பாம்புகள் நகரம் (கற்பனை கதைகள் )

இங்கு பகிர படும் கதைகள் எனது சொந்த கற்பனைகள் மட்டுமே,பொழுது போக்கின் அடிப்படையில் கதைகளை விரும்புபவர்களுக்காக எழுதப்படுகிறது ,நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் இருக்க இதை நீக்கிட விரும்புகிறேன்  ..

அது ஒரு அமைதியான மதியம்,நாய்களுக்கு உணவு அளித்துவிட்டு .. கோவிலுக்குள் சென்ற தந்தையை காண சென்றேன். அவர் கோவில்களை பற்றியும் இதிகாசங்கள் புராணங்கள் பற்றியும் நன்கு அறிந்திருக்கும் நபர். கோவிலை விட்டு வெளியே வந்தார் நான் என் தந்தையிடம் இங்கு  நான் அவ்வப்போது காணும் விசித்திரமான மனிதர்களை பற்றி கூறி வருவேன். அவர் அது எனது கற்பனை மற்றும் பயம் என் று கூறி தைரியம் சொல்ல அந்த மர்ம நபர்கள் கூட நல்லவர்களாக கண் களுக்கு தெரிவார்கள்.



நாங்கள் கோவிலை விட்டு வெளியே வந்த போது.ஒரு கூட்டம் எங்கள் கண் முன்னே நின்றது.நொடி பொழுதில் இங்கே எண்ண நடந்து இருக்கும் என்று முன் சென்று பார்க்க, மனிதனை விழுங்க கூடிய அளவில் மிக பெரிய மலைப் பாம்புகள் மயக்க‌ஊசிகள் செலுத்தபட்டு வாய்கள் கட்டப்பட்டு காவலர்கள் துணையுடன் வாகனங்களில் ஏற்றி செல்லபட காத்திருந்தன. நாங்கள் அதை கடந்து  எங்கள் வீட்டிற்குள் சென்றோம்.



இந்த ஊரில் திடிரென என்ன வந்து சேர்ந்தது இப்படி சிக்கிக்கொண்டோமே என்று கவலையுடன் நின்றிருந்தேன். 

ஆம் திடிரென வானிலிருந்து எண்ணிலடங்காத எரி கற்கள் எங்கள் ஊரில் விழுந்தது. அன்று விழுந்த எரிகற்களால் அருகில் இருந்த பழமையான கோயில் இடிந்து விழுந்தது.


என் தாய் தந்தை  நானும் என் சகோதரனும்  இப்போது பத்திரமாக இருப்பதே ஒரு மாயம் தான் என்று கூறவேண்டும். 

இடிந்த அந்த கோவிலுக்குள் இருந்து வெளியே வந்த ‌‌‌என் தந்தையிடம் ஏன்   இங்கு சென்றிர்கள் என்று  கேட்டேன்.
அதற்கு அவர் அந்த கோவில் மிகவும் விசித்திரமாக மேல் சுவர் மட்டும் விழும் வண்ணம் விழுந்திருக்கிறது. கோவிலில் சில சக்திவாய்ந்த பொருட்கள் பலவருடங்களாக பாதுகாக்கப்பட்டு வரபட்டுல்லது.அங்கு உள்ள பொருட்களை பாதுகாப்பது நமது பொறுப்பாகும்.இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிலர் கோவிலில் நுழைந்து அவற்றை கைப்பற்ற நினைக்கலாம் என்று என் தந்தை கூறினார்.

நானும் என் சகோதரனும் தந்தை கூறும் பொருட்கள் அங்கே ஏதேனும் உள்ளதா என்று கான முடிவு செய்து கோவிலுக்கு செல்ல முற்பட்டோம்.
செல்லும் வழியில் இராணுவ வாகனங்கள் மிகவும் இருநூறுஅடி  மலைபாம்புகளுடன் போராடி கொண்டிருந்தன.எங்கும் பீரங்கிகள் எரியும் குண்டுகளின் சத்தம்.ஒருவழியாக இருவரும் கோவிலை  சென்றடைந்தோம்.



கோவிலின் நுழைவில் நின்று இருந்தோம். பின்னர் உள்ளே சென்றோம் கோவில் மண்டபத்தில் மேல் கூறை அற்று இருந்தது.

தெய்வம் வீற்றிருக்கும் கர்பக்ரகத்தை தவிர்த்து அனைத்தும் சேதம் கண்டிருந்தது.தூண்களும் சாய்ந்து இருந்தன.

நம் முன்னோர்கள் பாதுகாத்து வந்த ஒரு பிரமாண்டமான கோவிலை இந்த ஒரு சூழலில் காணும் எங்கள் கண்களில் கண்ணீர் சூழ்ந்தும் மனதை உருக்கியும் நிற்கசெய்தது.


திடீரென இங்கு வேறு ஏதும் உயிர்கள் உள்ளது போல் எங்கள் மனதிற்கு தோன்ற இருவரும் எச்சரிக்கை உணர்வுடன் 
வேவ்வேறு திசைகளில் பார்தவாரு உள்ளே செல்ல முடிவு செய்தோம்.

எங்களின் ஒவ்வொரு கால் அடிகளிலும் ஏதேனும் வருமோ என்ற அச்சமும் எதிர்பார்ப்பும் கண்டவாரே இருந்தோம்.

அங்கே அம்மன் சிலை பாதுகாப்பாக இருப்பதை கண்டு திருப்தி அடைந்தோம். தெய்வ சிலையின் எதிரே உள்ள மண்டபத்தின் மேல்  சுவர்கள் இடிந்து விழுந்ததில் கில் உள்ள தரைகள் மேல் எழுந்து நின்றது போல் தோன்றியது.

இடிபாடுகளில் இடையில் வைரம் போல் ஒலியுடன் மின்னும் ஒரு கல் தோன்றியது.


அதை எடுக்க முயற்சிக்கும் முன் திடிரென  மிக பெரிய  பாம்பு எங்களை விழுங்கும் நோக்கத்தில் எங்களை நெருங்கிவந்தது. அந்த பாம்பை தொடர்ந்த இராணுவத்தினரும் கோவிலுக்குள் உள்ளே வந்தனர்.

இருவரும் தலையில் கைகளை வைத்துக்கொண்டு கத்தியவாரே  கீழே படுத்தோம்.பாம்பை நோக்கி துப்பாக்கி சூடுகள் பாய்ந்தது.

 நாங்கள் கண்களை மூடி பயதில் அமர்ந்தோம். எங்களை காப்பாற்றிய இராணுவத்தினரிடம் நன்றி கூறிவிட்டு அங்கிருந்த கல்லை எடுக்கும் முயற்சியை தற்சமயம் விட்டுவிட்டோம். 

 இராணுவத்தின் தலைமை அதிகாரி அவரிடம் இதை பற்றி கூற முயற்சித்தோம்.அதற்குள் அவர் எங்களை காவளர்களுடன் அந்த இடத்தை விட்டு எங்களை வேறு பாதுகாப்பான இடத்தில் விட்டுவிடுமாறு  கூறிவிட்டு வேகமாக சென்றார்கள்.


எங்களை ஜீபில் ஏற்றிய காவலர் வீட்டிற்கு சென்று விட்டுவிடுவார் என்ற எதிர்பார்ப்பில் அமர்ந்திருந்தோம். அவர் எங்களிடம் சில விசாரணைகள் செய்யவேண்டும் என்று பல மணி நேரம் கேள்விகள் கேட்டார். நாங்கள் இதை தான் கூறினோம். இந்த கோவிலில் மிகவும் பழமையான ரகசிய பொருட்கள் உள்ளது அதை யாரும் எடுத்துவிடுவார்கள் என்ற அச்சதில் இங்கு வந்தோம் என்றான் என் சகோதரன். 

அந்த காவல் அதிகாரி அது எங்கள் வேலை நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள் என்று எங்களை திருடர்கள் போல் விசாரித்தார்.
நாங்கள் எங்களின் தந்தையின் செல்வாக்கையும் அவர் இந்த அரசின்  தொல்லியல் துறையில் பணியாற்றியபோது நாட்டின் பல பொக்கிஷங்களை மீட்டெடுத்து அவற்றின் பெருமைகளை உலகிற்கு கொண்டு சேர்த்துள்ளார் என்று  கூறினோம். நான் சற்றே உணர்ச்சிவசப்பட்டு கல் என்றேன்.என் சகோதரன் என் கால்களை மிதித்து எச்சரித்தான்.
எங்கள் நேரமோ அந்த காவலர் நாங்கள் எதையோ மறைப்பது போல் புரிந்து கொண்டார்.

அவர் கோவிலுக்குள் மற்ற காவலர்களை அனுப்பி சோதனை செய்ய சொன்னார்.அங்கே ஒரு காவலர் கோவிலின் உள்ளிருந்து எதோ கண்டுவிட்டது போல கூச்சலிட்டார். இவரும் அவர்கலிடதில் சென்றார்.


என் சகோதரன் நாம் சரியான நபரிடதில் இதை பற்றி கூறவில்லை என்று என் மனம் கூறுகிறது. நாம் இங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்று என் உள் மனம் கூறுகிறது என்றான் என் சகோதரன்.நாங்கள் இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தோம். அங்கிருந்த வேறு இடத்திற்கு வந்தோம்.எங்களை காப்பாற்றிய அதே இராணுவ தலைமை அதிகாரி அங்கே நின்றிருந்தார்.அவரை நாங்கள் கண்டு அச்சத்தில் எங்களை மறைத்துகொண்டோம்.

இருப்பினும் அவர் எங்களை எப்போதோ கண்டுவிட்டார் என்பதை நாங்கள் அறியவில்லை.
காவலர்களிடம் இருந்து நாங்கள்
தப்பிஇருக்கிறோம் என்று அவர் புரிந்து கொண்டார்.

எங்களை பின் தொடர சில ஆற்களையும் அவர் அனுப்பிவைத்தார்.
இதை அறியாமல் நாங்கள் வீட்டிற்கு வந்தோம்.எங்கள் தந்தையிடம் நாங்கள் கண்ட அந்த கல்லை பற்றி கூறினோம்.அதை எடுக்கும் முன் நடந்தவற்றையும் கூறினோம்.

என் தந்தை அந்த கல்லின் தோற்றத்தை பற்றியும் அது இருந்த இடத்தை பற்றியும் விசாரித்து அதை கேட்டு அச்சத்திலும் குலப்பத்திலும் நின்றார்.

ஆம் அவர் படித்த பழைய கல்வெட்டுகளில் ஒரு கதையில் தோன்றிய ஒன்று அந்த கல்.அந்த கல்லின் சாபமும் நிகழும் இந்த நிகழ்வுகளும் ஒன்று என்றே அவர் கூற,நாங்கள் குழம்பி நின்றோம்.

பல அந்நிய தேச  மன்னர்கள் போர்கள் நடத்தி  இந்த கல்லை கைப்பற்ற முயற்சித்துள்ளனர்.அதை காக்கும் பொருட்டு நம்மை அன்று ஆச்சி செய்த மன்னர்கள் அதை பாம்புகளின் கவசத்தில் பாதுகாத்து உள்ளார்கள். மேலும் அந்த எரி கற்கள் மட்டுமே அந்த கல்லை வெளிய வரைக் கூடியவை.

தற்போது இந்த கல் அந்த கோவிலை விட்டு வேறு கைகளில் சென்றடைந்து உள்ளது.அதன் விளைவே இந்த பாம்புகளின் தோற்றம்.என்றார் என் தந்தை.

