வணங்க படவேண்டிய வாழை மரம்



வாழை மரம் தேவர்களின் குரு பிரஹஸ்பதியாக கருதப்படுகிறது.குருவிற்கு தக்ஷனை தர நினைப்பவர்கள் வாழை மரத்திற்கு பூஜை செய்யலாம் அல்லது வாழை மரத்தின் பலங்களை வியாழன் அன்று விஷ்ணு தேவருக்கு சமர்ப்பிக்கலாம்.

ஜாதகத்தில்  குரு (ஜுபிடர்) தோஷம் இருந்தால் வாழைமரத்தை வணுங்குவதால் விலகும்.வாழை மரம் இருக்கும் வீடு வாஸ்து நிறைந்த வீடாக கருதப்படுகிறது.அதன் வேர் குரு தோஷத்தை நீக்கக்கூடியது.


வாழை மரத்தில் உள்ள அணைத்த பொருட்களும் புனிதமாக கருதப்படுகிறது.வாழை இலை உலகில் சிறந்த புனித பாத்திரமாக கருதப்படுகிறது.அதன் பழங்களை  தேவர்களு சமர்ப்பித்து வேண்டுவதால் இறைவனின் அருள் தவறாமல் கிடைப்பதாக கூறப்படுகிறது.

வாழை மரம்  விஷ்ணு புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன் தண்டில் உலகை உணர்த்தும் செய்தி  இருப்பதாகவும்  கூறப்பட்டுள்ளது.வாழை மரம் விஷ்ணுதேவர் வீற்றிருக்கும் மரம் என்றும் அது வழிபாட்டிற்கு  உரிய மரமாகவும்  ஆயிரம் வருட மேல்  பாரம்பரியமாக வழிபாட்டிற்கு உடையதாகவும் கூறப்படுகிறது .

வாழை மரத்தை பற்றி தொன்மைவாய்ந்த ஹிந்து புராணங்களில் என்னற்ற கதைகளும் ,கருத்துக்களும் உள்ளன.ஒரு சில புராணங்களின் படி ஒரு பெண் சாபத்திற்கு பிறகு வாழை மரமாக உருவெடுத்து ஒரே ஒரு பூக்களை மட்டும் கொண்ட  விதையின்றி  வளரும் மரமாக மாறினார் என்றும். மரத்தின்  பழங்கள் மற்றும்  பூக்கள் அதன் பிள்ளைகளாக கருதப்படுகிறது.

வாழைமரத்தில் தேவி பார்வதியும் ,லக்ஷ்மியும் வீற்றிருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.வியாழனன்று வாழைமரத்திற்க்கு பூஜை செய்வது திருமணம் கைகூடும்,லக்ஷ்மி தேவியின் அணைத்து அருள்களும் கிட்டும்,வீட்டில் மங்களம் உண்டாகும்.

செவ்வையால் உண்டாகும் மாங்கல்ய தோஷமுடியவர்களது ஜாதகத்தில் உள்ள சாபம் வாழைமரத்தை திருமணம் செய்வதால் உடைந்துவிடுகிறது என்பதை புராணங்கள் வலி நாம் அறியலாம்.திருமணத்தில் வைக்கும் வாழைமரத்திற்கு பூஜை செய்து முடித்தால்  அணைத்து துன்பங்களும் விலகி லக்ஷ்மியின் அருள் கிடைக்கிறது.



நன்றி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"

சிவனின் நந்தி தேவர் - LORD SHIVAS NANDI , THE STORY BEHIND NANDI