வீட்டில் துளசி மாடம் அமைப்பது இறை சக்தியை உண்டாக்கும் - THE HOLY BASIL POT SIGNIFICANCE
சொர்கமாகவும் ,தேவர்கள் வசிக்கும் இடமாகவும்
கருதப்படுகிறது .வீட்டில் துளசிமாடம் அமைப்பது வீட்டில்
இறை சக்தியைஉண்டாக்குகிறது .சில வீடுகளில் துளசி செடிகள் தானாகவே முற்றத்தில் தோன்றுகின்றன .
துளசிச்செடியை தினமும் பராமரித்து வருவதால் லட்சுமி தேவியின் அருள் முழுவதும் வீட்டில் நிறைந்திருக்கும். துளசி செடியானது பாற்கடலை கடையும் பொழுது அமிர்தத்தில் இருந்து தோன்றியது என்று துளசிபுராணம் வாயிலாக அறியலாம் .
வீட்டில் துளசி தேவிக்கென ஒரு மாடம் தரையிலிருந்து கீழாகவும் மேலாகவும் இல்லாமல் சரியான உயரத்தில் அமைத்து அந்த மாடத்தில் தவறாமல் பெண்கள் விளக்கை ஏற்றி,செடிக்கும் தவறாமல் நீர் வார்த்து, பால் மற்றும் மற்ற பிரசாதம் வைத்து ,மஞ்சள் குங்குமம் கிளைகளில்
பூசி ,சிவப்பு வண்ண துணியை செடியில் சுற்றி தினமும்
பக்தியுடன் ,துளசி அஷோடோத்திரம் படித்து வேண்டி வந்தால் அணைத்து செல்வங்களும் ,இறை அருளும் உண்டாகும் என்பர்.மேலும் மரணத்தையும்,பாவத்தையும் விளக்கும் ஷக்தி துளசி செடிக்கு உண்டு.கிருஷ்ணர் துளசியை வைத்து வழிபடுவது சிறந்தது.
ஒரு நாளில் மூன்று வேலை துளசி செடியை வலம்வந்து வழிபட வேண்டும். மாடத்தில் இருக்கும் துளசி செடியில் இருந்து கதிர்களை பூக்களை பூஜைக்கு தவிர்த்து வேற எதற்கும் பயன்படுத்தக்கூடாது.இலைகளை பறிக்கும் பொழுது சில மந்திரங்களை கூறவேண்டும்.ஏகாதசி நாட்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகள் அன்றும் அதிலிருந்து கதிர்களை பறிக்க கூடாது. பூஜைக்கு வைக்கப்பட்டிருக்கும் துளசி செடியை தவிர்த்து வீட்டில் இருக்கும் மற்ற துளசி செடிகளின் இலைகளை நமது காது பின்புறத்தில் வைத்து வருவது நல்லது.
இன்று அணைத்து வீடுகளிலும் இந்த துளசி மாடத்தை காணாலாம்.துளசியின் கிளையில் வீற்றிருப்பது பிரம்ம தேவர் என்றும் செடியின் மேல் கிளைகளில் வேத நூல்கல் உள்ளதாகவும் மற்றும் துளசியின் வேரில் தேவர்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது .துளசி செடியில் தேவதைகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.வீட்டில் தினம் பூஜை செய்து வந்தால் அவர்களின் ஆசிகளை உணரலாம்.

விஷ்ணுதேவரின் வைகுண்டத்தில் வீற்றிருப்பவர் .பாற்கடலை கடையும் பொழுது தோன்றியவர் .இவர் விஷ்ணு தேவர் மீது தீவிர பக்தி உடையவர்.விஷ்ணுதேவர்க்கென படைத்த பிரசாதங்களை பகிரும் பொழுது துளசியின்றி பிரசாதம் விநியோகிக்க மாட்டார்கள் .துளசி செடியில் வகைகள் உள்ளன ராமர் துளசி, கிருஷ்ணர் துளசி ,வன துளசி ,கபூர் துளசி போன்ற இந்த அணைத்து வகைகளும் கிருஷ்ணருக்கும், ராமருக்கும் என விஷ்ணுவின் அவதாரங்களுக்கு மட்டும் சாற்றப்படுகின்றன. விஷ்ணுவிற்கு ப்ரியமானவர் துளசி தேவி . சில புராணங்களின் படி லட்சுமி தேவி அசுரனை வதம் செய்து பூலோகத்தில் துளசியாக அமர்ந்துள்ளார் என்றும் குறிப்பிடுகிறது .
துளசி லக்ஷிமிதேவியின் அவதாரம்
வ்ரிந்தாமாற்றும் துளசி தேவி இருபெயர்களும் ஒன்றே
![]() |
| லக்ஷ்மி தேவி |
சூர்ய தேவரால் உண்டான சாபத்தை தீர்க்க லக்ஷிமி தேவி பூலோகத்தில் துளசிதேவியாக அவதரித்தார்.அவரை வழிபட பூலோகத்தில் துளசி செடிகளாக தோன்றினார்.அவரை துளசி வடிவத்தில் வழிபட்டவர்கள் எல்லோரும் செல்வதை அடைந்தனர்.
அதே சமயத்தில் லக்ஷிமிதேவியின் மற்றொரு அவதாரமான ராதாராணியும், விஷ்ணுதேவரின் அவதாரமான கிருஷ்ண பெருமானும் தோன்றினார்.லட்சுமிதேவி எவ்வாறு வ்ரிந்தாவாகவும் ,ராதாவாகவும் ஒரேய சமயத்தில் தோன்றினாரோ அதே போல் விஷ்ணுதேவர் க்ரிஷ்ணராகவும் சுதாமா (கிருஷ்ணரின் தோழன் )ஆகவும் அவதரித்தார்.பூலோகத்தில் இறைவனின் அவதாரத்தோடு இறைவனிடத்திலிருந்தே சில உயிர்கள் தோன்றின.மனிதர்கள் அனைவரும் இறைவானிடித்தலி இருந்தே தோன்றியுளோம் என்பது கீதை வலி கூறப்பட்டவை.
லக்ஷிமியின் அவதாரமான விரிந்தா விஷ்ணுதேவரின் க்ரிஷ்ணாவதாரத்தை பார்த்து திருமணம் செய்துகொள்ள விரும்பினார்.ஆனால் இதை ஏற்றுக்கொள்ளஇயலாத ராதராணி அவரை அசுரணைமணமுடிப்பாய் என்ற சாபம் இட்டார்.அதேசமயம் சுதாமா கிருஷ்ணருக்கு உதவும் விதமாக பேசியபொழுது ராதாராணி அவரை அசுரர் குளத்தில் பிறக்க சாபமிட்டார் .
![]() |
| ராதா மற்றும் கிருஷ்ணா |
பிரம்மதேவர் தவத்தில் இருந்த வ்ரிந்தாவிடம் தோன்றி சுதாமா கிருஷ்ணனின் நெருங்கியதோழன் என்றும் அவன் விஷ்ணுபிவின் பாதி அவதாரம் உடையவன் உன்மேல் காதல் உடையபவன் என்றும் இந்த ஜென்மத்தில் அவன் ராதாவின் சாபத்தால் சங்கசூடனாக அசுரகுலத்தில் தோன்றியுள்ளன என்பதை வ்ரிந்தாவிடம் கூறினார்..மேலும் அவனை நீ திருமணம் முடிந்துகொள் ஒரு யுகம்(4,350,000) வரை நீ விஷ்ணுவின் அவதரித்திலேயே உள்ள அவனுடன் வாழ்வாய் .பின்னர் விஷ்ணுதேவரே உன்னை மனம்முடித்துக்கொள்வார் .அவ்வாரே உனது நீண்ட நாள் தவம் கனவு நிறைவேறும் என்று கூறினார்.அதே போல் துளசிதேவியின் விருப்பம் படி ஷங்கச்சூடன் துளசிதேவியை மணமுடித்தார்.ஒரு யுகம் கழிந்து பெருமாளின் பாதி அவதாரமுடைய சங்கசூடன் தனது முன்ஜென்மத்தையும் இந்த ஜென்மத்தையும் நன்கே அறிவான் . தனது காதலியும் லக்ஷிமிதேவியின் அவதாரமுடைய துளசிதேவியின் துணையால் மூவுலகிலும் சிறந்தவனானார் சங்கசூடன் .அனைத்தையும் கைப்பற்றினார்.தேவர்களின் வேண்டுகோள் படி சிவபெருமான் சங்கசூடனிடம் போரிட்டு இழந்ததை மீட்டுத் தர முன்வந்தார் .சங்கசூடன் தான் செல்லவேண்டிய நேரமும் வந்தது போரில் தோற்றான் .விஷ்ணுதேவர் போல் அவதரித்து துளசிதேவியிடம் வந்தடைந்தார்.அங்கே சங்கசூடன் மாய்ந்தான்.
நடப்பதை எல்லாம் முனரே அறிந்தவர்களாக இருப்பினும் சில அவதாரங்களுக்கு குறிப்பிட்ட நாட்கணக்குகள் இருந்தன .
ஒரு யுகம் கழிந்தாலும்அல்லது எத்தனை யுகம் கழிந்தாலும் முமூர்த்திகளுக்கு முடிவென்பதில்லை.லட்சுமி தேவி தனது துளசி தேவி அவதாரத்தில் நான்கு கைகளையுடைய பெருமானை மணமுடிக்க விரும்பினார்.அப்பொழுது பூலோகத்தில் விஷ்ணுதேவரின் க்ரிஷ்ணஅவதாரத்தில் அவர் மீது காதல் கொள்கிறார்.தன்னுடைய தவத்திலும் விடாமுயற்சியுடன் காத்திருந்தார் .அதே சமயம் விஷ்ணுதேவரின் சுதாமா அவதாரத்தில் துளசிதேவியை மணமுடிக்க காத்திருந்தவர் விஷ்ணுதேவர் .அது ராதாவின் சாபத்தால் இயலாமல் போனது .பின்னர் சங்கசூட அவதாரத்தில் மணமுடித்து வாழ்ந்தனர்.யுகம் கழியும் நேரம் ஷாங்கச்சுடன் பெருமாளிடம் செல்லவேண்டும் .பெருமாளே துளசியுடன் சேர்ந்தார்.
மற்றொரு புராணம் படி நிகழ்ந்தவை
துளசி தேவி மற்றும் ஜலந்தரன் பற்றிய விளக்கம் :
ஒருபுராணத்தின் படி துளசி தேவி விநாயகரை திருமண முடிக்க விரும்பினார், ஆனால் விநாயகர் மறுப்பு தெரிவித்ததால் துளசி தேவி அவர்க்கு விருப்பமற்ற திருமணம் நிகழும்ம் என சாபமிட்டார் .பதிலாக விநாயகர் துளசி தேவியை அசுரனை நீ மனம் முடிப்பாய் என்ற சாபமளித்தார்.துளசி தேவி விஷ்ணுதேவரின் பக்தியுடையவர் .அவர் தவறை உணர்ந்து விநாயகரிடம் மன்னிப்பு கேட்டதால் துளசி தேவி ஒரு செடியாக பிற்காலத்தில் உருவெடுத்து பெருமாளுக்கு என்றும் விருப்பமான பொருளாக இருப்பாய் இருப்பினும் உன்னை ஒரு போதும் எனக்கு எவரும் சமர்பிக்கக்கூடாது நீ எனக்கு விருப்பமற்றவள் என்றார்.இதனாலேயே துளசி விநாயகருக்கு சமர்பிக்கப்படுவதில்லை .
இந்திர தேவனின் விளைவால் சிவனின் கோப கனலில் இருந்து உருவான அசுரன் ஜலந்தரனை அவனது வீரத்தையும் சக்தியையும் கண்டு காலநேமியின் மகளான விரிந்தா மணமுடித்தார்.துளசியின் மற்றொரு பெயர் தான் வ்ரிந்தா . ஜலந்தரன் அசுரர்களில் சிறந்தவனும் தலைவனுமாக அசுரகுரு ஷுக்ராச்சாரியாரால் நியமிக்கப்பட்டான் . பாற்கடலை கடையும் பொழுது கிடைத்த விலைமதிப்பற்ற பொருட்களில் தன் வளர்ப்பு தந்தை வருண தேவருக்கு எதுவும் கிடைக்கப்பெறாமல் இந்திரதேவர் எடுத்துக்கொண்டு சென்றடைந்ததை அறிந்து மிகவும் ஆத்திரம் கொண்டான். இந்திரதேவனிடம் போர் தொடுத்து சொர்க்கத்தை ஆக்ரமித்து விட்டான்.தேவர்களின் அரசனான இந்திரதேவரும் மற்ற தேவரும் விஷ்ணு தேவரிடம் உதவிகேட்டு சென்றனர் . விஷ்ணுதேவர் சிவபெருமானால் மட்டுமே ஜலந்தரனை அளிக்கமுடியும் என்பதால் எம்பெருமானை சந்திக்க சொன்னார்.எம்பெருமானின் முதல் சந்திப்பில் ஜலந்தரானது தீய கர்மங்கள் எதுவும் அதிகரிக்கவில்லை என்பதால் .அவர் சலந்தரனை எச்சரித்து தக்க காலம் வர காத்திருந்தார்.சிலகாலங்களிலேயே ஜலந்தரனின் ஆணவம் பெருகியது தன் மனைவியின் பக்தியை சக்தியாக பயன்படுத்தி அனைத்தையும் ஆழ விரும்பினான் ஜலந்தரன் . சிவனை விட தான் ஷக்தி வாய்ந்தவன் என்திரு நினைத்து கொள்ள துவங்கினான்.அவனது அசுரர் குரு ஷுக்ராச்சாரியாரின் எச்சரிக்கையையும் ஜலந்தரன் பொருட்படுத்தவில்லை .
வ்ரிந்தா விஷ்ணுவின் மேல் பக்தியை அதிகரித்து அவரது கணவரை காக்குமாரு வேண்டி வந்தால், ஜலந்தரன் சிவ பெருமானை தோற்கடிக்க வ்ரிந்தாவின் தீவிர பக்தி போதுமானவையாக இருந்துது .ஜலந்தரன் பார்வதி தேவியிடம் சிவனை போல் உருமாறி உரையாட
சென்றான் .பார்வதேவி அதை அறிந்து கொண்டார் பின் அவரின் மஹாகாளியுடன் யுத்தம் செய்தான் இருப்பினும் அவனை அளிப்பதற்கு வழி இன்றி பார்வதி தேவி விஷ்ணு தேவரி டம் அவனுடைய மாயை போலவே விஷ்ணுதேவரை மாயையில் இருங்குமாறு கூறினார் .விஷ்ணுதேவர் ஜலந்தரன் போல் உருவெடுத்து வ்ரிந்தாவை சந்தித்தார் .விரிந்தா ஒரு கணம் விஷ்ணுதேவரை தன் கணவன் என்று எண்ணியதால் சிவனிடம் யுத்தம் கொண்டிருந்த ஜலந்தரனின் ஷக்தி குறையப்பட்டு இறந்துபோனான் .
விஷ்ணு தேவர் ஜலந்தரன் இறந்தது போல் ஒரு மாயையை விரிந்தா முன் உருவாக்கினார் .அதை கண்ட வ்ரிந்தா தான் ஏமாற்ற பட்டுவிட்டதையும் தன் கணவரை விஷ்ணு தேவர் காக்க தவறியதையும் அறிந்து விஷ்ணு தேவரின் மீது சாபமிட்டார் .என்றும் கருங்கல்லாக இருப்பாய்(சாலிக்ராம் ) என்றும் ,தன் கணவரை இழந்தது போல் விஷ்ணு தேவரும் தன் மனைவியான லக்ஷிமியை பிரிந்து வாடுவார் என்றும் இதன் விலைவே ராமர் சீதையை பிரிந்து வாடியது என்று கூறப்படுகிறது.
பின் தன் கணவர் செய்த குற்றங்களுக்கு ஆதரவாக இருந்ததை எண்ணி வருந்தினார் .தான் எவ்வாறு ஒரு அசுரனுக்கு உதவியதை எண்ணியும், சிவனிடமே யுத்தமிட துணிந்ததையும் இருத்தியாக விஷ்ணுதேவரை சபித்து விட்டதை எண்ணியும் வருந்தி தன்னை தானே எரித்து கொண்டார்.
தான் இவ்வாறு ஒரு சூழலில் தள்ளப்பட்டதால் விஷ்ணு தேவர் துளசி தேவி கொடுத்த சாபம் என்றும் உண்மையாகவே இருக்கட்டும் என்று கூறி வ்ரிந்தா அவள் எரிந்து போன சாம்பலிலிருந்து மீண்டும் துளசியாக உருவெடுத்து என்றும் தனக்கு நடைபெறும் பூஜைகளில் இருப்பார் என்றும் .
வட மாநிலங்களில் நடைபெறும் துளசி விவாஹம் என்னும் விவாஹத்தில் சாலிக்ராமாக இருக்கும் விஷ்ணுதேவரும் துளசி தேவியும் மணமுடிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது .இதற்கான காரணமாக இருப்பது விஷ்ணு தேவர் துளசியின் கணவரான ஜலந்தரன் போல் உருவெடுத்தது என்றும் கூறப்படுகிறது .இருப்பினும் சில கூற்றுகள் படி லட்சுமி தேவி ஒரு அசுரனை அளித்து விட்டு துளசிச்செடியாக மாறிவிட்டார் என்றும் கூறுவர்.
பின் விஷ்ணுதேவர் பக்திகொண்டவர்கள் அனைவரும் உன்னை என்னக்கு சமர்பித்தே வழிபட்டால் மட்டுமே அவர்கள் பிரார்த்தனை முழுமை பெரும் என்று துளசி ,விரிந்தா என்றழைக்கப்படும் துளசி தேவி விஷ்ணு தேவரின் மேல் கொள்ளும் பக்தியின் அடையாளமாக விளங்குகிறார் .
துளசி விஷ்ணுவின் பிரியத்திற்கு உடையது எனவே துளசியை மாலையாக விஷ்ணு தேவர்க்கு அணிவர் ,மேலும் துளசியால் உண்டான மாலைகளை உண்டாக்கி அர்ச்சகர்களும் மற்ற பெருமாள் பக்தர்களும் ,வைஷ்ணவர்களும் அணிவர்.
துளசி வீஷ்ன்னுதேவருக்கு உடையவர் என்பதாலேயே இவர் வைஷ்ணவி,விஷ்ணுபிரியா,ஹரிபிரியா என்ற அழைக்கப்படுவார்.வாரணாசியில் துளசி தேவிக்கென தனி ஒரு கோவில் உள்ளது .
நன்றி





கருத்துகள்
கருத்துரையிடுக