நாங்கள் குழப்பத்தில் நின்றோம்.அப்பொழுது நாங்கள் கோவிலில் கண்ட கல் அதன் மாற்று என்றார் என் தந்தை.

கோவிலில் இருந்த‌ மாற்று‌ கல்லை எடுத்துகொண்டு காவலர் சென்றார்.அந்த கல்லை லாபகமாக்கும் நோக்கத்தில் ஆட்களை தேடியும் வந்தார்.அன்று அவர் தொடர்பு கொண்ட நபர்...
அலைபேசியில் அவர்கள் அந்த கல்லை வாங்க நம்ப முடியாத தொகையை பெற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டார்.

அடுத்த ‌நாள் திடீரென காவலர் வீட்டில் யாரோ கதவை தட்டும் சத்தம்.இராணுவ அதிகாரி வந்தார்.நான் உங்களிடம் சிலவற்றை பற்றி பேச வேண்டும் என்று கூற.காவலரிடம் எங்களை பற்றி விசாரித்தார்.நாங்கள் எவ்வாறு தப்பினோம். ஏன் தப்பினோம் என்று. 

கொஞ்சமும் நெஞ்சில் ஈரமற்ற அந்த காவல் அதிகாரி நாங்கள் கோவிலில் ஏதோ மறைபொருள் திருடவந்தோம் என்றும் நாங்கள் அவருக்கு உதவி செய்வதாக கூறி அங்கிருந்து எதையோ எடுத்துகொண்டு தப்பிவிட்டோம் என்றும் கூறினார். ராணுவ அதிகாரி  அங்கிருந்து பின்னர் விடுபட்டார். 

இராணுவ தளத்தில் பாம்புகளின் மரபணுக்கள் சோதனை செய்யப்பட்டு வந்திருந்தது.
சோதனையில் அவை மிகவும் பழமைவாய்ந்த உயிரினங்களை ஒற்று இருந்தது.


சரி இந்த பாம்புகள் திடிரென எங்கிருந்து தோன்றுகின்றது என்பது புரியாத மாயமாகவே உள்ளது இதை அறியவிடில் அடுத்து நாம் எங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்வது என்பது கணிக்க இயலாது என்று குழப்பத்தில் இருந்தனர்.


அப்போது கணினியில் பாம்புகளின் முதல் தொற்றம் கோவில் என்ற குறியீடு இருந்தது. அடுத்து அவை தோன்றிய ஊர்களும் இருந்தது.
அந்த குறியீடுகள் அடுத்து ‌அடுத்து காண்பிக்கும் ஊர்கள் ஏதோ ஒரு சாலையை பிடித்து ஊரை விட்டு நபர் ஓடி செல்வது போல் இருந்தது.

பாம்புகள் ஊரை விட்டு செல்வதாக இருப்பதா? நாம் கொன்று குவிக்கும் பாம்புகள் அடுத்து ஊரில் ஏன் தொன்றவேண்டும்.என்று யோசித் திருந்தனர்.

பாம்புகளின் அடுத்து தோன்றும் இடம் இவர்களால் உணர முடிந்தது.
அங்கே பாதுகாவலர்கள் சென்றனர்.

பாதுகாவலர்கள் பாம்புகளின் தோற்றத்திற்கு காத்திருந்தனர்.ஆனால்
அங்கே உள்ள மனிதர்களின் மீது கவனத்தில் இருந்தார் அந்த இராணுவ வீரர்.


ஆம் அவர் எங்களை பின்தொடர அனுப்பிய நபர் மூலம் எங்களின் நோக்கங்கள் நல்லவை என்றும் அந்த கல் திருடப்பட்டு விட்டது என்றும் புரிந்து கொண்டார்.

 திடீரென ஒரு சிவப்பு வண்ண கார் அங்கே கடந்து செல்ல அதை பின் தொடர்ந்தார்.அந்த காரின் வேகத்திற்கு ஈடுகட்டி அங்கே சென்றார் பின் நடக்கும் சம்பவங்களை அறிந்தார். 




 அந்த சிவப்பு காரில் இருந்து இறங்கிய நபர் சில பெட்டிகளை எதிரே உள்ள வீட்டிற்குள் கொண்டு செல்ல.சில மணி நேரம் கழித்து வீட்டில் இருந்து வெளியே அந்த கல்லை வீற்க்கும் காவலருடன் வெளியேறி. அந்த நபர் மீண்டும் வந்த அந்த காரில்  சென்றார்.

அந்த கார் செல்லும் அடுத்த இடம் தான் பாம்புகள் தோன்றும் இடம் என்பதை யூகித்த இராணுவர். அந்த இடத்தை பாதுகாக்க வேண்டாம் என கட்டளையிட்டார்.மேலும் தனது வீரர்களிடம் அவர்களுடைய இலக்கு அந்த காரில் வந்த நபர் ஊரை விட்டு செல்லக் கூடாது என்பதே ஆகும்.

இறவுகளில் பாம்புகள் தோன்றுவதில்லை.எனவே இரவில் அந்த நபர் ஊரை விட்டு செல்கிறார் அதனாலேயே அவரால் இவ்வளவு தூரம் செல்ல முடிந்துள்ளது என்று உணர்ந்தனர்.

நிற்கும் ஒவ்வொரு நிமிடமும் பாம்புகள் மண்ணில் தோன்றுகின்றன. 
அன்று இரவு அனைத்து பாதுகாவலர்களும்  அந்த நபரை சுற்றிவளைத்விடும் திட்டத்தை தீட்டினர்.


ஆனால் காவலர் பணத்தை வாங்கி விட்டு எங்களை கொன்றுவிட ஆதாரம் அழியும் என்றும் அவ்வாறு அழிந்தால் நாங்கள்  குற்றதில் ஈடுபட்டு  அந்த கல்லை வாங்கும் நபர்களால் கொள்ளப்பட்டோம் என்ற கதை தோன்றும் என்ற நோக்கத்தில் ஆட்களை எங்களை கொள்ள ஏவிவிட்டார்.


என் தந்தை தாய் இதை முன் கூட்டியே அறிந்து பத்திரமாக ஒரு இடத்தில் இருந்தனர்.நாங்கள் வெளியே இருந்த சமயத்தில் எங்களை தாக்க வந்த நபர்களிடம் இருந்து  இராணுவத்தினரால் நோட்டமிட அனுப்பப்பட்ட நபர்களால் பாதுகாக்கப்பட்டு விட்டோம்.


அன்று ‌‌‌‌‌‌‌‌‌‌‌இரவு அந்த சிவப்பு கார் தடுத்து நிறுத்தபட்டு அந்த நபர் வெளியே வர. தன் உடையில் இருந்த வெடிபொருள் கொண்டு அந்த கல்லை கையில் உயர்த்தி வெடித்து விடும் மிரட்டல் விட்டான்.அதிகாரியின் உத்தரவில்
அனைவரும் மௌனம் காத்து அந்த கார் தப்பி செல்ல வழிவிட்டன.

இரவும் முடிந்தது,

அதிகாலை சிவப்பு வண்ண காரில் சென்ற நபர் பாம்புகளால் விழுங்கி கொல்லப்பட்டார் என்ற தகவல் மற்றும் அதிசய கல் கைப்பற்றப்பட்டது என்றும் தெரியவந்தது.

இது போன்ற பொகிஷத்தை பாதுகாக்கும் பொருட்டு அரசாங்கம் முயற்சித்து அதை பதுகாக்க முடிவும் செய்தது. பாம்புகளின் தோற்றமும் மறைந்தது.







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"

சிவனின் நந்தி தேவர் - LORD SHIVAS NANDI , THE STORY BEHIND NANDI