விஷ்ணு தேவரின் மச்ச அவதாரம்-THE FISH AVATAR THAT SAVED A FEW DURING THE DESTRUCTION OF EARTH FOR A NEW BEGINING


↠சத்யா  யுகம் 
↠திரேதாயுகம் 
↠த்வபரா யுகம் 
↠கலியுகம் 

உலகத்தில் பொய்,பொறாமை,போன்ற தீமை நிறைந்த யுகம் தான் கலியுகம் .நாம் தற்போது வாழ்ந்து வருவது இந்த  யுகத்தில் தான்.இந்த யுகம் முடியும் தருணத்தை நெருங்கிகொண்டேய இருக்கிறது .கலியுகத்தின் முடிவில்  ப்ரளையம் உண்டாகி  அனைத்து உயிர்களும் பூலோகத்திலும்,சுவேர்க்கத்திலும்,புவர்லோகத்திலும் அளிக்கப்படுகின்றன.அளித்தலே படைத்தலின் துவக்கம்.நமது உடல் மட்டுமே அழியப்படுகிறது.நமது  ஆன்மாக்கள் தூய்மைகொண்டதாக இருப்பின் இறைவனை 
சேரும் .அல்லது கடும் தண்டனைகளை  நரகத்தில் அனுபவித்து அளிக்கப்படும் .

மீண்டும் சத்யா யுகம் சென்று கலியுகம் வரை இந்த மனிதர்கள் பயணிப்பார்கள்.இது நடந்துகொண்டேய இருக்கும் இந்த படைத்தல் அளித்தல் பயணத்தில் இறைவனை எண்ணி உணர்ந்தவர்களது ஆன்மாக்கள் மட்டும்  முக்தி அடைகின்றன.இருப்பினும் இறைவனது வேலை படைத்தல் அளித்தல் மட்டுமல்ல காத்தலும் தான் சில  புராணங்களின்  படி விஷ்ணுதேவரின் சில அவதாரங்கள் இந்த உலகத்தில் இருந்துகொண்டு தான் இருக்கிறார். 

கலியுகத்தின் முடிவில்  ப்ரளையம் உண்டாகி  தீமைநிறைந்தவர்கள் அளிக்கப்பட்டு விஷ்ணுதேவர் அவதரித்து நல்ல மனிதர்களை காப்பாற்றி விடுகிறார்.
அவர்கள் மட்டுமே சத்யா யுகமான தூய்மை நிறைந்த  மனிதர்களோடு இணைந்து தூய்மையானது ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது .

hello! if you enjoy reading our blog or finding the contents useful please go below and comment your views as well as type your email on the left column and subscribe for news letters.

-all articles by admin ssg


THE ANCIENT STONE WITH CARVING OF THIS AVATAR IS STILL ON BRITISH MUSEUM - SEARCH WIKIPEDIA THE MACCHA  AVATAR OF LORD VISHNU

முன்னுரை 
உலகில் அதர்மம் தலை விரிக்கும் பொழுதெல்லாம் பிரளயம் உண்டாகி அணைத்து உயிர்களும் அழிக்கப்படுகின்றன புனிதமான  வேதங்களின் கூற்றுப்படி,குற்றமற்ற , ஒழுக்க நெறியில் நிற்கும் உயிர்கள் மட்டும் காக்கப்படுகின்றன என்பதை இங்கே அறியலாம் .  

குறிப்பு

விஸ்ணு தேவரின் இந்தஅவதாரத்தை பற்றி
மஹாபாரதம்(வண்ண பார்வா) ,பாகவத புராணம் ,யஜுர்வேதம் (சதபத ப்ரஹமான) போன்ற மிக தொன்மைவாய்ந்த நூல்களில் கூறப்பட்டுள்ளது .
தொன்மைவாய்ந்த கலை சிற்பங்களும் சாட்சிகளாக வெளிநாடுகளிலும் சில இந்தியவில் உள்ள கோவில்களின் தூண்களிலும் உள்ளது . 




1)மத்யச /மச்ச அவதாரம்


                      உலகின் முதல் மனிதனாக கருதப்படும் மண்ணு என்பவனை பிரளயத்தில்  இருந்த காப்பாற்ற விஷ்ணு தேவர் எடுக்கும் முதல் அவதாரம் இந்த மச்ச அவதாரம் .


              தன்னை ஒரு மீனாக மாற்றிக்கொண்டு மண்ணுவை மற்றும் சப்தரிஷிகளையும் வாசுகி என்னும் நல்ல பாம்பின் இனத்தையும்   படகுடன் ஒரு பாதுகாப்பான நிலத்தில் சேர்த்திவிடுகிறார் .அங்கே அவர் மற்ற உயிர்களான விலங்குகள் ,பறவைகள் அனைத்தையும் பெரும் பிரளயத்தில் இருந்து காப்பாற்றி சேர்து விடுகிறார் .


ஏன் பிரளயம் வந்தது ?

               சத்யா யுகம் என்பது 'கோல்டன் ஏஜ் 'என்று  கருதப்படும் காலம் .அந்த யுகத்தில்  வாழ்ந்த மக்கள் அனைவரும் மிகவும் தூய்மையானவர்களாகவும் ,பொய் ,பொறாமை தீமை போன்றவற்றை அறியாதவர்களாகவும் ,அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்த யுகம் .இந்த யுகம் 1,782,000 வருடங்கள் நீடித்தவை. உலகில் திடீரெனெ எங்கும் தீமை ஊடுருவிவிட்டது.அந்த தீமை நிறைந்த கலியுகத்தில் தீமை நிறைந்த மக்கள் அதிகரித்தனர்.

          அப்பொழுது ப்ரம்மர் வேதங்களை மானிடர்களுக்கு அளித்து அதன் படி வாழவைப்பதற்ற்க்காக வேதங்களை உருவாக்கினார் அதில் அழிவில்லாமல் வாழ்வதற்கான யுக்திகள், இறைவனை அடையும் வழிகள் , போன்றவை இடம்பெற்றிருந்தன  .அதை ஹயக்ரீவன் என்னும் அசுரன் ப்ரஹ்மரின் மூக்கின் வழியாக தோன்றி அதை திருடிவிடுகிறான் .
   
                  உலகில் உள்ள தீமைகளை அளிப்பதற்கு விஷ்ணு இங்கே ஒரு மிக  பெரிய பிரளயத்தை உருவாக்கினார் .அந்த பிரளயத்தில் தீமை செய்தவர்கள் உண்மையற்றவர்கள் அனைவரும்அழிந்து போனார்கள் .

மண்ணு என்பவன் விஷ்ணுவின் மீது தீராத பக்தி கொண்டவன் .

                    அவன் என்றும்  தூய்மைமிக்கவனாக இருப்பதை  அறிந்த விஷ்ணு தேவர், மண்ணுவை  மட்டும் இந்த உலகத்தில் வரும் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாகவும் வழிகாட்டியாகவும் விளங்குவதற்கு அவனை காப்பாற்ற நினைத்தார் .அவர் மண்ணு வையும் அவருடன் சில ரிஷிகளையும் வாசுகி என்னும் பாம்பின் உதவியால் காப்பாற்றி இமயத்தில் விட்டதாகவும் இதில் கூறப்பட்டுள்ளது . 

           இமாலய மலையே உலகில் முக்தி யடைவதற்கான இடமாகவும் வாழ்விற்கும் மோக்ஷத்திற்கும் நடுவில் இருக்கும்  பாலமாகவும் கருதுகின்றனர் .
              பின் விஷ்ணு தேவர் ஹயக்ரீவ அவதாரம் எடுத்து ஹயக்ரீவ அசுரனை  வதம் செய்து விட்டார் வேதங்களையும் மீட்டுவிட்டார் .


if you like reading my posts pls do leave a comment below,
thanks for reading

நன்றி 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள்-THE POWERFUL VEDA MANTRAS

ஆதிசக்தியின் சதி அவதாரம் - THE AVATAR OF GODDESS SHAKTHI KNOWN AS "SATI"

சிவனின் நந்தி தேவர் - LORD SHIVAS NANDI , THE STORY BEHIND NANDI