புதிதாக நாய்கள் வளர்ப்பு தேவையான சில அறிவுரைகள்
செல்ல பிராணியை அன்போடு பராமரிக்கும் முறைகள்
* நாய்கள் வளர்ப்பது அவசியம்.அவற்றுடன் பேசுவதால்
நமது மன சுமைகள் குறைகின்றன.
நன்றிக்கு மட்டுமல்லாது என்றும் நம்முடைய அணைத்து பாதைகளிலும் பின் தொடரும் நண்பன்.
நமது மன சுமைகள் குறைகின்றன.
நன்றிக்கு மட்டுமல்லாது என்றும் நம்முடைய அணைத்து பாதைகளிலும் பின் தொடரும் நண்பன்.
*உங்கள் செல்ல பிராணியை கட்டி வைக்காதீர்கள்.
*அவை ஏதேனும் பொருளை நாசம் செய்வதை தடுக்கலாம் ஆனால் ஒரு போதும் அடிக்காதீர்கள்.மாறாக குரலை உயர்த்தி மிரட்டினால் போதும்.நீங்கள் அவற்றை அடிப்பதால் உங்கள் மீது அவற்றின் நம்பிக்கையை இழப்பீர்கள்.
*சரியான நேரத்திற்கு உணவு அளியுங்கள்.உணவு அளித்த பின் அவற்றை வெளியே சென்று தானாக உண்டதை வெளியேற்ற சுதந்தரமாக வெளியே விடுங்கல்.உதாரணமாக இரவு எட்டு மணிக்கு உணவு அளித்தால் எட்டு மணி முதல் பத்து மணிவரையில் வெளியே விட்டு விடுங்கள்.அதற்கு அவற்றை கட்டி வைத்து அழைத்து சென்று பழக்க தேவையில்லை.உணவில் இறைச்சி,தயிர்,பால்,முட்டை,ராஃஹி கூல் போன்றவற்றை கொடுக்கலாம். அதிக அளவில் பெடிகிரி போன்றவற்றை வாங்க இயலாத
நிலையில் ஐந்து ருபாய் கோதுமை பிஸ்கட்கலை வாங்கிவைத்து தினமும் தரலாம்.
*சிறிய நாய்கள் வாங்கும் பொழுது அவை கிடைக்கும் கல் , காலணிகளை நாசம் செய்யும் அவைக்கு எலும்பு துண்டுகளை வாங்கி தருவதால் அவற்றின் பல் கூச்சம் குறையும்.
*பிற நாய்களால் அல்லது அக்கம் பக்கத்தினரால் நாய்களுக்கு தொந்தரவென்று நினைத்தால் வீட்டின் சுற்றியுள்ள முற்றத்தில் அவற்றிற்கு சுற்றவும் கழிவுகளை வெளியேற்றவும் வழிசெய்திடுங்கள்.
*நாய்கள் வெளியே செல்லும் பொது அவற்றின் கழுத்தில் நிச்சயமாக காலர் அணிவித்துவிடுங்கள் வீட்டில் வளர்க்கப்படும் நாய் என்பதின் அடையாளம் அதுவே.
*நாய்கள் வெளியே செல்லும் பொது அவற்றின் கழுத்தில் நிச்சயமாக காலர் அணிவித்துவிடுங்கள் வீட்டில் வளர்க்கப்படும் நாய் என்பதின் அடையாளம் அதுவே.
*நீங்கள் வாங்கும் ஒவ்வொரு நாய்க்கும் தவறாமல் கால்நடை மருத்துவரை சந்தித்து தேவையான ஊசிகளை நாய்களுக்கு போட்டுவிடுங்கள்.
* பூச்சிகளை விரட்டும் பவுடர்,ஸ்பிரே அல்லது சோப்பு போன்றவற்றை வாங்கிக்கொள்ளலாம்.நாய்கள் உடலில் உள்ள பூச்சிகள் மனிதர்களிடம் தொற்றிக்கொள்ளும் தன்மையுடையது.
*நம் நாட்டில் உள்ள நாய்களை வளர்ப்பதால் சில செலவுகள் குறையும் அதோடு அவை அணைத்து பருவகாலங்களிழும் , இது போன்ற சில பராமரிப்புகள் இல்லாமலும் வாழ்ந்துகொள்ளும்.மற்றும் சிறந்த நண்பர்களாக விளங்கும்.
*பருவகாலங்களில் பராமரிப்பு
சிறிய வீடு அல்லது சிறிய இடம் மற்றும் ஒரு சாக்கு , குளிர் மற்றும் மழைக்காலங்களில் நாய்களுக்கு மிகவும் அவசியம்.நாய்கள் சற்று சோர்வாகவும்,நடுக்கத்துடனும் இந்த பருவகாலங்களில் காணப்படலாம். வெதுவெதுப்பான உணவுகளை இந்த பருவகாலத்தில் தரவேண்டும்.
வெயில் காலங்களில் நிழலும் போதிய அளவு தண்ணீரும் அதில் சிறுதுளி பாலுடன் வைப்பதால் நீர்பருகாதா நாய்கள் கூட நீரைப்பருகும். அவைக்கென்று ஒதுக்கப்பட்ட பாத்திரத்தில் நீர் இருந்துகொண்டே இருக்குமாறு கவனித்து கொள்ள வேண்டும்.நாய்கள் வெப்பத்தால் இழப்பு வருவதுபோல் தோற்றமளித்தால் முதலில் நிழலில் கொண்டு சென்று குளிர்ந்த நீரையும் கொடுத்து பின் கால்நடை மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.அதிக வெப்பத்தால் நாய்கள் ஒரு வகையாக வெறி பிடித்து பிறரை கடிக்கலாம்.
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக