லோகங்கள் ,யுகங்கள், காலத்தை கணிக்கும் கணிதம் -Hindu Vedic Astronomical Knowledge









  லோகங்கள்(GALAXIES)

 வேதங்கள் படி லோகங்கள் பதினான்கு;           பூலோகம் ஏழாவது லோகமாகும் .



 
லோகங்கள் என்பது நம்முடைய சூரிய மண்டலத்தையம் தாண்டி உள்ள  லோகங்களையும் குறிக்கும் .

சூர்ய குடும்பத்தையும் சேர்த்து  மொத்தம்  பதினான்கு லோகங்கள் உள்ளதாக நமது புராணங்கள் விளக்குகின்றன.

 முதல் லோகமான  சத்ய லோகத்தில் ப்ரம்ம தேவர் இருக்கிறார் என்றும் இந்த லோகத்தை பிரம்மலோகம் என்றும் அழைப்பர் என்பர். 

இங்கிருந்தே பிரம்ம தேவர் அணைத்து உயிர்களையும்  படைக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.இந்த லோகத்தில் முற்றிலும் முக்தியடைந்த ஆன்மாக்கள் மட்டுமே வசிக்கின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



இங்கு வசிக்கும் ஆன்மாகளுக்கு  மீண்டு பிறப்பு இறப்பு என்பது இல்லை.

இதை தொடர்ந்து மற்ற லோகங்களும் இதன் கீலே உள்ளன. ப்ரம்மலோகத்தை தொடர்ந்துள்ள முதல் ஆறு லோகங்களை  புனிதமான லோகங்கள் என்பர்.புனிதமான இந்த ஏழு லோகங்களையும்  வ்யர்த்தி லோகங்கங்கள் என்று கூறப்படுகிறது.

முதலில் இருந்து துவங்கி ஏழாவது லோகம் வரை  தூய ஆன்மாக்கள் துவங்கி ,பிரம்மரின் புத்திரர்கள் பின் தேவர்கள் ,ரிஷிகள்  அனைவரும் இந்த 7 லோகங்களிழும்  வசிக்கிறார்கள்  என்றும்.

இந்த ஏழு லோகங்களில் வாழும் உயிர்களின் முக்திநிலை,அறியாமை,புனிதத்தன்மை,நல்லொழுக்கம் அனைத்தும் முதலில் இருந்து துவங்கி சற்று குறைந்தவாரே அமையப்பெற்றுள்ளது.

பூலோகம் ஏழாவது லோகமாகவும் மனிதர்கள் வசிக்கும் இடமாகவும் கூறப்படுகிறது.

இதன் கீழ் இருக்கும் மற்ற 7 லோகங்களும் பூலோகத்தை காட்டிலும் மிகவும் அறியாமை, தீமை நிறைந்த லோகங்களாகும். பூலோகத்தின் கீழ் இருக்கும் முதல் லோகத்தின் பெயர் அதல லோகம் என்று குறிப்பட்டுள்ளது.

பூமிக்கு கீலே உள்ள இந்த ஏழு லோகங்களை பாதாள லோகங்கள் என்பர் .இந்த 7 லோகங்களில் வசிப்பவர்கள்  மாயை உண்டாக்குபவர்கள் துவங்கி அசுரர்கள் ,தீய ஆன்மாக்கள் ,தீய குணம் உள்ளவர்கள் வசிக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இயற்கைக்கு எதிர்மாறான விஷயங்கள் நடைபெறகூடிய தலைகீழான சம்பவங்கள் நடை பெரும் தலா தலா லோகம்  இதனுள் அடங்கும்.

தங்கத்தால் நிறையப்பட்டு இருத்தல்,பொந்துகளில் நாகம் போல் வாழும் உயிர்கள், மாய சக்தியால் நிறைந்திருக்கும் லோகங்கள் இந்த ஏழு லோகங்களும்.

இதில் கடைசி லோகமான  பாதாள லோகத்தில் நாக இனத்தை சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள் என்றும் இவர்களை வாசுகி என்னும் சிவபெருமானின் கழுத்தில் உள்ள தெய்வ நாகம் ஆச்சி செய்து வருகிறது என்றும் அங்குள்ள நாகங்கள் தங்களை ஆபரணங்களில்  அலங்கரித்து இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

லோகங்களை பற்றி கீதையில் கூறப்பட்டுள்ளது.படைத்தல் என்பது உயிர்களை  மட்டுமல்ல மூவுலகங்களான பூலோகம் ,புவர்லோகம்-(சொர்கலோகம்)  ,பாதாள லோகம்இவை மூன்றும்  படைக்கப்பட்டு மீண்டும் அளிக்கப்படுகின்றன.



யுகங்கள் (TIME,LIGHT YEARS,AGE OF EARTH)

யுகங்கள் என்பது இந்துக்களின் காலத்தை கணிக்கும் முறை யாகும் . பிரம்ம தேவரே படைப்பின் பொறுப்புகளைக் கொண்டுள்ளார் இவரது ஆயுல் நூறை எட்டும்  வரை இவர் படைத்தல் வேலையை செய்துகொன்டே இருப்பார்.தற்போது இவருடைய வயது 50 ஆகும்.

ப்ரம்ம தேவருடைய மொத்த வயது 
(311.04 trillion human years)- (31104000crore )இதை  பொறுத்தே அனைத்தும் உயிர்பெறுகின்றன .

ப்ரம்மதேவருக்கும் வருடத்திற்கு 360 நாட்கள் உள்ளன .
 இவருடைய ஒரு நாள்  என்பது  ஒரு  கல்பம் ஆகும்.
 ஒருநாளுக்கு இரு பொழுதுகள் உள்ளன பகல் ஒரு பொழுது ,இரவு ஒரு பொழுது .
இவருடைய நேரம் என்பது வருடங்களின் கணக்கு.
பகல் பொழுதுஎன்பது4,32,00,00,000 வருடங்கள்,
 இரவுப்பொழுது 4,32,00,00,000வருடங்கள். 

மொத்தம் ஒரு முழு நாள் அதாவது இரு கல்பத்தில் 

(4,32,00,00,000 *2=8,640,000,000)

8,640,000,000 வருடங்கள் உள்ளன.

பிரம்ம  தேவர் பகல் பொழுதில் உயிர்களை படைக்க துவங்குகிறார் . இரவில் பிரளயம் உண்டாகி மூன்று லோகத்தில் (பூலோகம் ,பாதாள லோகம் ,சொர்க்க லோகம்)உள்ள அனைத்தும் அழிக்கப்படுகின்றன.


நான்கு யுகங்கள் உள்ளன 

ஒவொரு யுகங்களிலும் படைக்கப்பட்ட மனிதர்களின் ஆயுள் காலம் வேறுபடும் ,அவர்களின் தோற்றம் வேறுபாடும் ,பண்பு ,அறிவு வளர்ச்சி வேறுபாடும் .முதல் யுகமான சத்யா யுகத்தில் அறிவிலும் ,பண்பிலும்,ஆயுள், தோற்றம்,உயரம்  அனைத்திலும் சிறந்து விளங்குவர் .மற்ற யூகங்கள் வர இது குறைந்து காணப்படும் .சத்யா யுகத்தில் குல்லமான மனிதர்கள் இருந்தனர் .சத்யா யுகம் உண்மை,தூய்மை,பண்பாட்டு,அறிவு,அழகு ,அதிக ஆயுள் நாட்கள் அனைத்தையும் பெற்றிருந்தது.

சத்யா  யுகம்17,28,000 வருடங்கள்

த்ரேதா யுகம்  -12,96,000 வருடங்கள்

த்வாபரா யுகம்-  864,000 வருடங்கள்

கலி யுகம் -  4,32,000 வருடங்கள்


இந்த நான்கு யுகங்கள் சேர்ந்தது ஒரு மகாயூகம் எனப்படும்  .இரண்டு மகா யுகங்கள் சேர்ந்தது ஒரு கல்பமாகும் .ஆயிரம் மஹாயுகங்கள்  ப்ரம்மாவின் ஒரு நாள் .(1000*4320000)வருடங்கள்.


பூலோகம் மூன்று யுகங்களான சத்யா ,த்ரேதா, த்வத்பரா யுகங்களை சந்தித்து வந்துவிட்டது. இருப்பினும் கலியுகம் தற்போது நடைபெறுகிறது இது முடிந்து மீண்டும் சத்யா யுகம் தொடரும். 


 ஒரு மன்வந்திரம் என்பது 71 சதுர்யுகங்கள் .ஒரு சதுர்யுகம் என்பது இந்த நான்கு யுகங்களின் மொத்த வருடங்கள் . 14 மன்வந்திரங்கள் ஒரு கல்பமாகும் .

நன்றி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"

சிவனின் நந்தி தேவர் - LORD SHIVAS NANDI , THE STORY BEHIND NANDI