ஏகாதசி என்றால் என்ன ? வைகுண்ட ஏகாதசி விளக்கம்- EKADESI THE DAY TO REACH THE HEAVEN -STORY


ஏகாதசி என்றால் என்ன ?வைகுண்ட ஏகாதசி விளக்கம்


இந்துக்களின் நாட்குறிப்பில் ஏகாதசி  என்றால் 11.ஏகாதசி நாட்கள் தசாவதாரங்கள் எடுத்து உலகையும் தேவர்களையும்  காப்பாற்றிய காக்கும் தெய்வமான விஷ்ணு  பெருமாளுக்காக விரதம் இருக்கும் நாட்கள். மாதத்தில் ஒவ்வொரு  பதினோராம் நாள் ஏகாதசி நாளாக கொண்டாட படுகிறது.  அவ்வாரே மாதத்தில்  2 ஏகாதசிகள் உள்ளன.  

ஒன்று ஷுகள பக்ஷத்தில் (அமாவாசையில்  இருள் சூழ்ந்த நிலவற்ற வானில் இருந்து பௌர்ணமியாக ஒளிதரும் புதிய நிலா தோன்றும்    -வளர்பிறை )ஏகாதசி மற்றொன்று க்ரிஷ்ணபக்ஷத்தில் (பௌர்ணமியில் ஒளிதரும் நிலாவில் இருந்து இருள் தரும் நிலா அற்ற வானமாக உள்ள  அமாவாசையாக)   தோன்றும் ஏகாதசி. 

அதாவது பூமியை வளம் வரும்  சந்திரனின் அமைப்பை  பொறுத்தே.சந்திரனின் ஆதிக்கம் மனிதனின் உடலிலும் மனதிலும் பல மாற்றங்கள் ஏற்படுத்தும் தன்மையுடையது.

 இவ்வாறு  வருடத்திற்கு மொத்தம் 24 ஏகாதசி விரத நாட்கள்  உள்ளது  .

மார்கழி மாதம் தோன்றும் மிகவும் சிறப்பு வாய்ந்த ஏகாதசி நாட்கள்: உட்பண்ண ஏகாதசி, மோக்ஷதா ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி      


   சொர்க்கத்தை அடைய ,பாவங்கள் மன்னிக்கப்பட 

விரதம் இருக்க வேண்டிய நாள்" வைகுண்ட ஏகாதசி" 




                    முரண் என்னும் அசுரன் சந்திரவதி  என்னும் நகரத்தை ஆச்சி செய்து வந்தான்.இந்திர லோகத்தையும் கைப்பற்றி ,பஞ்ச  பூதங்களின் தேவர்களையும் தோற்கடித்தான் .தேவர்கள் அனைவரும் சிவ பெருமானிடம் உதவி கேட்டனர் .பின் சிவ பெருமானின் உத்தரவு படி விஷ்ணு தேவரிடம் முறையிட்டனர் . விஷ்ணு தேவர் பத்திரிக்கா ஆஸ்ரமத்தில் உள்ள ஹிமாவதி என்னும் குகையினுள்  முரணை அளிக்கும் ஆயுதத்தை பெற  சென்றார் அல்லது ஓய்வெடுக்க சென்றார் .விஷ்ணு தேவர் தன்னை அளிக்க போவதை அறிந்து முரண் அரக்கன் குகையின் உள்ளேய நுழைந்து துயிலாடி இருக்கும் விஷ்னு தேவரை அழிக்க நினைத்தான்  .அப்பொழுது விஷ்ணு தேவரின் உடலில் இருந்து தோன்றிய  ஒரு பெண் வடிவமான ஷக்தி  கையில் பல ஆயுதங்களுடன் தோன்றி அவனை பார்வையாலேயே  வதம் செய்தார்.இதை அறிந்து கொண்ட விஷ்ணு தேவர் அந்த பெண்ணிற்கு வரமளிக்க விரும்பினார் .


மேலும் விஷ்ணுதேவர் அந்த பெண் ஏகாதசி திதியில் தோன்றியதால் ஏகாதசி என்றே அழைக்கப்படுவார் என்றார்  .

வருகின்ற ஏகாதசி நாட்களில் எவரொருவர் தன்னை நினைத்து பிராத்தித்து விரதம் (ஏகாதசி விரதம் )இருக்கிறாரோ அவர்களின் பாவங்கள் நீங்கி, தங்களின் வைகுண்டத்தை அடையும் வரம் வேண்டும் என வேண்டி வரம் வாங்கினார்.அப்படி வைகுண்டத்தை அடைந்தவர்கள் சுமார் ஆயிரம் கல்பங்கள் மேல் அங்கேயே இருந்திடலாம் .அவ்வாரே அந்த ஆன்மாக்கள் மோக்ஷம் பெரும் .







  இவ்வாரே  வளர்பிறை பதினோராம் நாள்  ஷுக்லபக்ஷத்தில்  வைகுண்ட ஏகாதசி கொண்டாட படுகிறது.இந்த ஏகாதசி நாளில் விரதம் இருப்பவர்கள் நிச்சயம் சொர்க்கத்தை அடைவர் அவர்களது பாவங்களும் மன்னிக்க பட்டு விடுகிறது.
 அன்று விஷ்ணுதேவர் தன்னிடம்  சரண் அடைந்த பக்தர்களையும் அழைத்து கொண்டு கருட வாகனத்தில் வைகுண்டத்திற்கு செல்வதாக கருதப்படுகிறது அன்றே திருமலையில்  சொர்க வாசல் திறக்கப்படும் .அன்று அணைத்து திருமாள் கோவில்களிலும் மூடப்பட்டிருக்கும் சொர்கவாசல்(வைகுண்டத்தின் கதவுகள்,பரமபத வாசல் ) திறக்கப்படும் .



                        புராணங்களின் படி இரு அசுரர்கள் வைகுண்டத்தில் கதவை திறந்தனர்  இவ்வாறு திறக்கப்படும் வைகுண்ட துவாரத்தில் கடந்து செல்பவர்கள் அணைத்து ஆசிகளையும் ,மோக்ஷத்தையும் பெற வேண்டும் என்று இரு அரக்கர்கள் விஷ்ணு தேவரிடம் வேண்டியதாக ஒரு புராணம்  கூறுகிறது .


    வைகுண்டத்தில் பக்தர்கள் வைகுண்ட ஏகாதசி  முன் நாள் இரவில் இருந்தே பெருமாளை எண்ணி பாடல்களை பாடி பக்தியுடன் காலையில் 

திறக்கப்பட்டும் சொர்கவாசலில் சென்று தங்களின் பிறப்பு  மோக்ஷம் அடைய  காத்திருப்பர் .பின் அன்று முழுவதும் விரதம் இருப்பர் .விரதம் இருக்க கடினமாக கருதுபவர்கள் அரிசி ,தானியவகைகளை உண்ணாமல் இருப்பர்.மற்ற ஏகாதசி நாட்களை காட்டிலும் இந்த ஏகாதசியின் விரதத்தை முழுமையாக முடிப்பது அவசியம்.நிச்சயம் இறையருள் பெருகும்.


நன்றி 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

கம்சனின் முற்பிறவி - THE KAMSA'S PREVIOUS BIRTH STORY EXPLAINS THE REASON BEHIND HIS URGE TO KILL LORD KRISHNA.

விஷ்ணுவின் ஹயக்ரீவ அவதாரம் - THE HORSE FACED AVATAR THAT SAVED THE VEDAS FROM BEING STOLEN BY THE DEMON KING