எண்ணம்,ஆன்மா ,புத்தி ,குணம் -HOW THE THOUGHT ,SOUL,MIND AND CHARACTER ARE LINKED TOGETHER
எண்ணம்,ஆன்மா ,புத்தி ,குணம்
முன்னுரை
மனிதன் தனக்கு ஏற்படும் எண்ணங்கள், சிந்தனைகள்,மன சோர்வுகள் ,மன கசப்புகள் அனைத்தும் தான் என்றும் அனைத்திற்கு நடுவிலும் சிக்கிக்கொண்டது போலும் , சில சமயங்களில் தன்னைத்தானே வருத்திக்கொண்டும் ,சபித்துக்கொண்டும் ,சில சமயங்களில் ஆணவத்திலும், மன அழுத்தத்திலும் மாட்டி கொள்கிறான் என்பது நூறு சதவீதம் உண்மை .ஏன் இவ்வாறு மாட்டிக்கொள்கிறார்கள்.
இதில் இருந்து விடு பட வேண்டும் என்பது ஆன்மாக்களின் தவிப்பு .ஏனெனில் அவற்றின் லட்சியமானது இறைவினடம் செல்லுதல் .
இந்த பிறப்பும் நமது கர்மத்தின் பலனே .உபநிடதங்களை ஒரு ஆராய்ச்சி செய்து நோக்கினால் இவற்றிலிருந்து விடுபடுவதாற்கான வழிகள் உள்ளதை நாம் அறியலாம். மேல்நாட்டினர் தங்களது மனவியல் ஆலோசனைக்கு இது போன்ற
தியானம் ,பிராணாயாமம் ,மற்ற உபதேசங்கள் அறிந்து சமூக சேவை யாற்றியும் வருகின்றன .
இதை ஆன்மீக வழிகளில் கீதையின் கூற்றில் இருந்து விளக்கவும் செய்யலாம் :
எண்ணங்கள்
எண்ணங்களில் நல்ல என்னங்கள் தீய எண்ணங்கள் இருவகை உள்ளன இவை ஒருவரது ஆன்மாவில் கலந்து உள்ள குணங்களின் அளவை பொறுத்தே தோன்றுகின்றன.இவை மனத்தால் இடைவிடாது உரியப்படும் பிரபஞ்ச ஷக்தி.
இவை குணாதிசயங்கள் பொறுத்து அமைய பெறுகின்றன .அதாவது ஒரு ஆன்மா உயிராய் பிறகும் பொழுது மூன்று வீத குணங்கலில் இருந்து எந்த குணத்தை உள்வாங்கி பிறந்ததோ அந்த குணமே அந்த உயிருக்கு தோன்றும் எண்ணங்களின் காரணம் .
ஆன்மா
கீதையின் கூற்றில் ஆன்மா என்பது நம்முடைய நிறைவேறாத ஆழ்ந்த ஆசைய ,அந்த ஆசையே நம்முடைய வடிவமும் வாழ்க்கையுமாய் உள்ளது .
நமது அடுத்த பிறவியின் வாழ்க்கையை முடிவு செய்வதும் அந்த ஆசையே ஆகும் .நமது ஆசையானது நம்முடைய ஆன்மாவை அறிந்து கொள்வதாக இருக்க வேண்டும் .இதுவே தன்னை அறிதல் என்றும் கூறுவார் .
வேதங்களின் கூற்றுப்படி ஆன்மாவால் உணரப்படும் புலன்கள் யாது என்றால் அவை மனம் மட்டும் பிராணன் ஆகும் .தியானத்தால் மற்றும் பக்தியால் மட்டுமே ஆன்மாவை உணர இயலும் .
ஆன்மாவுடன் கலந்திருப்பது இந்த மனம் ,புத்தி ,சமஸ்காரம் என்றும் ஒரு சில நூல்கள் குறிப்பிடுகின்றன .
ஆன்மாவை ப்ரம்மனுடன் இணைப்பதை அஹம் ப்ரம்மாஸ்மி என்று உபநிடதங்களின் வாயிலாக அறியலாம் .இதுவே பிறவியின் லட்சியமாக கருதப்படுகிறது .
மனம்
மனம் தான் எண்ணங்கள் தோன்றும் இடம்.தேவையற்ற எண்ணங்கள் மனதை மற்றும் உடலை பாதிக்கும் .மனதின் எண்ண அலைகளை கட்டுப்படுத்தி மன அமைதியை அடைவதற்கு இந்த உபதேசங்கள் உதவுகின்றன .
நாம் நம் மனதை இவ்வாறெல்லாம் சிந்திக்கிறாய் என்று சபித்து கொண்டிருக்கிறோம். அதை விட்டுவிட்டு மனதின் அமைப்பையும் இயல்பையும் உபதேசங்களை கற்பதால் உண்மையை அறிந்து கொண்டு அவற்றின் நிலையை சரி செய்து பிறவியின் உண்மையை அறியமுடியும் .
வேதங்களின் படி ,
யோகிகளின் கூற்று மனதிற்கு 16 பரிமாணங்கள் உள்ளன அவை அனைத்தும் இந்த நான்கு பிரிவுகளுக்குள் அடைக்கப்பட்டுளளன :
மனஸ் -ஐயங்களை உண்டாக்குவது ,சிந்திக்கும் அறிவு அல்லது ஆறாவது அறிவு .இவற்றுள் உட்பிரிவுகளும் உள்ளன
புத்தி -முடிவை எடுப்பது
சித்தா -நியாபகத்தில் வைத்து கொள்வது
அஹம் -அகங்காரம் கொள்வது
மனதின் நிலைகள் மாறுபடும் ,சூழ்நிலைகளுக்கு ஏற்ப இதை யோகா சூத்திரங்களில்ஐந்து பிரிவுகளாக குறிப்பிட்டுள்ளன அதை பற்றி இங்கே கொடுக்கப்படவில்லை .
புத்தி
தோற்றுவித்த நல்ல அல்லது தீய எண்ணங்களை செய்யல் படுத்த வேண்டுமா வேண்டாமா என்பதை தீர்மானிப்பது புத்தி ஆகும் .இதுவே அனைத்து உயிர்களையும் காக்கும் சக்தி .தீயவனாக இருப்பவனும் பக்தியால் தவத்தால் இறைவனை அடையமுடியும் என்பதை நாம் பல புராணங்களின் வாயிலாக அறிவோம் .புத்தியே அனைத்திற்கும் காரணம் .தியானம் செய்யலாமா ,வேண்டாமா என்பதை புத்தி தான் தீர்மானிக்கிறது .
குணம்
நாம் நம் மனதை இவ்வாறெல்லாம் சிந்திக்கிறாய் என்று சபித்து கொண்டிருக்கிறோம். அதை விட்டுவிட்டு மனதின் அமைப்பையும் இயல்பையும் உபதேசங்களை கற்பதால் உண்மையை அறிந்து கொண்டு அவற்றின் நிலையை சரி செய்து பிறவியின் உண்மையை அறியமுடியும் .
கீதையின் படி ,மனதையும் தாண்டி இருக்கும் சக்தி குணம் .
குணத்தின் அளவும் எண்ணங்களுக்கும் ,செயல்களுக்கும் காரணம்
முதலில் குணம் மூன்று வகை படும் அவை ,
சாத்வீக
ராஜஸ
தாமஸ
சாத்வீக குணம் உடையவர்கள் தூய்மை, சுகாதாரம், ஒற்றுமை மற்றும் நல்வாழ்வை தேடிச்செல்பவர்கள் மற்றும் பிறவியிலேயே இந்த குணம் அவர்களின் ஆன்மாவில் எந்தளவிற்கு கலந்திருக்கிறதோ அதை பொறுத்தே இவர்களது பெர்சனாலிட்டி அமையப்படும் .வெறும் சாத்வீக குணம் மட்டும் ஒரு யோகி போன்ற வாழ்க்கையை வாழ தேவை படுகிறது .
ராஜஸ குணம் உடையவர்கள் தோற்கடிப்பது எளிதல்ல , மன அழுத்தம், கோபம், வெறித் தனம்,மற்றும் அமைதியின்மையை கொண்ட குணம் இந்த குணம் பிறவியிலேயே ஒருவரது ஆன்மாவில் எந்தளவிற்கு கலந்திருக்கிறது என்பதை பொறுத்தே அவர்களது குணம் அமையப்பெறுகிறது .இந்த குணமும் சாத்வீக குணமும் நமக்கு அன்றாட வாழ்க்கைக்கு அதாவது உழைப்பவர்கள் வாழ்க்கைக்கு தேவைப்படுகிறது .
தாமச குணம் என்பது மந்தமான, சோம்பல் மற்றும் அதிக தீய மற்றும் பிற உயிரை அளிக்கும் குணம் .இந்த குணம் ஒருவரது ஆன்மாவில் எந்தளவிற்கு கலந்திருக்கிறதோ அதை பொறுத்ததே இவரது இந்த பிறவி குணம் அமையப்படுகிறது .ராஜஸ குணம் அதிகம் அடைந்தாள் மந்தியான தாமச வாழ்க்கை அமைந்து விடும் .
நாம் எந்த குணம் என்று நமக்கு சரியாக தெரியவில்லை என்றாலும் தவறு இல்லை இதில் நாம் எந்த குணம் பெற்று பிறந்திருந்தாலும் சரி நமக்கு இதை இருந்து விடுபட்டு நல்ல குணத்தையே ஆடிய வழியையம் பகவான் கூறியே சென்றிருக்கிறான் அதுதான் புத்தி ,ஒரு செயலை செய்ய தூண்டுவது மனம் என்றாலும் அதை செய்யலாமா வேண்டாமா என்று நம்மை சிந்திக்க வைப்பது புத்தியே ஆகும் .எனவே புத்தியின் தூய்மையே நமக்கு அவசியம் ,புத்தியை சுத்தப்படுத்தும் முறை தியானம் மற்றும் பக்தி ,மற்றும் நல்ல எண்ணங்கள் சிந்தனைகள் ,நல்ல சேர்க்கை ,நல்ல செயல்கள் என்றும் கூறலாம் .
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக