உலகின் முதல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இரட்டை பெண் குழந்தைகள்
நான் சமீபகாலமாக கடந்துவந்த செய்தி உங்களிடம் பகிர உள்ளேன்,
லூலூ மற்றும் நானா என்ற முதல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட மனித இனத்தை சார்ந்த இரட்டை பெண்குழந்தைகள். இவர்கள் சீன ஆராய்ச்சியாளர்கள் கவனிப்பில் ரகசியமாக அக்டோபர் 2018 பிறந்தனர். ஹி ஜியான்க்யூய் (he jiankui ) என்ற சீன ஆராய்ச்சியாளர் முதல் மனித மரபணுமாற்றத்தை செய்து முடித்ததாகவும் தனது இந்த ஆராய்ச்சி வெற்றியடைந்துவிட்டதாகவும் நவம்பர் 2018 யூட்டியுபில் வெளியிட்டார்.உலக நாடுகள் முதல் தனது சொந்த சீன நாட்டிலும் எதிர்ப்புகளும்,எச்சரிக்கைகளும்,விசாரணைகளும் துவங்கின.
செயற்கையாக மனித மரபியலில் மாறுபாடு செய்வதில் இந்தியா ,அமெரிக்கா போன்ற இன்னும் சில வளர்ந்த நாடுகளில்கூட இது போன்ற ஆராய்ச்சிக்கு தடை உள்ளது.ஏனெனில் மனிதனின் மரபணுக்களே அவனது தோற்றத்திற்கும் , செயல்பாட்டிற்கும், நோய்களிடம் இருந்து காத்துக்கொள்ளும் யுக்தியையும் முடிவுசெய்கிறது.
he jiankui (biophysicist )தன்னிடம் வந்த சீன பெற்றோரிடம் தங்களுக்கு வந்த hiv நோய் தொற்றானது பாதிக்கப்பட்ட பெனின் கருவில் வளரும் சிசுக்களுக்கு நோய் தொற்றாமல் இருக்க அவர்களது மரபணுக்களில் மாறுதல் செய்வதாக கூறினார்.அதே போல் அந்த குழந்தைகள் கருவில் உருவாகும் பொழுதே குழந்தையின் மரபியலில் hiv தோற்றிற்கு எதிர்த்து செயல்படும் மரபணுக்களை CRISPR தொழில்நுட்பம் கொண்டு மாற்றம் செய்தார்.
இங்கே தான் பல கேள்விகள் உலக ஆராய்ச்சியாளர்களுக்கும் எழுந்தது.அவர் மாற்றம் செய்த அந்த மரபணுக்களுக்கு hiv வைரசுடன் போராடும் திறன் மட்டுமின்றி மனிதனின் புரிந்துகொள்ளும் திறனையும்,நியாபகத்திறனையும் அதிகரிக்கும் செயல்பாடு பெற்றிருக்க கூடிய மரபணு என்பது எலியின் மீது ஆராய்ச்சி செய்யப்பட்டு உறுதிசெய்யப்பட்ட மரபணு.
அந்த மரபணு எலியின் புத்திசாலித்திறனை அதிகரித்துள்ளது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
பலத்தடைகளையும் மீறி ரகசியமாகவும் இந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாவும் அவர் முடித்துவிட்டார் என்று கூறினாலும் பிறந்த அந்த குழந்தைகள் முதல் மரபியல் மாற்றம் செய்யப்பட்ட மனித குழந்தைகள் என்பதால் தீவிர கண்காணிப்பும் பல அழுத்தங்களும் அந்த ஆராய்ச்சியாளர் சந்திக்க வேண்டியுள்ளது.
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக