அறியப்பட்ட மாய கதைகள் (காவல் தெய்வம் )

(2002) கிராமத்திற்கு விடுமுறையன்று சுற்றுலா செல்வது கல்லூரி மாணவர்களின் ஆர்வத்தை காட்டுகிறது. தன் வகுப்பில் பயிலும் சக நண்பர் ஒருவர் செழிப்பான ஒரு கிராமத்தில் வாழ்கிறார் என்றால் வகுப்பில் அவர் கூறும் கதைகளாக கேற்று அந்த இடங்களில் சென்று இயற்கையை ரசிப்பதை விரும்ப வேண்டும் என்ற நோக்கத்தில் சென்றனர் இரு கல்லூரிமானவர்கள்..

இது என்னுடைய கற்பனை கதை மட்டுமே. நான் கேட்கும் கதைகளில் என்னுடைய கற்பனைகளையும் சேர்த்தே பகிர்வேன்.இது உண்மையா அல்லது முழுதும் பொய்யா என்பதை நானும் அறியமாட்டேன்
வாசகர்கள் கவனத்திற்கு இங்கு பகிரப்படும் அனைத்து கட்டுரைகளையும் எந்தவித மாற்றமின்றி பயன்படுத்தலாம். இங்கிருந்து பகிரப்படும் கட்டுரைகளுக்கு மனதின் தோழன் பக்கத்திற்காண லிங்க் மற்றும் மனதின் தோழன் பக்கத்தின் உரிமை நீங்கள் பகிறவிரும்பும் கட்டுரையின் கீழ் இருத்தல் வேண்டும்.

கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் மிகவும் பிடித்தது அவர்களது உணவும் உணவு சமைக்கும் முறைகளும் அதை பரிமாறும் அவர்களுடைய அன்பும் பிடித்தவை என்பது நண்பரின் வீட்டுக்கு விடுமுறைக்கு சென்ற இருவரில் ஒருவரது கருத்து.


அன்று கருப்புசாமி கோவில்களில் பூஜை முடிந்து இரவு நன்று உணவு முடித்த பின் நண்பர்களுடன் வீடு திரும்ப இருவரும் முற்பட்டனர்.

அப்போது கோவில் பூசாரி ஒருவர் ஆட்டின் மாமிசத்தை அந்த ஐயனாரின் வேலில் குற்றிவைத்தார்.

இதை கண்ட மற்றொருவன் இது எதற்காக என்று வினவினான்..
அதற்கு அந்த பூசாரி இந்த ஊர் கருப்பு சாமியால் பாதுகாக்க படுகிறது , இரவில் கருப்பு சாமி இங்கு உலா வருவார் இந்த மாமிசத்தை உன்பார். காலையில் இந்த மாமிசம் இங்கே இருக்காது.இறவு மாமிசம் தராவிடில் .அவர் கோபித்துகொள்வர்.மேலும் அவர் வரவிருக்கும் வேளையில் யாரும் இங்கே இருப்பது நல்லதல்ல என்று கூறியவாறு பூசாரி அவ்விடம் விட்டு சைக்கிளில் விரைவு பெற்றார் . அனைவரையும் அழைத்து வீட்டுக்கு சென்றான் நண்பன்.


ஊருக்கு செல்லும் ஒவ்வொரு சிறு தொலைவிலும் எல்லை காக்கும் கருப்புசாமியின் கோவில்கள் கன்டேன் இங்கு உள்ள அனைவரும் கருப்பு சாமி மீது பய பக்தி கொண்டிருப்பதையும் கண்டால் ஆச்சிரியமாக உள்ளது என்றான்.

மேலும் இரவில் யாரும் வெளியே செல்வதில்லை அதுவும்
ஆச்சிரியமாக உள்ளது என்றான்.


நண்பன் கருப்பு சாமியை நேரில் கண்டவர்கள் எவரும் உயிருடன் இருப்பதில்லை.மேலும் கருப்புசாமி இங்கே இருப்பதால் திருடுகளும் நடப்பதில்லை என்றான்.

நீ கருப்புசாமியை நேரில் பார்த்ததுண்டா என்றான் ..இல்லை அவர் வருமுன் எழுப்பப்படும் குதிரை ஓசையை கேட்டுள்ளேன் ..என்றான்.


கூறியபடி சிறிது நேரத்தில் குதிரைகள் ஓடும் சத்தம் ...கடிகாரத்தில் நேரம் ஒன்று .குதிரை சத்தம் கடந்து சென்ற பின் காற்றும் ஓய்வு எடுத்ததுபோல் நீடித்த அமைதி..

அடுத்த நாள் இருவரும் கருப்புசாமியை நாங்கள் காண வேண்டும் என்று மாலை வேளையில் திட்டமிட்டபடி தயார்படுத்திக்கொண்டு செல்ல முற்பட்டனர் ..

நண்பனின் தாய் அங்கே வந்தார் அவர் நாம் கருப்புசாமியை பார்ப்பது நமது மரணத்திற்கு தான் கேட்பதற்கு சமம்.வெளியூர் காரர்களாக இருப்பினும் மரணம் தான் நிகழும் என்றார்..

சரி தாயே நாங்கள் ஒரு இரவு வெளியில் டெண்ட் செய்து தங்கவிரும்புகிறோம் என்று விடை பெற்றனர்.

இருவரும் காத்திருந்த நேரம் வர சிலமணி நேரங்களே இருந்தது...
இருள் சூழ்ந்து..ஊர் அமைதி நிலையில் இருந்தது..சிறு கிளை நகரவில்லை...

நடுரோட்டில் நின்றிருந்தோம் இருபக்கமும் வயல்.
ஊரே வீட்டில் முடங்கி கொண்டது காலையில் கண்ட திருவிழா காட்சி இரவில் மனித நடமாட்டமே இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது..சுற்றியும் 1 கிலோமீட்டர் தொலைவிற்கு வீடுகள் இல்லை...இது தான் கருப்புசாமியை பார்க்கும் இடம் என்று முடிவெடுத்து நின்றிருந்தனர்...

12 மணி அளவில் காற்று அதிவேகமாக வீசியது...காற்றின் ஒளியே மனதில் பயத்தை கூட்டிவிடும் போல இருக்கிறது என்றான் இருவரில் ஒருவன்...

குதிரை கனத்து கனைக்கும் சத்தம்..தொலைவில் இருந்து அருகில் வருவது போல் இருந்தது...

அங்கே பூசாரி வேகமாக சைக்கிளில் வீடு திரும்ப அவ்வழியே வந்தார்...
வந்தவர்...இவர்களை பார்த்ததும் சைக்கிளை நிறுத்தி
கருப்புசாமி வரும் நேரம் ஆயிற்று .. வீட்டுக்கு சென்றுவிடுங்கள்...இல்லையேல் நான் சொல்வதை கேளுங்கள் என்று எச்சரித்தார் .

ஒருவேளை நாம் இரவில் மாட்டி கொள்ளும் பொழுது.மண் தரையில் வட்டம் போட்டு அந்த வட்டத்திற்குள் அமர வேண்டும் கண்களை கைகளால் இருக்க மூடிக்கொண்டு உடல் வட்டத்தை விட்டு வராத வாறு அமர வேண்டும் என்றார்.

நாம் எந்த சூழலிலும் கருப்புசாமியை பார்த்துவிடக்கூடாது, அவர் அருகில் நிற்கும் பொழுதும் நாம் பார்த்துவிட கூடாது,நம்மை பார்க்க தூண்டினாலும் பார்க்க கூடாது என்றார்.

அவ்வாறு அவர் உருவத்தை பார்த்த பலரும் மரணித்திருக்கின்றனர் நாம் கண்டுவிட்டாலும் பூலோகத்தில் இருந்து நீங்குவோம் என்றார்.

கூறியவாறு சைக்கிளில் சில தூரம் கடந்தவுடன் அவர்களுக்கு கூறிய அறிவுரை போல கீலே அமர்ந்து கொண்டார்..

பூசாரியின் பதட்டத்தில் உண்மையை கண்டது போல வயல் தரையில் ஒருவன் வேகமாக குச்சியை கொண்டு வட்டம் வரைந்து உள்ளே தன் தொடையை கட்டிபிடித்து தலையை குனிந்து கண்களை மூடி அமர்ந்து கொண்டான்.

மற்றொருவன் இந்த வாய்ப்பை பயன் படுத்தாவிடில் கருப்புசாமி வரமாட்டார் என்று எண்ணி அதே போல் அமர்ந்தான்..

குதிரை கனைத்து கொண்டே நெருங்கிவரும் ஓசை காதில் இடிவிலும் அளவிற்கு இருந்தது..

அருகில் ஒரு ஒளி வந்து நின்றது போல் உணர்ந்தனர்...கண்களால் பார்த்தால் தான் கண்கூசி இறப்போம்...புகைப்பட கருவியை பயன்படுத்தும் எண்ணம் உதயமானது அவனுக்கு..

அருகில் அந்த ஒளி நெருங்கியதும்...குதிரையின் கனைக்கும் சத்தம் மட்டுமே இருந்தது..

கருப்புசாமி நம் அருகில் நிற்கிறார் என்று இருவரும் உணர்ந்தனர்..

கனத்த குரலில் சற்றம் எழுப்பினார்...மரணத்தின் வலைக்கு வா என்பது போன்ற அச்சமூட்டக்கூடிய கம்பீரமாக குரல்...மரண தேவனோ என்று சிந்தித்தனர்..

அத்தனை சத்தம் ..குதிரை கணைத்துக்கொண்டே தங்களை சுற்றி வருவது மட்டும் உணரமுடிகிறது...

நண்பன் ஒருவன் ஒற்றை கண்களால் குதிரையின் கால்களை பார்த்துவிட்டதாக கூறியது..கேட்டேன்.

குதிரையின் கணைக்கும் சத்தம்,காற்றின் சத்தம், கருப்புசாமியின் அச்சமூட்டும் குரல்.


விடிந்தது...காற்று அமைதியாக இருந்தது..சற்றமே இல்லை...அருகில் நண்பன் மயங்கி இருந்தான்..புகைப்பட கருவி கீழே இருந்தது...

பூசாரி ஓடிவந்தார்...நண்பன் மரணித்தத்தை உணர்ந்தனர்...


நன்றி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"

சிவனின் நந்தி தேவர் - LORD SHIVAS NANDI , THE STORY BEHIND NANDI