அறியப்பட்ட மாய கதைகள்(வீ ரெசிடெண்சி பங்களா)

(2017)பி.சி வாகனத்தை இயக்கினார்... ஸ். ஐ ஜீப்பில் அமர்ந்துகொண்டு இன்று நம்முடன் சில இடங்களுக்கு இரவு ரோந்துக்கு எவரும் வரப்போவதில்லை நாம் இருவர் மட்டும் தான் எனவே யார்க்கும் காத்திருக்கவேண்டாம் வாகனத்தை அந்த இடங்களுக்கு செலுத்து என்றார்.
இது என்னுடைய கற்பனை கதை மட்டுமே. நான் கேட்கும் கதைகளில் என்னுடைய கற்பனைகளையும் சேர்த்தே பகிர்வேன்.இது உண்மையா அல்லது முழுதும் பொய்யா என்பதை நானும் அறியமாட்டேன்.
வாசகர்கள் கவனத்திற்கு இங்கு பகிரப்படும் அனைத்து கட்டுரைகளையும் எந்தவித மாற்றமின்றி பயன்படுத்தலாம். இங்கிருந்து பகிரப்படும் கட்டுரைகளுக்கு மனதின் தோழன் பக்கத்திற்காண லிங்க் மற்றும் மனதின் தோழன் பக்கத்தின் உரிமை நீங்கள் பகிறவிரும்பும் கட்டுரையின் கீழ் இருத்தல் வேண்டும்.



இரவு 8 மணி ஒரு இடத்தில் நின்று வெஹிகல் செக்கிங்கில் ஈடுபட்டிருந்தோம்.அதிவேகத்தில் செல்பவர்கள்,ஹெல்மெட் போடாமல் வரு பவர்கள், குடித்து விட்டு வருபவர்கள், ட்ரிபிள்ஸ்இல் வருபவர்கள், லைசன்ஸ் இல்லாமல் வருபவர்கள் என எங்களை கடக்கும் ஒவ்வொருவரையும் கண்காணித்து நிறுத்தி பைண் போட்டுக்கொண்டிருந்தோம்.

ஒரு சில இடங்களில் குறிப்பிட்ட சில நேரங்களில் அதிக திருட்டு, வழிபரி,கொலை, கடத்தல் என சம்பவங்கள் அரங்கேறும் அவற்றை தவிர்க்க அவர்களுக்கு முன் போலீசார் அங்கே செல்வார்கள்.

அடுத்து அது போன்ற ஒரு இடம் தான் நாங்கள் செல்லவிருக்கும் அந்த ரெசிடெண்சி ஏரியா.
கண்ணை கவரும் பெரிய பங்களாகள் ஒன்றை விட்டு ஒன்று சிறு தொலைவுகளில் இருக்கும்.அங்கே மனித நடமாட்டத்தை பகலிலும் காண இயலாது இரவிலும் காண இயலாது.


டூலேட் வீடுகள் ஏராளம்... பாழடைந்த பங்களாகளும் ஏராளம்... அழகிய தெரு முடிவுகள்... உயர் மரங்கள் ,புதர்கள் இருபக்கமும் ...தொடங்கிய இடத்திற்கே மீண்டும் வந்து விடுவோம் அது போன்ற ஒரே மாதிரியான அம்சங்கள் கொண்ட இடம்.

ஆசாமிகள் அவ்வழியே வந்து வீடுகளை நோட்ட மிடுவதும், வாக்கிங் போறவர்களை பதுங்கி இருந்து கடத்துவதும் அனைத்தும் செய்வார்கள்.

அந்த இடத்திற்கு நாங்கள் 5 காவலர்கள் ஒன்றாக தான் செல்வோம்..ஆனால் இன்று புதிய அனுபவம் என்ற எண்ணம் தான் இருந்தது.

அங்கேசெல்லும்போது இரவு மணி 2..நாங்கள் என்றும் ரோந்து பார்க்கும் இடத்தை விட்டு சற்று தொலைவில் உள்ள நான்கு வழி சாலையின் நடுவே ஜீப்பில் நின்றுகொண்டிருந்தோம்...

நான்கு வழிகளிலும் இருப்பக்கங்களிள் அழகிய பூக்கள் நட்டப்பட்டிருந்தன.. நாங்கள் நிற்கும் அந்த சாலை நடுவில்
அழகிய தெருவிளக்கு விட்டு விட்டு எரிந்து கொண்டிருந்தது...
பூச்சிகளின் சத்தம்.. குளிர் காற்று நாங்கள் அணிந்திருக்கும் கருப்பு ஜர்க்கின் பொருட்படுத்தாது எங்களை வாட்டிக்கொண்டிருந்தது.

எங்கள் வலப்பக்கத்தில் ஒரு கோவில்..
எவரும் இல்லை...என்று பேசிக்கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தோம்.

சில ஆசாமிகள் மாற்று வழிகள் இருந்தும் அப்படிப்பட்ட இடத்திலும் இரவில் தனியே நடந்து செல்வார்கள், அவ்வழியே வாகனத்தில் கடப்பார்கள்...

அவ்வாறு வருபவர்களை விசாரித்து விட்டுவிட்டு ...
நின்றிருந்தோம்...

அங்கே தனியே ஒரு பங்களா இருந்தது..
ஸ்.ஐ அந்த இடத்தை நோக்கி டார்ச்சு லைட் அடித்தார் ..
யாரோ ஒரு 5.7 அடி உயரத்தில் 45-55 வயதுடையவர் பாண்ட் சட்டை அணிந்து பின்முதுகை காட்டியவாறு வேகமாக நடந்து செல்வது போல் இருந்தது...

வாகனத்தை இயக்கி அவரை பின் தொடர்ந்து சென்றோம் அவ்விடத்திற்கு அங்கு சென்றதும் அவ்விடத்தில் யாருமில்லை மாயமானர் போலும்.அது வெள்ளை வெளிச்சம் போல் இருந்தது..

எங்கே சென்றார் என்று ஜீப்பில் யோசித்து நின்றிருந்தோம்..
எங்கள் வாகன வெளிச்சத்திற்கு முன்னாள் அந்த மனிதன் வேகமாக மீண்டும் தோன்றி நடந்து சென்றான்.

நாங்கள் ஜீப்பில்
கத்திகொண்டே ஐயா நில்லுங்கள் ! எங்க போறீங்க என்று ஸ். ஐ ஜீப்பில் அமர்ந்தவாரே கேட்டார் நான் ஜீப்பை இயக்கிக்கொன்டே பின் தொடர்ந்தேன்...

ஆச்சரியம் அந்த மனிதன் எங்கள் ஜீப்பின் வேகத்தை மீறி எங்கள் முன் வேகமாக சென்றான்.

எங்குபார்தாலும்
மின் விளக்குகள் ...கண்களை கூசி விடுகிறது..
என்று புலம்பிக்கொண்டு
நாங்கள் துரத்தியவாரேயே..
இருவீட்டின் நடுவில் உள்ள வெற்றிடத்தை அடைந்தோம்..
அந்த மனிதன் இங்கே தான் வந்தான்...
என்று பார்க்க..ஒரு பெரிய சுவர் மட்டுமே இருந்தது...

நாங்கள் சுதாரித்து அந்த இடத்தை விட்டு நீங்கி..முதலில் அவனை கண்ட அந்த பங்களா வழியே நான்கு வழி சாலைக்கு செல்ல முடிவு கொண்டிருந்தோம்..


அந்த மனிதன் எதற்கு வந்தான் என்று எண்ணி அந்த வீட்டின் முன் ஜீப்பை நிறுத்தினேன்..

ஸ்.ஐ டூலேட் போர்டு கண்டார்... ஜீப்பில் அமர்ந்தவாறு பங்களாவில் டார்ச்சடித்து பார்த்தார்...

திடிரென்று என் முதுகில் சலிப்பு என்று ஒரு அடி...
மிகவும் பயந்து விட்டேன்...


ஸ். ஐ ஐயா என்னை ஏன் அடித்தீர்கள் என்றேன்...
அவர் நான் அடிக்கவிலை உன்னை யார் அடித்தது என்று தெரியவில்லை முதலில் வாகனத்தை எடு..என்று கூறி கோவிலுக்கு அருகில் வந்து நிறுதினோம்..
நான் பபயத்தின் உச்சியில் இருந்தேன்...அந்த மனிதன் அந்த இடத்தில் மீண்டும் நடந்து செல்வதை நான்கு வழி சாலையின் நடுவில் நின்று கண்டோம்..


ரெசிடென்சியை விட்டு நீங்கினோம்..
இறண்டு நாட்களுக்கு பணிக்கு வர இயளவில்லை..காய்ச்சல்...
சிவன் கோவிலுக்கு சென்றேன்...

பின் மீண்டும் பணிக்கு சென்றோம் ரெசிடெண்சிக்கு...
இதோடு நாங்கள் அனைவரும் பலமுறை அந்த வேக மனிதனை கண்டுள்லோம்...

ஆனால் நாங்கள் யாரும் அவனை பின்தொடர்வதில்லை...

ஐயா அங்கே பாருங்கள் ஒரு மனிதன் வேகமாக செல்கிறான்..பின் தொடர்ந்தால் மாயமாகிறான்.
என்பார்கள் புதிதாக எங்களுடன் வரும் கான்ஸ்டபிள்கள்...

அதற்கு நாங்கள் ..அவனை கண்டுகொள்ளாதீர்கள்...
அவனை நாங்களும் இதற்குமுன்பு கண்டிருக்கிறோம்.

அவன் யார் என்றார்...

அவன் ...!என்று சிரித்துக்கொண்டு..
கதையை கூறினோம்..

எங்களுடன் அமர்ந்திருந்த மற்ற கான்சடப்பில்களும் அவனை நாங்களும் அறிவோம்..என்றனர்...

நன்றி.


தொடரும்.......

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"

சிவனின் நந்தி தேவர் - LORD SHIVAS NANDI , THE STORY BEHIND NANDI