திருஷ்டி ஒரு பார்வை - CASTING OF THE EVIL EYE A SCIENTIFIC APPROACH


         


திருஷ்டி என்றால் என்ன ? 

             திருஷ்டி என்பது சமஸ்க்ரிதத்தில்  பார்வை அல்லது தீய கண் பார்வை என்று கூறப்படுகிறது.அதாவது தீய எண்ணங்களான பொறாமை,வெறுப்பு  போன்ற எண்ணங்களுடன் பிறர்  நம்மிடம் பழகுவது. 

எண்ணங்கள் என்பது நமது மனதில் இடைவிடாது தோன்றிக்கொண்டிருக்கும் குமிழ்கள் என்று நமது ஆன்மீக சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

அதே சமயம் ,நம்மை சுற்றி  என்றும் ஒரு ஷக்திவட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு இருக்கும் ஷக்திவட்டம் வலுமை இழக்கும் பொழுது பிறருடைய வலிமையான பார்வை  அதாவது அவர்களின் மனதில் எளும் ஷக்தி வாய்ந்த எண்ண அலைகள் நம்மை சென்றடையும் பொழுது நம்முள் வலுவிழந்த  மனதில் குழப்பத்தை உண்டாக்குகிறது எனலாம். 



  தீய ஷக்தி என்பது நான் இங்கே இறந்துபோன இறந்த ஆன்மாக்களை மட்டும் 
கூறவில்லை . ஆன்மாக்கள் பற்றிய நம்பிக்கை
 மானுடனாய்  இருக்கும் அணைத்து நாகரிகம் அறிந்த அறியாதவர்கள் என்று சிலராற் கூறப்படுபவர்களுக்கும் மனிதர்களுக்கும் பாரம்பரியமாக பகிர்ந்து வந்த செய்தியாகும்.

நமக்கு அன்றாடம் ஏற்படும் மன 
உளைச்சல் ,தலைவலி  போன்ற உணர்வுகள் மற்றும் புதியன ஏதேனும் செய்தல் செய்வதில் அனைத்திலுமே தோல்வி  போன்ற உணர்வுகள்   பிறருடைய கண் பார்வையால் அதாவது நம்மை முழுவதுமாக ஆக்ரமித்து நமது செயல்களை முடக்கிவிட்டன.


 இவற்றை சரி செய்ய பல வழிமுறைகளான பரிகாரங்கள், அதாவது உண்டாகும் எதிர் சக்திக்கு ஈடாக நம்மை சுற்றி உள்ள ஷக்தி வட்டத்தின்  சக்தியை பெருகிக்கொள்வது சாத்வீக சக்தியை அதிகமாக ஈர்த்துக்கொள்ளும் பொருட்களை பயன்படுத்தினர்.


நாம் கடந்து வந்த பரிகாரங்களில் திருஷ்டி பரிகாரங்கள் மிகவும் எளிமையாக உள்ளன.அவற்றை கண்டுபிடித்து இன்றுவரை பாரம் பிரியமாக நாம் செய்து வருகிறோம் .


இது போன்ற தீய எதிர்மறை சக்திகளை விலக்கிவைக்கும் பழக்கங்கள் 

மற்ற மேலை  நாடுகளிலும் ஒருகாலத்தில் துவங்கி இன்றும் பின்பற்றி வருகின்றன  ,மற்ற மாநிலங்களிலும் இது போன்ற பழக்கவழக்கங்கள் பாரம்பரியமாக பின்பற்றபட்டது .இருப்பினும் இந்துக்களின் முக்கியத்த்துவமாக கோள்களே 
கருதப்பட்டன. ஆனால் இந்துக்கள்  அதிகம் கோள்கள்   மனித உடல் மேல் கொண்டுள்ள ஆதிக்கத்தை அறிந்து , அவற்றை சரி செய்ய பூலோகத்தில் சரியான இடங்களை கோவில்களை அமைத்து வழிபட்டுவார்க்கின்றனர்.


       

           நம் வீட்டில் மிகவும் கோபத்துடனும் அல்லது  மன வருத்தத்துடனும் இருக்கும் பொழுது. உதவும் தாந்த்ரீக முறைகளான   எளிமையான திருஷ்டி முறைகள் பின்பற்றப்பட்டு அவர்களின் மன சோர்வை  குணம்படுத்தினர்.


    உதாரணமாக நமது வீட்டில் உள்ளவர்கள் செய்வதுபோல் 
கைகளில் காய்ந்த மிளகாயுடன், கல் உப்பை  எடுத்து கொண்டு பாதிக்கப்பட்ட நபரை  தரையில் அமரவைத்து தலையை உரிய மந்திரத்தை கூறி  வலதுபுறமும் இடதுபுறமும் மூன்று முறை நமது வலது கைகயால்  சுற்றுகையில், உங்கள்  கைகளால் சுற்றி அலை எழுப்பும் வட்டத்திற்குள்  அவர்களது தலையின் உச்சியில் ஆகர்ஷண ஷக்தி  என்னும் ஆகாய ஷக்தி நடுவே தலையின் உச்சியில் இறங்கி உடல் முழுதும் பரவி மன அழுத்தத்தை குறைப்பதுடன் கோபம், மனசோர்வு,உடல் வலி,தூக்கமின்மை, ராஜஸ குணம் ,தாமச குணம் போன்றவை குறைகிறது.இது முடிந்தவுடன் அந்த மிளகாயின் மீது பாதிக்கப்பட்டவர் மூன்றுமுறை துப்பியவாறு சுற்றிப்போடுபவர் எரியும் நெருப்பில் போட்டு விடுவதும் அதை அந்த பாதிக்கப்பட்டவர் பார்க்காமல் வருவதும்  வழக்கம்.


              எலும்பிச்சையை ,பச்சை மிளகாயுடன் கோர்த்து வீட்டின் முன் தொங்கவிடுவது பூச்சிகளை விரட்டுவதற்கு அல்ல .சில கனிகளுக்கு சில உயிர்களுக்கும் ஆகர்ஷண சக்தியை உறிஞ்சும் திறன் உள்ளது அவற்றுள் எலும்பிச்சை சிறந்தது என்று நம்பப்பட்டது .எலும்பிச்சை பழம் துர்க்கை அம்மனுக்கு சமர்ப்பிக்கபடுவது உண்டு.குறிப்பாக எலும்பிச்சை பழம் மற்றும் வேப்பம் இலைகள் இவற்றை அம்மனுக்கு பூஜைகளில் சமர்ப்பிக்கப்படும் முக்கியமான பொருட்களாக கருதப்படுகின்றன.


 வேப்ப மரம்   நீமாரி தேவி எனப்படும் காளிதேவியின் அவதாரமாகும் . வெப்பமரத்திற்கு விளக்கு வைத்து வழிபடுவது சிறந்தது.

காளி தேவி  சிவ பெருமானின் ஜடாமுடியில் இருந்து தோன்றியவர்.சக்தியும் சிவனும் சேர்ந்தே நிலைத்தன்மை என்பதற்கிணங்க ஷக்தி தேவி காளி அவதாரம் எடுப்பதும் உண்டு.

காளிதேவிக்கு மஞ்சள் மற்றும் வேப்பிலை உகுந்த பொருட்களாகும்.சரியாக சாப்பிடாத குழந்தைகள் அல்லது நான்றாக சாப்பிட்டு வந்த குழந்தைகள் திடிரென்று சாப்பிட மறுத்தால்.வெப்ப இலைகளை அவர்கள் சாப்பிட பயன் படுத்தும் பாத்திரத்தில் சிறிது மஞ்சள் கலந்த நீரோடு போட்டு பிள்ளைகளுக்கு ஆரத்தி எடுத்து வாசலில் ஊற்றிவிடுவது ஒரு திமுறையாகும்.இவ்வாறு செய்வதால் அவர்களின் மீது இருந்த த்ரிஷ்டி விழகிவிடுகிறது.



படிகாரத்தில் கருப்பு  திருஷ்டி கயிறை கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடுவது  நெகடிவ் அலைகள் வீட்டினுள் செல்லாமல் அவை பாசிட்டிவாக மாற்றப்படுகிறது .
இதை தீய ஷக்த்தி விரட்டுவதற்கு என்றும் கூறலாம். 


சில சமயங்களில் எலும்பிச்சையை அறுத்து குங்குமம் தடவியும் வாசலில் வைப்பர் .ஆனால் வீட்டில் எலும்மிச்சம் பழத்தில் விளக்கு வைக்க கூடாது .அவ்வாறு குங்குமம் பூசி திருஷ்டிக்கு வைக்கப்பட்ட அந்த எலும்பிச்சையை  குறிப்பிட்ட  நாள் கழிந்து தூக்கி எரிந்துடவேண்டும்.
இவ்வாறு இந்த எலும்பிச்சையை அறுக்கும் முறையும் பலி எனப்பட்டது .

 குங்குமத்தை கரைத்து ஆர்த்தி எடுத்து வாசலில் ஊற்றி கற்பூரம் அந்த இடத்தில்

 இடுவது .பூசணிக்காயை உடைப்பது (பலிகொடுப்பது ).போன்றவற்றை நமக்கு ஏற்படும் மன பாதிப்புகள், பிற அலைள் நம் உடலில் இருந்து நீங்குவதாகவும் கருதப்படுகிறது .இவற்றை செய்தவுடன் மனதில் சிறிதாவது இறுக்கத்தில் இருந்து விடுபட்ட உணர்வு ஏற்படும் .

            

             தேங்காயை உடைப்பதற்கு இதுவும் ஒரு காரணமே .தேங்காய்  உடைத்தால் நம் மீது பட்டிருக்கும் அணைத்து தீய சக்திகளும்,த்ரிஷ்டிகளும்  தேங்காயுடன் சேர்த்து பலி யிடுவதாக கருதப்பட்டது .

தீய சக்திகளை விலக்கிவிடும் பொருட்களாக நம்பப்பட்ட பொருட்கள் :


காய்ந்த சிவப்பு மிளகாய் ,உப்பு ,எலும்பிச்சை, தேங்காய் ,பூசணிக்காய் ,கடுகு ,வெல்லம், கரிக்கட்டை ,படிகாரம் ,பச்சைமிளகாய் ,பச்சை கற்பூரம் ,மஞ்சள் ,வேப்பிலை ,குங்குமம் ,பித்தளை செம்பு ,கொள்ளிக்கட்டை ,புளி ,எள்ளு ,பச்சரிசி, கற்றாழை ,கருப்பு ,மஞ்சள் மற்றும் சிவப்பு நிற துணி, இரும்பு தாயத்து ,இரும்பு மோதிரம் ,கருப்பு மற்றும் சிவப்பு கையிர் .






நன்றி 





































கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"

சிவனின் நந்தி தேவர் - LORD SHIVAS NANDI , THE STORY BEHIND NANDI