வீட்டில் தவறாமல் தீபம் ஏற்று துன்பம் அகற்று-THE LIGHTING OF OIL LAMPS SIGNIFICANCE
எந்த ஒரு வேண்டுதல்கள் இறைவினிடம் வைப்பதற்கு முன் தீபத்தை ஏற்றியே துவங்கிட வேண்டும். வீட்டில் அனைத்தையும் சுத்தமிட்டு மாலை பொழுதில் உரிய நேரம் சாய்வதற்குள் வாசலில் சாணம் கலந்த நீரை இறைத்து ,கோலமிட்ட பின் பூஜை அறைகளில் ,துளசி மாடங்களில்,கோலங்களில்,கோவில்களில்,
அரசமரம்,வேப்பமரம் ,ஆலமரம் ,வில்வம் போன்ற தெய்வீக மரங்களின் அருகில், தொழில் கூடங்களில், குருகுலத்தில், திருவிழாக்களில் என அணைத்து பொறுப்புமிக்க தெய்விக
இடங்களில் தீபம் ஏற்றி வணங்கிய பின்னர் காரியங்களை துவங்கவேண்டும் .
தீபம் ஏற்றுவது ஞானத்தை அள்ளித்தரும் தெய்வங்களை வீட்டிற்கு கொண்டு சேர்க்கும். காலை மற்றும் மாலைப்பொழுதில் தீபம் ஏற்றி தெய்வங்களை வரவேற்போம்.
வீட்டில் தீப ஒளியை ஏற்றும் பொழுது
"மனதில் இருள் ,பிணி போன்றவற்றை அகற்றிடும் தூய்மைமிக்க ஒளியை போற்றுகிறேன் "என்று போற்றிட வேண்டும்.
தீபம் ஏற்றும் பொழுது அங்கிருந்து இருள் என்னும் அறியாமை அகன்றுவிடுகிறது உலகிற்கு ஒளி தரும் உண்மையான நிலைத்ததன்மையுடைய ஆதி கடவுளின் அருள் வீட்டில் நிலவிடுகிறது .தீப ஜோதியால் உண்டாகும் சாத்வீக ஷக்தியானது மனதில் உள்ள அறியாமை என்னும் இருளை நீக்கி ஞானம் என்னும் பேரொளியை தரக்கூடியது. கிருஷ்ண பரமாத்மா கீதையில் கூறிய புத்தி என்னும் பகுத்தறிவு சிந்தனையை தரும் இறைவனை சேரும் பாலத்தை பயன்படுத்த விடாமல் தடுப்பவையாக இருக்கும் தீயவைகளான தீய எண்ணம் , காமம் ,கோபம்,பேராசை ,பற்று ,மாயை ,தன்னை மறந்து இருப்பது போன்றவற்றை இல்லாமல் செய்துவிடும் சக்தியாக தீப ஒளி விளங்குகிறது . மனதில் உள்ள சாத்விக உணர்வுகளை அதிகரிக்கின்றது.வடக்கு,கிழக்கு,தென்மேற்கு,மேற்கு,வடமேற்கு திசைகளில் விளக்கை ஏற்றிட வேண்டும்.மண் ,இரும்பு, வெண்கலம்,வெள்ளி விளக்குகளில் ஐந்து முகங்கள் வரை வீட்டில் தீபம் ஏற்றிடலாம் .
அதிகாலை 3 மணி முதல் 6;30 மணிக்குள்,மற்றும் மாலை 6;30 மணிக்கு விளக்கை ஏற்றிடலாம் . லக்ஷிமி தேவி தீபத்தில் வீற்றிருப்பதால் தினமும் தவறாமல் உரிய நேரத்தில் காலை மற்றும் மாலை ஏற்றி வழிபட்டால் எட்டு வகையான செல்வங்கலான தைரியம் ,தானியம் ,ஞானம், வெற்றி ,சந்தானம் (குழந்தைசெல்வம்),கல்வி,தன்னம்பிக்கை போன்றவற்றை லட்சுமிதேவி தந்தருள்வார் .லக்ஷ்மி தேவையின் அருள் பெற தீபம் ஏற்றும் விளக்கில் நாணயம் வைத்து பின் அதன் மேல் எண்ணெய் ஊற்றிடவேண்டும் . விளக்கின் அடியில் அரிசி வைத்து வணங்கவேண்டும் . திரிகள் முழுவதுமாக தீரும் வரை விளக்கை ஏற்ற கூடாது .விளக்கை வெள்ளிக்கிழமையன்று சுத்தம் செயக்கூடாது .
