அறியபட்ட மாய கதைகள் (மறைந்த விமானம்)
மாலை ஐந்து மணி அளவில்,
வீட்டின் மேல்தளத்தில் உள்ள நீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
இது என்னுடைய கற்பனை கதை மட்டுமே. நான் கேட்கும் கதைகளில் என்னுடைய கற்பனைகளையும் சேர்த்தே பகிர்வேன்.இது உண்மையா அல்லது முழுதும் பொய்யா என்பதை நானும் அறியமாட்டேன்.வாசகர்கள் கவனத்திற்கு இங்கு பகிரப்படும் அனைத்து கட்டுரைகளையும் எந்தவித மாற்றமின்றி பயன்படுத்தலாம். இங்கிருந்து பகிரப்படும் கட்டுரைகளுக்கு மனதின் தோழன் பக்கத்திற்காண லிங்க் மற்றும் மனதின் தோழன் பக்கத்தின் உரிமை நீங்கள் பகிறவிரும்பும் கட்டுரையின் கீழ் இருத்தல் வேண்டும்.
நீர் தேக்கத் தொட்டி வீட்டின் மூன்றாவது தளத்தில் உள்ளது.மேல் இருந்து பார்க்க அருகில் உள்ள அனைத்து வீடுகளும் சிறியதாகவும் மற்றும் சுற்றியுள்ள தென்னை மரங்கள் இவர்கள் வீட்டின் சரியான உயரத்தில் தென்படும்.
அந்த வீட்டின் தாய் மற்றும் மகள் மூன்றாவது தளத்தில் உள்ள நீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
தொட்டியில் இருக்கும் அசுத்தமான நீரை இருவரும் சுத்தம் செய்தும் மாறிமாறி கைகளால் நீரை கீழே எடுத்து ஊற்றிய கலைப்பில் சிறிது நேரம் நின்றுள்ளனர்.
இருவரும் பேசியவாரு நிற்க தொலைவில் உள்ள தென்னை மர கிளைகள் மூடி நிற்கும் சூரியனை நோக்கி நின்றனர்.
அப்போது அங்கே இவர்கள் நிற்கும் திசையை பார்த்தவாறு ஒரு பயணிகள் விமானம் தொன்றியுள்ளது.
முன் இரு சிறிய விசிறிகள் சுற்றியவாரும். தலையின் இரு பக்கம் வெள்ளை ஒளிகள் ஒளிர்ந்தும்.தென்னை கிளைகள் உயரத்தில் மரத்தின் அருகே வருவது போல் இருந்ததாம்.
தங்கள் வசிப்பிடத்தின் அருகில் விமான தளம் உள்ளதாள் இது பெரிதாக தொன்றவில்லை அவர் களுக்கு.
இருவரும் வேலை செய்ய துவங்கி மகள் கீழே சென்று தண்ணீர் மோட்டாரை இயக்கி மேலே வந்தாள்.
தாய் மகள் மீண்டும் பேசியவாரு மீண்டும் அவ்விடத்தை எதேச்சையாக பார்க்கும் பொழுது அந்த விமானம் அங்கே நின்றபடி உள்ளது.
தென்னை கிளைகள் உயரத்தில் மரத்தின் அருகே நின்றுள்ளது.இம்முறை சற்று அருகில்.
ஒரு விமானம் வீதியில் இந்த உயரத்தில் ஓரே இடத்தில் பத்து நிமிடங்கள் மேல் நிற்க அருகில் எவர் கண்களிலும் தென்படவில்லை யாம்.
ஓசையை கூட கேட்க்க யாரும் இல்லையாம்.
இருவரும் இந்த அதிசயத்தை மனம் கண்டு குலம்பி நிற்க பதினைந்து நிமிடங்களுக்கு பின் மறைந்தது அந்த விமானம்.
இந்த சம்பவம் தாயைபாதிக்கவில்லை என்றும்.
ஆனால் இருவர் நினைவுகளிள் உள்ள தென்றும் கூறினர்.
எந்த உணர்ச்சியும் ஏற்படாமல் மனம் இயல்பானதாக உள்ளது என்றனர்.
அன்றே ஆறரை மணிக்கு மகள் ஆர்வம் கொண்டு மீண்டும் வீட்டின் மேல் தளத்திற்கு செல்ல தீ போல் இரண்டு ஒளிகள் வானில் பட்டம் போல் சிறியதாக மிதந்து ஏதோ சென்றதை கண்டுள்ளார்.ஆனால் வீதியில் நிற்கும் எவரும் அதை காணவில்லை.
வானில் தோன்றும் சில மர்மங்கள் சிலரிடம் மட்டும் தெரியப்படுத்தும் விசித்திரம்.
இந்த சம்பவங்களில் முதல் சம்பவம் இருவது நிமிடங்கள் வானில் தொன்றியும்.
இரண்டாவது சம்பவம் முப்பது நிமிடங்கள் தோன்றியதாக.
தெரியபடுகிறது.
இதற்கு சாட்சி இவர்கள் இருவர் மட்டுமே.
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக