் என்று யாகம் நடத்தி வந்தார் .பெருமாளும் சிவனும் ஒன்றாக பூலோகத்தில் அவதரிக்கும் நேரம் வந்தது .
சிவ பெருமான் அக்னியில் இருந்து பிரசாதத்தை யாகத்தின் அக்னியின்  வாயிலாக தசரத மன்னருக்கு அளித்தார் .அதில் இருந்த பிரசாதத்தை தசரதனின் மனைவிகள் மூவரும் உண்டனர் பின் சிவ பெருமானின் விருப்பத்தின் படி வாயு தேவர் அந்த பிரசாத்தின் ஒரு பகுதியை தவத்தில் இருக்கும் அஞ்சனை தேவியிடம் கொண்டு சேர்த்தார்.இதனாலேயே வாயு புத்திரன் என்றும் ஹனுமான் அழைக்கப்பட்டார்.




இவ்வாரே  அணைத்து சித்திகளையும் பெற்ற, மலையையும் பிளந்தெடுக்கும் ஆற்றலும், சூரியனையே விழுங்க கூடிய சர்வ சக்திகளையும், பலத்தையும் கொண்டவரான  ஆஞ்சநேயர்  தோன்றினார் .இவர் பிறந்த நாளானது ஹனுமான் ஜெயந்தியாக பூலோகம் புவர்லோகம் சுவர்க லோகம் என அணைத்து லோகங்களிலும் கொண்டாடப்படுகிறது .

இவரது பிறப்பால் சாப விமோச்சனம் பெற்றார் அஞ்சனை தேவி .ராவணன் பக்தி என்ற பெயரில் ஆணவத்தாழும் உண்டாக்கும்  சூழ்ச்சியில் இருந்த்து சிவ பெருமானை காப்பாற்றவும் .ராவணனது இந்த பிறவி அவன் விருப்பப்பட்டு கேட்ட  அழிவு என்பதாலும் .நான்கு குமாரர்களின் சாபத்தால் தனது தீவிர பக்தர்களும் ,வைகுண்டத்தின்  காவலர்களுள் ஒருவரான  ஜெயன்  தனது இந்த மூன்றாவது ஜென்மத்தில் இராவணனாக த்வபரா யுகத்தில்  தோன்றி   விஷ்ணு தேவர் கரங்களால் த்ரேதா யுகத்தில் தனது அழிவை வேண்டி காத்திருப்பர்  அவ்வாறு அவர் அளிக்கப்பட்டால் அவர்  மீண்டும்  வைகுண்டம் திரும்பி விடலாம் என்பதால் விஷ்ணுதேவர் ராமராக த்ரேதா யுகத்தில் அவதரித்து ஆணவத்தில் இருந்த ராவணனை அளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் .ஆகவே சிவ பெருமான் இந்த அவதாரத்தில் விஷ்ணுவிற்கு அவரது அன்பையும் ஆதரவையும்வெளிப்படுத்த ஹனுமானாக  
தோன்றினார் .  ராமராக விஷ்ணுதேவர்  ஜனனம் செய்யும் காலத்தில் அவருக்கு துணையாக ராவணனிடம் யுத்தம் செய்யவும் ,ராமரை தனது குரு வாகவும் ,அவருக்கு சேவைபுரிந்தும்  தனது பிறவியின் பலனை அடைவதே குறிக்கோளாகவும் கொண்டிருந்தார் ஹனுமான்  .


பூலோகத்திற்கு ,பிரபஞ்சத்தை காப்பதற்கும்,கிரகங்களால் பிடித்தவருக்கும்,தீய ஷக்தி ,தீய சித்திகள்,வலுவிழந்தவர்கள்,மனமுடைந்தவர்கள்,துன்பத்தில் இருப்பவர்கள்   என ஏற்படும் அணைத்து சூழல்களில்  இருந்தும் அனைவரையும் விடுவிக்கும் தெய்வம் ஆஞ்சநேயர்.பலத்தையும்,வீரத்தையும் தருபவர். இவருடைய இந்த அவதாரத்திற்கு அழிவென்பதே இல்லை .

அணைத்து லோகங்களிலும் உள்ள உயிர்களுக்கு ஏற்படும் துன்பங்களில் இருந்து காப்பதற்கே  விஷ்ணு தேவர் இவருக்கு முடிவில்லாத வரம் அருளினார்  .தினமும்  விஷ்ணுதேவரை வீட்டில் வணங்கி சுந்தர காண்டத்தை ஏதேனும் ஒரு பகுதியாவது  படித்து வந்தால் ஆஞ்சநேயரின் அருள் வந்தடையும் .

to start with :Hanuman Chalisa with Lyrics and English meaning

                                                
               





நன்றி








#hanuman jayanthi in tamil 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"

சிவனின் நந்தி தேவர் - LORD SHIVAS NANDI , THE STORY BEHIND NANDI