தீபலக்ஷ்மி ,சரஸ்வதி ,ஆதி ஷக்தி தீபங்களில் வீற்றிருப்பதால் . தினமும் காலை மாலை தீபங்களுக்கு குங்குமம் ,மஞ்சள் சந்தனமுடன் மலர்கள் வைத்து பஞ்சு ,வாழைத்தண்டு நார், வௌருக்கும் வேர்,தாமரை தண்டு நார்,புதிய மஞ்சள் மற்றும் சிவப்பு துணி,புதிய வெள்ளை துணி போன்றவற்றை திரியாக பயன்படுத்தி ,நெய்,வெண்ணெய் ,ஆமணக்கு , வேப்பிலை ,எள் ,இலுப்பை எண்ணெய்களில் ஏதேனும் ஊற்றி பஞ்சபூதங்களில் ஒருவரான அக்னிதேவரையும் ஏற்றி வழிபட வேண்டும். அக்னியில் இடுவது (எண்ணெய்) இறைவனை சேர்கிறது.நாம் பயன்படுத்தும் எண்ணெய் ,நெய் என்று எவற்றை பயன்படுத்துகிறோமோ அவற்றிக்கு தனிசிறப்பு உண்டு.உதாரணமாக நெய்யில் இடப்படும் தீபம் சக்திவாய்ந்த ஜோதி சுடரை உண்டாக்கி வணங்குபவர்க்கு தூய எண்ணங்களை உண்டாக்கும் , அக்னியில் இருந்து வெளிப்படுவதும் இறைவனிடம் இருந்து பெறப்படும் அருளாகும்.எனவே அந்த அக்னிசுடரின் வழியாக பெறப்பெறும் ஷக்தி ஆனது நமது உடல் மனம் அனைத்தையும் சுத்திகரிக்கிறது மற்றும் வணங்குபவர்க்கு பாதுகாப்பு கவசமாக விளங்குகிறது. பூஜை அறையில் நாம் வைக்கும் பஞ்சபூதங்களான கலச நீர் ,சாம்பிராணி ,திருநீறு மற்றும் நமது தியானம் போன்றதுடன் அக்னியையும் வழிப்படவேண்டும் .
திருமணமாகாத பெண்கள் தங்களுக்கு நல்ல வரன் வேண்டி ஒரு திரி கொண்டு ; மஞ்சள் துணியாழ் ஆன திரிகொண்டு ஏற்றுவர், கணவன் மனைவி இருவரும் துன்பமின்றி இருக்க இரண்டு திரிகள் கொண்டு ஏற்றுவர், தாய்மார்கள் வீட்டில் மங்களம் ,ஆரோக்கியம் உண்டாக தீபம் ஏற்றுவர் ,தொழிற்சாலைகளில் செல்வம் ,வெற்றி உண்டாக ஏற்றுவர்.தீபஒளி இருக்கும் வீட்டில் தீய சக்திகளும் ,தீய எண்ணங்கள் ,ராஜஸ மற்றும் தாமச குணம் குறைகிறது . ஒரு முகம்,இருமுகம் என ஐந்து முகங்கள் வரை வீட்டில் தீபம் ஏற்றலாம் ஒவொன்றிற்கும் ஒரு குறிப்பும், பலனும் உண்டு . பழங்கால பாரம்பரியத்தில் தீப ஒளியை அணையாமல் பாதுகாத்தும் வருவர் . உதாரணமாக திருமணம் முடிந்து மணமகள் அக்னி குண்டத்தில் இருக்கும் நெருப்பை புகுந்த வீட்டிற்கு எடுத்து சென்று தினமும் வழிபாடு அங்கே அதை அணையாமல் பாதுகாத்து வருவார் .
தினமும் தீபம் ஏற்றி வீட்டில் நாம் வழிபட வேண்டும் பின் தீபத்தை பூவால் அனைத்து நமது தெய்வத்தை நமக்கான செயல்களை செய்ய வழிஅனுப்பிட வேண்டும்.
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக