இணையதளத்தை பயன்படுத்தாதவனே உலகின் கடைசி அறிவாளியாக முடியுமா ? ?



                இணையதளத்தை                   பயன்படுத்தாதவனே  உலகின்                          கடைசி அறிவாளியா ?
     
           
                               வீட்டை விட்டு வெளியே வராமல் அதிநவீன டோர் டெலிவரி வழங்கப்படும் காலம் இது  . 


   இதுபோன்ற காலகட்டங்கள் நம்மை சமுதாயத்தில் வெளியே வந்து அலையவிடாமல் தடுக்கின்றன என்றும் சாலையோர வியாபாரிகளின் வருமானத்தையும் அளிக்கின்றன என்றும் சற்றே நமக்கு தோன்றும்.மனிதனின் கண்டுபிடிப்புகள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் நாம் செயல் பட்டால் இது போன்ற சாலையோர வியாபாரிகளுக்கு பெரிய தொழில் நிறுவனங்கள் தங்களது பொறுப்பில் இவர்களை எடுத்துக்கொள்ளலாம் .அவர்களுக்கு SPONSOR செய்ய போட்டிபோட்டுக்கொண்டு வரலாம்.அவர்களுக்கு தொழில் மேம்பாட்டு ஆலோசனைகளை இலவசமாகவும் கற்றேகொடுக்கலாம் .நமது தேசத்தின் அடித்தட்டு மக்களை ஆதரிப்போம்.அவர்களின் வளர்ச்சியே நமது நாட்டின் வளர்ச்சி .இருப்பினும் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் நமது நேரத்தை வீணாக்காமல் இருப்பதுபோல் தோன்றினாலும் .நமது நேரம் வேறொன்றுடன் வீணாவதை இவற்றால் தடுக்க இயலாது .

சுயமாக சிந்தித்து கஷ்டபாமால் இருக்க கைகொடுக்கும் இணையதளத்தின் பதிவும்,பதிவு படுத்தியதை பயன்படுத்தவும்,  பரிமாற்றமும், பதிவிறக்கமும் செய்ய உதவும் அம்சங்கள் நம்மை உலகத்தோடு இணைந்தே வைத்துள்ளன.   உங்களது கேள்விக்கு இன்ஸ்டன்ட் ரிப்ளை  தரும் AI நண்பர்கள் விற்பனையில் உள்ள காலம் இது .AI நண்பர்கள் உங்களது அத்தனை கட்டளைகளையும் செய்ய வடிவமைக்கப்படுகிறார்கள்,உங்களது பழக்கவழக்கங்களை அறிந்தும்,உங்களுக்கு தேவையானவற்றை நினைவுபடுத்தியும்,மனவியல் ஆலோசகராகவும் திகள்வார்கள்.
            நிஜத்தில் விளையாட வேண்டாம் இருந்த இடத்திலேயே "வேர்ட்யல்  ரியாலிட்டி " கேம்ஸ் இருக்கும்.நிஜத்தில் இல்லாத கற்பனை உலகில் மனதை பயன்படுத்தி போராடும் விளையாட்டு .
இணையம் நமது மனதிற்கு பாரமாக இருப்பது போல் வருங்கால சந்ததியற்கு எந்த அளவுக்கு நன்மை தரும்?  மனிதன் மனம் எதையும் செய்யாமல் ஜடம் போல் இருக்கும் நிலையை STRESS என்றும் ஒருவித அழுத்தம் என்றும் சொல்லலாமா ?  சாதாரண மனிதனை மனிதத்தன்மையை விட்டு தூரமாக எடுத்துக்கொண்டுபோகிவிடுமா நமது கண்டுபிடிப்புகள் ? சூரிய ஒளிபடாத உடல், பார்ப்பதை கேட்பதை மட்டும் செய்யப்போகும் ரோபாக்களாக நாம் மாறப்போகிறோம் என்றுதோன்றுகிறது.
இணையத்தை சிப் ஆக செய்து தலையில் பதுக்கி வைத்தாலும் மனித மனதிற்கு அவற்றை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு சக்தியுண்டா? நமக்கு வேண்டிய பொழுது விடை தரும் இணையதளம் இல்லையென்றால் உயிர்வாழ இயலாது என்கிற நிலை வரும் பொழுது விஞ்ஞானம் இதுபோன்ற சிப்புகளை செய்ய ஆரம்பித்துவிடுமோ.


   குமிந்து நிமிர்ந்து  வேலை செய்யவேண்டாம்    எதையும் நீங்கள் செய்யவேண்டாம் எல்லாம் எங்கள் கம்பெனி ரோபோட்ஸ்  பாத்துக்கும்.புதியதலைமுறைக்கென்றே வடிவமைக்கப்படும் ரோபோக்கள் மனிதன் செய்துமுடிக்கும் அணைத்து வேலைகளையும் செய்துமுடிகிறது , மனிதனின் உதவியின்றி இயங்கப்பெறும் தொழில்கூடங்கள்.

          
        
        

     இன்னும் எளிமையாக சொல்லவேண்டும் என்றால்.இனி நவீனகாலத்தில் வாழ்பவர்க்கு சில சத்துள்ள காய்கறிகள் தேவைப்படாது .அந்த காய்கறியில் உல்லாசத்துக்களை செயற்கையாக செய்து சிறிய அளவில் மாத்திரைபோல் உருவாக்கிக்கொள்ள இயலும்.இதனால் கொஞ்சம் கூட விவசாயம் செய்ய நிலம் இல்லாத ஊர்கள் பயனடையலாம் .இது போன்ற ஒரு நாகரீகம் தோன்றிவிட்டால் மிகவும் வளர்ந்த தேசங்கள் தப்பித்துவிடும் .

உங்கள் மனதை மட்டும் எங்கள் பிராடக்ஸ்   மேல் செலுத்துங்கள் போதும் நாங்கள் பத்துக்குறோம் என்று கூறப்போகிற வாழ்க்கை அனுபவம் கிடைக்கப்போகிறது புது தலைமுறையினருக்கு .விடியும் போதும், உறங்கும்போதும் அலாரம் வைக்க கட்டளையிடும் வசதி கூட நாளை உயிர்பெற்று நம்முடன் நடமாடும் அடிமையாக மாறிவிட்டால்? அதை படிப்பறிவில்லாமல் நாம் நம்பும்போது மனித சமுதாயத்திற்கு ஏமாற்றம் வராதா?
   
ஒரு கலாச்சாரத்தின் வழி தோன்றிய சில செயல் முறைகளை நாம் பின்பற்றாமல் அல்லது அவற்றை உபயோகம் படுத்தாமல் இருக்கும் பொழுது காலங்கள் சென்ற பின் அந்த கலாச்சாரம் அல்லது அந்த  செயல் முறை மறைந்து விடுகிறது .காட்டில்  வேட்டையாடிக்கொண்டிருந்த நாம் காலம் மாற நவீன நாகரிகத்திற்கு வந்துவிட்டோம் .

இன்று வறுமை உணவிற்கான திண்டாட்டங்கள் அன்று இல்லை .ஏனெனில் அவன் விலங்குகளை வேட்டையாடும் திறன் பெற்றுருந்தான் அல்லது விவசாயம் கற்றிருந்தான் என்று வைத்து கொள்வோம் .இன்று நாம் ஒருவரை ஒருவர் சார்ந்தும் ,மென்பொருள்களை சார்ந்தும்,அரசாங்கத்தை சார்ந்தும்,தனியார் நிறுவனங்களை சார்ந்தும் தான் இருக்கிறோம்.இதனால் தான் வறுமை மற்றும் அணைத்து குற்றச்செயல்கள் தோன்றியுள்ளன.
காரணம் விட்டுப்போன அல்லது மறந்துபோன பழக்கவழக்கங்கள்.தற்போது நவீன கால வாழ்க்கைக்கு நமது உடலும் DNA அடிப்படையில் தன்னை சொகுசாக்கி கொண்டது .

பகுத்தறிவு என்பது சிந்திக்காமல் வரப்போவதில்லை.
நம்மை அப்போது யார் கட்டுப்படுத்த இயலும்?
சிந்தித்து பாருங்கள் இணையத்தையே தொடாமல் இருக்கும் ஒரு மணிதான் நம்மை கட்டுப்படுத்த இயலும்  என்றால் அது  சாத்தியம் தானே?


இந்தியாவில் கணிதம் சார்ந்த சில தேர்வுகளில் CALCULATOR கணக்கிடும்பொறி பயான்படுத்த கூடாது மற்றும் சில பள்ளிகளிலும் தடை உள்ளது.ஆனால் வெளிநாட்டில் இதை பயன்படுத்தலாம் .இருப்பினும் இந்திய மாணவர்கள் சுயமாக சிந்திக்கும் பொழுது அவர்களின் மூளை சார்ந்த செயல் திறன் மேலும் அதிகரிக்கின்றன. மேலை நாட்டை காட்டிலும் கணிதத்ததில் சிறந்தும் விளங்குகின்றனர்  மனதில் ஒரு நம்பிக்கையும்  எழுகிறது .
                
          நமது கண்டுபிடிப்புகள் நம்மை அதன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் காலம் தான் துவங்கபோகிறதோ?
ஒன்றில்லாமல் நம்மால் இயங்க முடியாமல் போகும்  நிலைக்கு நம்மை பழக்கப்படுத்திக்கொள்ளும் பொழுது நமது அன்றாடம் பாதிக்கப்படும் முன்னேற்றம் என்பது இருக்கப்போவதில்லை.மாறாக ஒன்றை நம்பியே இருக்கப்போகிறது.
     
  மனிதனுக்கு அடையாளம் அவனது மனம்தான் ,அதாவது அனைத்து உணர்ச்சிகளும், அன்பும் ,பண்பும், சிந்திக்கும் திறன்தான். இது அழிந்தால் மனிதன் மனிதனாக இருக்க முடியுமா .
     
        மலரை பற்றி கருத்துக்கள் இணையத்திற்கு தெரியும் ஆனால் அந்த மனத்தையும் அழகையும் நிச்சயம் அது இயலாது .அதேபோல் மனிதனுக்கு வணக்கம் சொல்லத் தெரியும் ஆனால் அவனுடைய அன்பு அதற்கு புரியாது .
புதுயுகத்தில் உயிர்கள் பாதிப்பின்றி இருக்க வேண்டும். வெறும் அறிவால் உலகம் இயங்காது.

நன்றி









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

கம்சனின் முற்பிறவி - THE KAMSA'S PREVIOUS BIRTH STORY EXPLAINS THE REASON BEHIND HIS URGE TO KILL LORD KRISHNA.

ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"