அறியப்பட்ட மாய கதைகள் ( மெட்ரோ சிட்டியிலும் இரவுகளில்)

இரவுகளில் ஓநாய்கள் எழுப்பும் ஒலிகளும் ஆந்தைகளின் சத்தமும் கேட்கும் காடுகள் நடுவில் உள்ள  கிராமங்களும் அல்ல மாறாக நள்ளிரவில் வாகனங்களின் இரைச்சல்களும் டீ கடைகளில் பேச்சுகளும் கேட்கும், இரவிலும் இயங்கியவாரே இருக்கும் முக்கிய நகரத்தில் அன்று நடந்த சம்பவம் இது.

"இது என்னுடைய கற்பனை கதை மட்டுமே. நான் கேட்கும் கதைகளில் என்னுடைய கற்பனைகளையும் சேர்த்தே பகிர்வேன்.இது உண்மையா அல்லது முழுதும் பொய்யா என்பதை நானும் அறியமாட்டேன்."

கஸ்தூரி நகர் சற்று பேருந்து நிலையத்திற்கு பின்புறத்தில் பிரதான சாலையின் அருகில் அழகாக அமைந்திருக்கும் ஒரு வீதி. கஸ்தூரி நகர் சுற்றியும் கண்ணைகவரும் அடுக்குமாடி அங்காடிகள்,ஹோட்டல்கள் என எங்கும் கண்களை கூசும் ஒளிகள் பொருந்திய கட்டிடங்கள்.  நல் இரவுகளில் பேருந்து நிலையம் வந்தடையும் இரவு நேர ஊழியர்கள் அந்த வீதியை கடந்தே செல்வர்.அங்குவசிக்கும் மக்களில் ஒருவர் "துரை".

இரவு அன்று துரை வளர்க்கும் தெரு நாய்களின் ஓசை அதிகமாகவே இருந்தது. பேருந்து நிலையத்தில் இருந்து மக்கள் யாரேனும் இந்த சாலையில் செல்வார்கள் என்று எண்ணியே தூங்க முயற்சித்தார் துரை.இரவு மணி 2.00am.


 இருப்பினும் நாய்களின் அலறல் சற்றே எண்ணை வெளியே சென்று பார்க்க தூண்டியது. இருப்பினும் சலிப்பில் அமர்ந்தேன். திடிரென்று ஒரு பெண் நாய்களை விரட்டுவது போலும் நாய்கள் அவரை சூழ்ந்தது போலும் சத்தம் கேட்டது .

நானும் என் சகோதரியும் இருவரும் பக்கத்து வீடுகளாக உள்ளோம்.இருவரும் ஓசை கேட்டு எழுந்து கொண்டோம்.

என் சகோதரி எனக்கு முன்னே எழுந்துகொண்டு ஜன்னலின் வழியாக யார் என்று பார்த்தவாறு நின்றார்.அப்பொழுது அவர் கண்களுக்கு வெள்ளையாக ஒரு உருவம் போல் என் வீட்டின் வாசலை கடந்து அது  சாலைக்கு சென்றது போல் தெரிய.

அச்சமயம் நானும் எழுந்தவாறு என் வீட்டு கதவை திறந்து வெளியே வர முயற்சித்ததை பார்த்தார் என் சகோதரி.அண்ணா நீங்கள் வெளியே வர வேண்டாம் உள்ளே செல்லுங்கள் என்று என்னை எச்சரித்தார்.

நான் என் சகோதரியிடம்என்ன என்று கேட்டு நின்றேன்.அவர் முகத்தில் அச்சத்தில் வேண்டாம் செல்லாதீர்கள் என்று மட்டும் சொனார். இருவரும் பேசியவாறு எதிரே சாலையை பார்த்தோம் அங்கே ஒரு பெண்  நாய்களை விரட்டியவாறு சாலையில் நடந்து சென்றதை கண்டோம்.


அந்த பெண்ணை நாய்கள் சூழ்ந்து கொண்டு உழைத்தவாறும் அலறியும் அந்த பெண் உருவத்தை சிறிது தூரம் பின்தொடர்ந்தவாரே இருந்தது.


அந்த பெண்ணோ அந்த நாய்களை "ஷூ...ஷு " என்ற வாரே சுற்றியுள்ள நாய்களை மீறி முன்   செல்ல,நான் வீட்டை விட்டு வெளியே சென்று அந்த பெண்ணுக்கு உதவ முற்பட்டேன்.


 என் சகோதரி என்னை செல்லாதே சற்று நில் என்றார். என் சகோதரியின் பதட்டம் கண்டு நான் நின்றேன். அந்த பெண் உருவம் எங்கள் கண்களுக்கு  முன் பத்தடி 
தூரம் சென்று,எங்கள் கண்களின் எதிரில் மறைந்து போனது.

நாய்களின் கூட்டம் சத்தம் எழுப்புவதை நிறுத்தி கலைந்து சென்றது .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"

சிவனின் நந்தி தேவர் - LORD SHIVAS NANDI , THE STORY BEHIND NANDI