படிப்பது என்பது போர் அடிக்காமல் இருக்க செய்ய வேண்டியவை
படிப்பது என்பது போர் அடிக்காமல் இருக்க செய்ய வேண்டியவை
1) விருப்பமான பாடத்தை தேர்வு செய்ய வேண்டும். அந்த பாடத்தை தேர்வு செய்ததற்கான காரணம் அறிந்திருக்க வேண்டும்.காரணம் தெளிவானதாக இருக்கவேண்டும்.
2) இணையதளம் சிறந்த நண்பன் உங்களது கேள்விகளை கேட்டு விடைகளை சலிக்காமல் பெற்றிடுங்கள்.கேள்விகளை விடைகளின் துவக்கம் முதல் கேட்டு ஐயத்தை முற்றிலும் அளித்திடுங்கள்.
3) நீங்கள் தேர்வு செய்த பாடம் சமுதாயத்திற்கும் சமூகத்தின் எதிர்காலத்திற்கும் எந்தவகையில் ஒத்துப்போகின்றன என்பதை அறிந்துகொள்ளுங்கள். அதாவது வேதியியல் பாடம் என்றால் சமூகத்தில் வேதியியலின் முக்கியத்தும் மற்றும் பிற்காலத்து முக்கியத்துவம் இதைப்பற்றி தெளிவாக அறிந்துகொண்டு உங்களுக்கென்று ஒரு பார்வை அல்லது பாதையை அமைத்துக்கொள்ளுங்கள்.
4) தினமும் படிப்பதை உங்களது ஒரு பிடித்த வேலையாக வைத்துக்கொள்ளுங்கள்.
உங்களது வேலையை புத்துணர்ச்சியுடன் செய்ய சில புதுமைகளை புகுத்தலாம். உதாரணமாக உங்களுக்கென்று ஒரு படிக்கும் மேஜை அல்லது பென்சில் ஸ்டாண்ட், வண்ண பேனாக்களை பயன்படுத்துவது போன்றவற்றை பழக்கப்படுத்துங்கள்.
5) உங்களுக்கு நீங்களே ஆசிரியாராகுங்கள்.உங்களது வீக்னஸ் யாது என்பதை அறிந்து அதை தவிர்த்து விட முயற்சி செய்யுங்கள்.
6) உங்களுக்கு மொழி தடையாக இருக்கும் பாடங்களை நண்பர்கள் அல்லது ஆசிரியர்கள் நடத்தும் பொழுது கவனத்துடன் கேட்டும் தேவைப்பட்டால் அந்த மொழியை நீங்கள் கற்றுக்கொள்ள முயற்சிசெய்தால் பிற்காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் நீங்களே படித்துமுடிப்பீர்கள்.
7) தேவைப்பட்டால் இரவிலும் படிக்கலாம்,பகலில் பொழுதுபோக்கு,மனக்கசப்பு போன்றவற்றால் இயலவில்லை என்றால் இரவில் அமைதியான சூழலில் படித்துவிட்டு உறங்கும் பொழுது மனதில் மேலும் திருப்தி அடையலாம்.
8) பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள் வீட்டில் தொலைக்காட்சி பார்த்தவாரே பாடத்தை கதையாக தினமும் படிக்கலாம்.நடந்துகொண்டும்,பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டும்,எழுதி கொண்டும் படிக்கலாம்.
9) தனிமையில் இருப்பவர்கள் படிப்பதை தொழிலாக கொண்டால் சிறந்து விளங்கலாம்.போட்டிபோட்டு படிப்பவர்கள் அந்த படத்தின் துறையில் சிறந்து விளங்குபவர்களது செயல்பாடு,ஆராய்ச்சி போன்றவற்றால் அறிந்து கொண்டு தங்களையும் மேம்படுத்திக்கொள்ளலாம்.
9) தனிமையில் இருப்பவர்கள் படிப்பதை தொழிலாக கொண்டால் சிறந்து விளங்கலாம்.போட்டிபோட்டு படிப்பவர்கள் அந்த படத்தின் துறையில் சிறந்து விளங்குபவர்களது செயல்பாடு,ஆராய்ச்சி போன்றவற்றால் அறிந்து கொண்டு தங்களையும் மேம்படுத்திக்கொள்ளலாம்.
10) கேள்விக்கு பதில் தெரியாததால் உண்டாகும் அவமானம் மற்றும் பயம் அந்த ஒரு நொடி மட்டுமே எனவே அவற்றை குற்றமென கருதாமல் உங்களது பாதையை உங்கள் விருப்பபாதையை நீங்களாகவே வடிவமைத்து முன்னேறிவாருங்கள்.
10) படிப்பதற்கான காரணங்களை தேடி செல்லுங்கள்.
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக