வீட்டில் இருக்க வேண்டிய தாமரை - HAVING LOTUS POT AT HOUSE significance


தாமரை மலரின் 
மகத்துவம்

வீட்டில் இறைசக்தியை வரவேற்க தீபம் ஏற்றுவோம் அல்லது மலர்களை பூஜை அறைகளில் நிறைப்போம்.மலர்களில் சாத்விக சக்தியாக இறைசக்தி ஒரு நாளில் குறிப்பிட்ட மாலை நேரத்தில்  (4.00-6.00)நிறைந்திருக்கும் அந்த நேரத்தில் மட்டும் மலர்களை பறிக்கும் பழக்கம்  உண்டு.மற்ற நேரங்களில் அசுரர் குணமான ராஜஸ ஷக்தி நிறைந்திருப்பதால் அந்த மலர்களை பறிப்பதில்லை அதை இறைவனுக்கும் சமர்பிப்பதில்லை .

தாமிரை மலர் சூரியனின் மனைவி என்று பண்டையகால மக்கள் கூறுவார்.அதாவது சூரியன் தாமரை மலரை இயக்குகிறது என்பர்.

மலர்களில் சாத்விக ஆற்றலை அதிகமாக ஈர்த்துக்கொள்ளும் சக்திகளும் உண்டு.குறிப்பிட்ட தெய்வங்களுக்கு குறிப்பிட்ட மலர்கள் சமர்பிப்பதும் உண்டு.குறிப்பாக தாமரை மலர் ப்ரஹ்மா ,விஷ்ணு ,லக்ஷ்மி, சரஸ்வதி,ஹயக்ரிவர்  போன்ற தேவர்களிடம் காணலாம் .


தாமரை மலரின் ஆன்மீக  மகத்துவம்


தாமரை மலர் தூய்மையின் அடையாளமாகவும் முற்றிலும் முக்தியடைந்த ஆன்மாவின் சின்னமாகவும்  கருதப்படுகிறது .
மாசடைந்த மண்ணிலிருந்து தாமரை மொட்டானது (ஆத்மா ) சுற்றியுள்ள மாசை ,மாயையை பொருட்படுத்தாமல் தனது வேறை வலுவாக ஊன்றி  ஓடும் நீரோடு ஓடாமல் (புலன்களை கட்டுப்படுத்தி )மேல் ஓங்கி வருகிறது(ஆன்மா உண்மையான இறைசக்தியை தேடி வருகிறது )இருக்கும் இடம் மாசடைந்ததாக இருப்பினும் அதன்இலைகளில் துளி நீர் படுவதில்லை.

 அவ்வாறே தாமரை மலரானது மொட்டிலிருந்து பூவாக  மலர்கிறது. இதுபோலவே ஆன்மாக்களும் முக்தி அடைகின்றன .மலர்ந்த மலர்கள் மட்டுமே இறைவனின் கைகளில்  அமர்கின்றன. 

முற்றிலும் முக்தி அடைந்த ஆன்மாக்கள் மட்டுமே இறைவனிடம் நெருக்கத்தில் செல்கின்றன .ராஜ யோகத்தில் சஹஸ்ர சக்ரம் தாமிரை வடிவில் குறிப்பிடப்படுகிறது.அந்த சக்ரத்தை அடைந்தவர்கள் ஞானிகளாக கருதப்படுகின்றன.

இறைவனை தாமரை போன்ற கண்களையும் பாதங்களையும் உடையவர்  என்றே போற்றுகிறோம்.தாமரை அழகிலும் தூய்மையிலும் சிறந்த எடுத்துக்காட்டு.முக்தியடைந்த ஆன்மாவிற்கு எடுத்துக்காட்டாக அமைவது தாமரை மலர்.




how to grow lotus at house





                             RECOMMENDED:
GO TO OFFICIAL THUGLAK PAGE FOR CHO'S CREATIONS










நன்றி 


credits :www.vecteezy.com 
                       www.pixabay.com
                       www.burner.bonanza.com

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"

சிவனின் நந்தி தேவர் - LORD SHIVAS NANDI , THE STORY BEHIND NANDI