திருநீறு - The Sacred or Holy ash

திருநீறு அணிந்தால் பிணிகள் விளகும் என்பது சித்தர்கள் கூற்று.திருநீறு,குங்குமம் மற்றும் சந்தனம் அணிவதை திலகமிடுவது என்பர் .
திரு நீறு இடுவதால் இச்சாஷக்தி ,ஞயான
ஷக்தி ,கிரியா ஷக்தி என்ற மூன்று சக்திகளையும் பராசக்தியின் துணையோடு பெற இயலும் என்பர்.
திரு நீறு இடுவதால் இச்சாஷக்தி ,ஞயான
ஷக்தி ,கிரியா ஷக்தி என்ற மூன்று சக்திகளையும் பராசக்தியின் துணையோடு பெற இயலும் என்பர்.
திருநீறை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை என்பர். யோகிகள்,ஞானிகள் திருநீறை உடலில் முழுவதும் பூசி இருப்பார் மற்ற இறை தேவர்களின் நெற்றியிழும் இதை காணலாம்.இது சூரிய ஒளியையும் அணைத்து விதமான சக்திகளை உரிந்து உடலில் சேர்கின்றது என்பர்.திருநீறை பகலில் நீரில் குழைத்தும் நடுப்பகலில் சந்தனத்துடன் குழைத்தும்,மாலையில் வறண்ட திருநீறை அணியவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அணைத்து புனிதமான ஆயுர்வேத மரங்களின் கட்டைகள்,காய்ந்த புற்கள்,பசுஞ்சாணம்,அரிசியின் உமி போன்றவற்றின் எரிக்கப்பட்ட சாம்பலே திருநீறாகும்.
சிவ பெருமான் சுடுகாட்டு சாம்பலை தன் உடலில் பூசி இருப்பார் என்பதை அறியலாம் .அகோரிகழும் பிண்டங்களை எரித்த சாம்பலை உடலில் பூசி இருப்பர்.உயிர் சக்தியை சுமந்தஎந்த ஒரு உடழும் அதன் ஆன்மாவை துறந்ததும் அதன் முடிவு சாம்பல் ஆகும் அந்த சாம்பலானது மிகவும் புனிதத்தன்மை வாய்ந்ததாக வேதங்கள் வழி அறியலாம் . "முடியாண்ட மன்னரும் பிடி சாம்பல் ஆவர் " என்பதை கேட்டிருப்போம் .இதுவே வேதங்கள் உணர்த்தும் செய்தி.நமது இறுதி முற்றிலும் ஒரு சாம்பல் என்பதே இதன் அர்த்தம்.சிவ பெருமான் இந்த சாம்பளை புனிதமாக கருதினார்.
சிவ பெருமான் சுடுகாட்டு சாம்பலை தன் உடலில் பூசி இருப்பார் என்பதை அறியலாம் .அகோரிகழும் பிண்டங்களை எரித்த சாம்பலை உடலில் பூசி இருப்பர்.உயிர் சக்தியை சுமந்தஎந்த ஒரு உடழும் அதன் ஆன்மாவை துறந்ததும் அதன் முடிவு சாம்பல் ஆகும் அந்த சாம்பலானது மிகவும் புனிதத்தன்மை வாய்ந்ததாக வேதங்கள் வழி அறியலாம் . "முடியாண்ட மன்னரும் பிடி சாம்பல் ஆவர் " என்பதை கேட்டிருப்போம் .இதுவே வேதங்கள் உணர்த்தும் செய்தி.நமது இறுதி முற்றிலும் ஒரு சாம்பல் என்பதே இதன் அர்த்தம்.சிவ பெருமான் இந்த சாம்பளை புனிதமாக கருதினார்.
அகோரிகள் ஞானிகல் உடலில் முழுவதும் திருநீற்று சாம்பலை மட்டுமே பூசிவருவர். இது அவர்களின் யோக சக்திகளை அடைய மிகவும் உதவுகிறது.விபூதியை உடலில் உள்ள முக்கிய சக்கரங்களில் பூசிக்கொள்வர்.ஒவ்வொரு சக்கரத்தில் பூசும் பொழுதும் ஒவ்வொரு நாமத்தை கூறுவர்.விபூதி பூசும் அந்த இடத்தில் உள்ள சக்கரம் சுத்திகரிக்கப்படுகிறது. அந்த இடமும் மிகவும் மேன்மையடைந்து அணைத்து விதமான தூய பிரபஞ்ச சக்திகளையும் தன்னுள் ஈர்த்துக் கொள்ளும் தன்மையை பெற்றுவிடுகிறது. எதிர் வினை சக்திகளில் இருந்து நம்மை காக்கும் ஒரு கவசமாகவும் விளங்குகிறது.அக்னியின் தூய்மையை நமது உடலிலும் மனதிழும் விதைக்கிறது .
திருநீறு நெற்றியில் இடுவதால் ஏற்படும் பலன்கள் ஏராளம். நமது எண்ணங்களில் தூய்மையை நிறுத்தியும் , இந்திரியங்க ஆசைகளை அகற்றியும் உலகத்தோடு புரிதலையும் ஏற்படுத்துகிறது.திருநீறு தீய சக்திகளையும்,திருஷ்டி ,சூனியம் போன்றவற்றிலும் இருந்து விடுபடவைக்கிறது.அச்சத்திலும், பயத்திலும்,மனக்குழப்பத்தில் இருப்பவருக்கு திருநீறு மந்திரிம் ஓதி பூசுகையில் சட்டென்று அனைத்தையும் விலக்கிடும் .
இறைவனிற்கு திருநீறு அபிஷேகம் செய்தால் அணைத்து ஆசிகளையும் பெறலாம். தேவர்களுக்கு நடை பெரும் அணைத்து பூஜைகளிலும் பிரசாதமாக வழங்கப்படும் திருநீறை நெற்றியில் வைக்கும் பொழுது வலது கையில் வாங்கி வடக்கு நோக்கி நின்று மோதிர விரலால் தொட்டு சிவ நாமத்தை அல்லது அந்த சக்கரத்தின் இடத்தை பொறுத்து தேவர்களின் நாமத்தை கூறி நெற்றியில் இடவேண்டும்.
திருநீறால் நெற்றியில் மூன்று கோடுகள் இடுவதை சமஸ்க்ரிதத்தில் த்ரிபுந்த்ரா அதாவது மூன்று கோடுகள் என்று அர்த்தம் .ஒவ்வொரு கோடுகளும் இவற்றை குறிக்கின்றன என்பதை பார்ப்போம் .
இறைவன் :ப்ரம்மா
ஷக்தி :க்ரியா
அக்னி : வீட்டில் சமைக்க உதவும் அக்னி
சொல்/ஓசை :ஆ
லோகம்:பூலோகம்
குணம் :ராஜஸ குணம்
பிராணன் :உடலற்ற தூய எல்லையில்லாத ஆன்மா
வேதம் :ரிக் வேதம்
காலம்:அதிகாலை
இறைவன் :விஷ்ணு
ஷக்தி :ஈச்சா
அக்னி : தாக்ஷின் அக்னி (பித்ருக்களுக்கு மரணத்தின் போது சமர்ப்பிக்கப்படும் அக்னி பித்ருக்கள் இறந்தபின் தெற்கு திசையில் சென்றடைவதாக கூறப்படுகிறது . தெற்கு திசையில் உண்டாகும் யாக அக்னி தடைகளை தகர்த்தெறிகிறது .)
சொல்/ஓசை :உ
லோகம்: இடையில் உள்ள லோகம்
குணம் :சாத்வீக குணம்
பிராணன் :உடலுள் இருக்கும் ஆன்மா
வேதம் :யஜுர் வேதம்
காலம்:மாலை
இறைவன் :சிவன்
ஷக்தி : ஞான
அக்னி : ஹோமத்தில் எரியும் அக்னி
சொல்/ஓசை :ம்
லோகம்:சொர்க்கலோகம்
குணம் :தாமச குணம்
பிராணன் :பரமாத்மா
வேதம் : சாம வேதம்
காலம்:இரவு
திருநீறு வெறும் சாம்பல் தானே என்று எண்ணாதீர்கள் . விபூதி தினம் தோறும் பூசி வந்தால் நரம்புமண்டலங்கள் சரியாக இயக்கப்பெறும் ,சைனஸ் ,சளி, குளிர்
காய்ச்சல் ,மன குழப்பங்கள்,மன சோர்வுகள் ,கிரகங்களின் எதிர்வினை விசைகள்,அச்சம் அனைத்தும் தீரும் .
காய்ச்சல் ,மன குழப்பங்கள்,மன சோர்வுகள் ,கிரகங்களின் எதிர்வினை விசைகள்,அச்சம் அனைத்தும் தீரும் .
திருநீறு பூசுவதால் எதிர்வினை சக்திகளில் இருந்து விடுபடலாம்,சதா சிவத்தின் அருளும் வந்தடையும்.அக்னியில் இருந்து வெளிப்படும் இந்த விபூதி முறையான வேதங்கள் படித்தும் முறையான பொருட்களை பயன்படுத்தியும் ரிஷிகள் தயாரித்து வந்தனர் .இப்பொழுதும் இது போல் விபூதி தயாரிக்கும் முறை சிலப்பகுதிகளில் நடை முறையில் உள்ளது.சரியான விபூதியை வாங்கி பயன்படுத்துங்கள்.
நன்றி
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக